ការបកប្រែអត្ថន័យគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិល - អូម៉ើរ ស្ហើរុីហ្វ

លេខ​ទំព័រ:close

external-link copy
31 : 35

وَالَّذِیْۤ اَوْحَیْنَاۤ اِلَیْكَ مِنَ الْكِتٰبِ هُوَ الْحَقُّ مُصَدِّقًا لِّمَا بَیْنَ یَدَیْهِ ؕ— اِنَّ اللّٰهَ بِعِبَادِهٖ لَخَبِیْرٌ بَصِیْرٌ ۟

உமக்கு நாம் வஹ்யி அறிவித்த இந்த வேதம்தான் சத்தியமானதும் தனக்கு முன்னுள்ள வேதங்களை உண்மைப்படுத்தக்கூடியதும் ஆகும். நிச்சயமாக அல்லாஹ் தனது அடியார்களை ஆழ்ந்தறிபவன், உற்று நோக்குபவன் ஆவான். info
التفاسير:

external-link copy
32 : 35

ثُمَّ اَوْرَثْنَا الْكِتٰبَ الَّذِیْنَ اصْطَفَیْنَا مِنْ عِبَادِنَا ۚ— فَمِنْهُمْ ظَالِمٌ لِّنَفْسِهٖ ۚ— وَمِنْهُمْ مُّقْتَصِدٌ ۚ— وَمِنْهُمْ سَابِقٌ بِالْخَیْرٰتِ بِاِذْنِ اللّٰهِ ؕ— ذٰلِكَ هُوَ الْفَضْلُ الْكَبِیْرُ ۟ؕ

பிறகு, இந்த வேதத்தை நமது அடியார்களில் நாம் தேர்ந்தெடுத்தவர்களுக்கு (கற்பித்து) கொடுத்தோம். அவர்களில் தனக்குத் தானே தீமை செய்தவரும் இருக்கிறார். அவர்களில் (அமல்களில்) நடுநிலையானவரும் இருக்கிறார். இன்னும், அவர்களில் அல்லாஹ்வின் அனுமதிப்படி நன்மைகளில் முந்தி செல்பவரும் இருக்கிறார். இதுதான் மாபெரும் சிறப்பாகும். info
التفاسير:

external-link copy
33 : 35

جَنّٰتُ عَدْنٍ یَّدْخُلُوْنَهَا یُحَلَّوْنَ فِیْهَا مِنْ اَسَاوِرَ مِنْ ذَهَبٍ وَّلُؤْلُؤًا ۚ— وَلِبَاسُهُمْ فِیْهَا حَرِیْرٌ ۟

(அவர்கள் பெறப்போகும் சிறப்பு) “அத்ன்” சொர்க்கங்கள் ஆகும். அவர்கள் அவற்றில் நுழைவார்கள்; அவற்றில் தங்கத்தினாலான காப்புகளும் (-வளையல்களும்) முத்து (ஆபரணங்களு)ம் அவர்கள் அணிவிக்கப்படுவார்கள். இன்னும், அவர்களின் ஆடைகள் அவற்றில் பட்டுத் துணியாகும். info
التفاسير:

external-link copy
34 : 35

وَقَالُوا الْحَمْدُ لِلّٰهِ الَّذِیْۤ اَذْهَبَ عَنَّا الْحَزَنَ ؕ— اِنَّ رَبَّنَا لَغَفُوْرٌ شَكُوْرُ ۟ۙ

அவர்கள் கூறுவார்கள்: எங்களை விட்டு கவலையைப் போக்கிய அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும். நிச்சயமாக எங்கள் இறைவன் மகா மன்னிப்பாளன், நன்றியுடையவன் ஆவான். info
التفاسير:

external-link copy
35 : 35

١لَّذِیْۤ اَحَلَّنَا دَارَ الْمُقَامَةِ مِنْ فَضْلِهٖ ۚ— لَا یَمَسُّنَا فِیْهَا نَصَبٌ وَّلَا یَمَسُّنَا فِیْهَا لُغُوْبٌ ۟

அவன் தனது அருளினால் எங்களை நிரந்தர (இன்பங்கள் நிறைந்த) இல்ல(மான சொர்க்க)த்தில் தங்க வைத்தான். அதில் எங்களுக்கு சோர்வும் ஏற்படாது. அதில் எங்களுக்கு களைப்பும் ஏற்படாது. info
التفاسير:

external-link copy
36 : 35

وَالَّذِیْنَ كَفَرُوْا لَهُمْ نَارُ جَهَنَّمَ ۚ— لَا یُقْضٰی عَلَیْهِمْ فَیَمُوْتُوْا وَلَا یُخَفَّفُ عَنْهُمْ مِّنْ عَذَابِهَا ؕ— كَذٰلِكَ نَجْزِیْ كُلَّ كَفُوْرٍ ۟ۚ

எவர்கள் நிராகரித்தார்களோ அவர்களுக்கு நரக நெருப்புதான் உண்டு. அவர்களுக்கு (மரணம் நிகழும் என) தீர்ப்பளிக்கப்படாது. அவர்களுக்கு மரணம் இருந்தால்தானே அவர்கள் மரணிப்பதற்கு. இன்னும், அதன் தண்டனை அவர்களை விட்டும் லேசாக்கப்படாது. இப்படித்தான் எல்லா நிராகரிப்பாளர்களுக்கும் நாம் கூலிகொடுப்போம். info
التفاسير:

external-link copy
37 : 35

وَهُمْ یَصْطَرِخُوْنَ فِیْهَا ۚ— رَبَّنَاۤ اَخْرِجْنَا نَعْمَلْ صَالِحًا غَیْرَ الَّذِیْ كُنَّا نَعْمَلُ ؕ— اَوَلَمْ نُعَمِّرْكُمْ مَّا یَتَذَكَّرُ فِیْهِ مَنْ تَذَكَّرَ وَجَآءَكُمُ النَّذِیْرُ ؕ— فَذُوْقُوْا فَمَا لِلظّٰلِمِیْنَ مِنْ نَّصِیْرٍ ۟۠

இன்னும், “எங்கள் இறைவா எங்களை வெளியேற்று! நாங்கள் செய்து கொண்டிருந்தது அல்லாமல் வேறு நல்ல அமல்களை செய்வோம்” என்று அவர்கள் அ(ந்த நரகத்)தில் கதறுவார்கள். “அறிவுரை பெறுபவர் அறிவுரை பெறுகின்ற காலம் வரை நாம் உங்களுக்கு (உலகத்தில்) வாழ்க்கையளிக்கவில்லையா? இன்னும், உங்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவர் வந்தார் அல்லவா? ஆகவே, (இந்த தண்டனையை) சுவையுங்கள்! அநியாயக்காரர்களுக்கு உதவியாளர் எவரும் இல்லை” (என்று அவர்களுக்கு பதில் கூறப்படும்). info
التفاسير:

external-link copy
38 : 35

اِنَّ اللّٰهَ عٰلِمُ غَیْبِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ— اِنَّهٗ عَلِیْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ ۟

நிச்சயமாக அல்லாஹ் வானங்கள் மற்றும் பூமியில் உள்ள மறைவானவற்றை நன்கறிந்தவன் ஆவான். நிச்சயமாக அவன் நெஞ்சங்களில் உள்ளவற்றை நன்கறிந்தவன் ஆவான். info
التفاسير: