ការបកប្រែអត្ថន័យគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិល - អូម៉ើរ ស្ហើរុីហ្វ

លេខ​ទំព័រ:close

external-link copy
23 : 33

مِنَ الْمُؤْمِنِیْنَ رِجَالٌ صَدَقُوْا مَا عَاهَدُوا اللّٰهَ عَلَیْهِ ۚ— فَمِنْهُمْ مَّنْ قَضٰی نَحْبَهٗ وَمِنْهُمْ مَّنْ یَّنْتَظِرُ ۖؗ— وَمَا بَدَّلُوْا تَبْدِیْلًا ۟ۙ

அல்லாஹ்விடம் எதை ஒப்பந்தம் செய்தார்களோ அதை உண்மைப்படுத்திய ஆண்களும் நம்பிக்கையாளர்களில் இருக்கிறார்கள். (வீர மரணம் அடைய வேண்டும் என்ற) தனது நேர்ச்சையை நிறைவேற்றியவரும் அவர்களில் உண்டு. (வீர மரணத்தை) எதிர்பார்த்து இருப்பவரும் அவர்களில் உண்டு. அவர்கள் (தங்கள் ஒப்பந்தத்தை) மாற்றிவிடவில்லை. info
التفاسير:

external-link copy
24 : 33

لِّیَجْزِیَ اللّٰهُ الصّٰدِقِیْنَ بِصِدْقِهِمْ وَیُعَذِّبَ الْمُنٰفِقِیْنَ اِنْ شَآءَ اَوْ یَتُوْبَ عَلَیْهِمْ ؕ— اِنَّ اللّٰهَ كَانَ غَفُوْرًا رَّحِیْمًا ۟ۚ

இறுதியாக, அல்லாஹ் உண்மையாளர்களுக்கு அவர்களின் உண்மைக்கு நற்கூலி தருவான். இன்னும், நயவஞ்சகர்களை அவன் நாடினால் தண்டிப்பான். அல்லது, அவர்கள் திருந்தும்படி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளனாக, மகா கருணையாளனாக இருக்கிறான். info
التفاسير:

external-link copy
25 : 33

وَرَدَّ اللّٰهُ الَّذِیْنَ كَفَرُوْا بِغَیْظِهِمْ لَمْ یَنَالُوْا خَیْرًا ؕ— وَكَفَی اللّٰهُ الْمُؤْمِنِیْنَ الْقِتَالَ ؕ— وَكَانَ اللّٰهُ قَوِیًّا عَزِیْزًا ۟ۚ

இன்னும், நிராகரிப்பாளர்களை அவர்களது கோபத்துடன் அல்லாஹ் திருப்பி விட்டான். அவர்கள் (இந்தப் போரினால்) எந்த நன்மையையும் அடையவில்லை. இன்னும், (நம்பிக்கையாளர்கள் கடுமையாக) சண்டை செய்(து அதிகமான இழப்புகள் அவர்களுக்கு ஏற்படு)வதை விட்டும் நம்பிக்கையாளர்களை அல்லாஹ் பாதுகாத்தான். அல்லாஹ் மகா வலிமைமிக்கவனாக, மிகைத்தவனாக இருக்கிறான். info
التفاسير:

external-link copy
26 : 33

وَاَنْزَلَ الَّذِیْنَ ظَاهَرُوْهُمْ مِّنْ اَهْلِ الْكِتٰبِ مِنْ صَیَاصِیْهِمْ وَقَذَفَ فِیْ قُلُوْبِهِمُ الرُّعْبَ فَرِیْقًا تَقْتُلُوْنَ وَتَاْسِرُوْنَ فَرِیْقًا ۟ۚ

இன்னும், வேதக்காரர்களில் இருந்து அவர்களுக்கு (-நிராகரிப்பாளர்களுக்கு) உதவியவர்களை அவர்களின் கோட்டைகளில் இருந்து அல்லாஹ் இறக்கினான். இன்னும், அவர்களின் உள்ளங்களில் திகிலை போட்டான். (அவர்களில்) ஒரு பிரிவினரை நீங்கள் கொன்றீர்கள். இன்னும், ஒரு பிரிவினரை சிறைப் பிடித்தீர்கள். info
التفاسير:

external-link copy
27 : 33

وَاَوْرَثَكُمْ اَرْضَهُمْ وَدِیَارَهُمْ وَاَمْوَالَهُمْ وَاَرْضًا لَّمْ تَطَـُٔوْهَا ؕ— وَكَانَ اللّٰهُ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرًا ۟۠

இன்னும், அவர்களின் பூமியையும் அவர்களின் இல்லங்களையும் அவர்களின் செல்வங்களையும் நீங்கள் (உங்கள் பாதங்களால்) மிதிக்காத ஒரு பூமியையும் (அல்லாஹ்) உங்களுக்கு சொந்தமாக்கி கொடுத்தான். அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கிறான். info
التفاسير:

external-link copy
28 : 33

یٰۤاَیُّهَا النَّبِیُّ قُلْ لِّاَزْوَاجِكَ اِنْ كُنْتُنَّ تُرِدْنَ الْحَیٰوةَ الدُّنْیَا وَزِیْنَتَهَا فَتَعَالَیْنَ اُمَتِّعْكُنَّ وَاُسَرِّحْكُنَّ سَرَاحًا جَمِیْلًا ۟

நபியே! உமது மனைவிகளுக்கு சொல்வீராக! “உலக வாழ்க்கையையும் அதன் அலங்காரத்தையும் நீங்கள் விரும்புகிறவர்களாக இருந்தால் வாருங்கள்! உங்களுக்கு செல்வம் தருகின்றேன்; அழகிய முறையில் உங்களை விட்டு விடுகின்றேன்.” info
التفاسير:

external-link copy
29 : 33

وَاِنْ كُنْتُنَّ تُرِدْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗ وَالدَّارَ الْاٰخِرَةَ فَاِنَّ اللّٰهَ اَعَدَّ لِلْمُحْسِنٰتِ مِنْكُنَّ اَجْرًا عَظِیْمًا ۟

நீங்கள் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் (சொர்க்கமாகிய) மறுமை வீட்டையும் விரும்பக் கூடியவர்களாக இருந்தால் நிச்சயமாக அல்லாஹ் நல்லவர்களாகிய உங்களுக்கு மகத்தான கூலியை தயார்படுத்தி வைத்திருக்கிறான். info
التفاسير:

external-link copy
30 : 33

یٰنِسَآءَ النَّبِیِّ مَنْ یَّاْتِ مِنْكُنَّ بِفَاحِشَةٍ مُّبَیِّنَةٍ یُّضٰعَفْ لَهَا الْعَذَابُ ضِعْفَیْنِ ؕ— وَكَانَ ذٰلِكَ عَلَی اللّٰهِ یَسِیْرًا ۟

நபியின் மனைவிமார்களே! உங்களில் யார் தெளிவான மானக்கேடான செயலை செய்வாரோ அவருக்கு தண்டனை இரு மடங்காக ஆக்கப்படும். அ(வ்வாறு தண்டனை கொடுப்ப)து அல்லாஹ்விற்கு இலகுவானதாக இருக்கிறது. info
التفاسير: