ការបកប្រែអត្ថន័យគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិល - អូម៉ើរ ស្ហើរុីហ្វ

លេខ​ទំព័រ:close

external-link copy
7 : 33

وَاِذْ اَخَذْنَا مِنَ النَّبِیّٖنَ مِیْثَاقَهُمْ وَمِنْكَ وَمِنْ نُّوْحٍ وَّاِبْرٰهِیْمَ وَمُوْسٰی وَعِیْسَی ابْنِ مَرْیَمَ ۪— وَاَخَذْنَا مِنْهُمْ مِّیْثَاقًا غَلِیْظًا ۟ۙ

எல்லா நபிமார்களிடமும் (அவர்கள் அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும், அவனுக்கு எதையும் இணைவைக்கக் கூடாது என்று) அவர்களின் வாக்குறுதியை வாங்கிய சமயத்தை நினைவு கூர்வீராக! இன்னும், (அதே வாக்குறுதியை) உம்மிடமும் நூஹ், இப்ராஹீம், மூஸா, மர்யமின் மகன் ஈஸாவிடமும் நாம் வாங்கினோம். இன்னும், அவர்களிடம் உறுதியான வாக்குறுதியை நாம் வாங்கினோம். info
التفاسير:

external-link copy
8 : 33

لِّیَسْـَٔلَ الصّٰدِقِیْنَ عَنْ صِدْقِهِمْ ۚ— وَاَعَدَّ لِلْكٰفِرِیْنَ عَذَابًا اَلِیْمًا ۟۠

(அல்லாஹ் இந்த வாக்குறுதியை வாங்கியது) ஏனென்றால், உண்மையாளர்களை (-நபிமார்களை) அவர்களின் உண்மையைப் பற்றி (அவர்களின் சமுதாய மக்கள் அவர்களுக்கு என்ன பதில் கூறினார்கள், ஏற்றார்களா, நிராகரித்தார்களா என்று) விசாரிப்பதற்காக ஆகும். நிராகரிப்பாளர்களுக்கு வலிமிகுந்த தண்டனையை (அல்லாஹ்) ஏற்படுத்தி இருக்கிறான். info
التفاسير:

external-link copy
9 : 33

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا اذْكُرُوْا نِعْمَةَ اللّٰهِ عَلَیْكُمْ اِذْ جَآءَتْكُمْ جُنُوْدٌ فَاَرْسَلْنَا عَلَیْهِمْ رِیْحًا وَّجُنُوْدًا لَّمْ تَرَوْهَا ؕ— وَكَانَ اللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِیْرًا ۟ۚ

நம்பிக்கையாளர்களே! உங்கள் மீது அல்லாஹ் புரிந்த அருட்கொடையை நினைவு கூருங்கள். பல ராணுவங்கள் (உங்களை தாக்குவதற்கு) உங்களிடம் வந்தபோது அவர்களுக்கு எதிராக காற்றையும் பல ராணுவங்களையும் நாம் அனுப்பினோம். அவர்களை நீங்கள் பார்க்கவில்லை. அல்லாஹ் நீங்கள் செய்வதை உற்று நோக்கியவனாக இருக்கிறான். info
التفاسير:

external-link copy
10 : 33

اِذْ جَآءُوْكُمْ مِّنْ فَوْقِكُمْ وَمِنْ اَسْفَلَ مِنْكُمْ وَاِذْ زَاغَتِ الْاَبْصَارُ وَبَلَغَتِ الْقُلُوْبُ الْحَنَاجِرَ وَتَظُنُّوْنَ بِاللّٰهِ الظُّنُوْنَا ۟ؕ

உங்களுக்கு மேல் புறத்திலிருந்தும் உங்களுக்கு கீழ்ப்புறத்திலிருந்தும் உங்களிடம் அவர்கள் வந்த சமயத்தில், இன்னும் பார்வைகள் சொருகி, உள்ளங்கள் தொண்டைகளுக்கு எட்டிய சமயத்தில் (உங்கள் செயல்களை அல்லாஹ் உற்று நோக்கியவனாக இருந்தான்). (நயவஞ்சகர்களே!) நீங்கள் அல்லாஹ்வைப் பற்றி பல (தப்பான) எண்ணங்களை எண்ணினீர்கள். info
التفاسير:

external-link copy
11 : 33

هُنَالِكَ ابْتُلِیَ الْمُؤْمِنُوْنَ وَزُلْزِلُوْا زِلْزَالًا شَدِیْدًا ۟

அங்குதான் நம்பிக்கையாளர்கள் சோதிக்கப்பட்டார்கள். இன்னும், கடுமையாக அச்சுறுத்தப்பட்டார்கள். info
التفاسير:

external-link copy
12 : 33

وَاِذْ یَقُوْلُ الْمُنٰفِقُوْنَ وَالَّذِیْنَ فِیْ قُلُوْبِهِمْ مَّرَضٌ مَّا وَعَدَنَا اللّٰهُ وَرَسُوْلُهٗۤ اِلَّا غُرُوْرًا ۟

இன்னும், நயவஞ்சகர்களும் தங்கள் உள்ளங்களில் (சந்தேக) நோய் உள்ளவர்களும் “அல்லாஹ்வும் அவனது தூதரும் நமக்கு பொய்யை (ஏமாற்றம் தரக்கூடியதை)த் தவிர (உண்மையான வெற்றியை) வாக்களிக்கவில்லை” என்று கூறிய சமயத்தை நினைவு கூருங்கள். info
التفاسير:

external-link copy
13 : 33

وَاِذْ قَالَتْ طَّآىِٕفَةٌ مِّنْهُمْ یٰۤاَهْلَ یَثْرِبَ لَا مُقَامَ لَكُمْ فَارْجِعُوْا ۚ— وَیَسْتَاْذِنُ فَرِیْقٌ مِّنْهُمُ النَّبِیَّ یَقُوْلُوْنَ اِنَّ بُیُوْتَنَا عَوْرَةٌ ۛؕ— وَمَا هِیَ بِعَوْرَةٍ ۛۚ— اِنْ یُّرِیْدُوْنَ اِلَّا فِرَارًا ۟

“யஸ்ரிப் வாசிகளே! உங்களுக்கு (இந்த போர் மைதானத்தில் தாக்குப்பிடித்து) தங்குவது அறவே முடியாது. ஆகவே, (உங்கள் இல்லங்களுக்கு) திரும்பி விடுங்கள்” என்று அவர்களில் ஒரு சாரார் கூறிய சமயத்தை நினைவு கூருங்கள். இன்னும், அவர்களில் ஒரு பிரிவினர் (போரில் கலந்துகொள்ளாமல் இருக்க) நபியிடம் அனுமதி கேட்கிறார்கள். “நிச்சயமாக எங்கள் இல்லங்கள் பாதுகாப்பு அற்றதாக இருக்கின்றன” என்று கூறுகிறார்கள். ஆனால், அவை பாதுகாப்பு அற்றதாக இல்லை. அவர்கள் (போர்க்களத்தை விட்டு) விரண்டோடுவதைத் தவிர (போர்க்களத்தில் நின்று உறுதியாக போர் செய்வதை) நாடவில்லை. info
التفاسير:

external-link copy
14 : 33

وَلَوْ دُخِلَتْ عَلَیْهِمْ مِّنْ اَقْطَارِهَا ثُمَّ سُىِٕلُوا الْفِتْنَةَ لَاٰتَوْهَا وَمَا تَلَبَّثُوْا بِهَاۤ اِلَّا یَسِیْرًا ۟

(மதீனாவில் உள்ள) அவர்கள் (-முனாஃபிக்குகள்) மீது அதனுடைய சுற்றுப் புறங்களில் இருந்து (படைகள்) நுழைந்தால், பிறகு குழப்பம் விளைவிக்கும்படி (-நிராகரிப்பையும் இணைவைத்தலையும் செய்யும்படி) அவர்களிடம் கேட்கப்பட்டால் அவர்கள் அதை (உடனே) செய்திருப்பார்கள். (நிராகரிப்பாளர்களின் அழைப்புக்கு பதில் தர) அவர்கள் கொஞ்ச (நேர)மே தவிர தாமதித்திருக்க மாட்டார்கள். info
التفاسير:

external-link copy
15 : 33

وَلَقَدْ كَانُوْا عَاهَدُوا اللّٰهَ مِنْ قَبْلُ لَا یُوَلُّوْنَ الْاَدْبَارَ ؕ— وَكَانَ عَهْدُ اللّٰهِ مَسْـُٔوْلًا ۟

திட்டவட்டமாக இதற்கு முன்னர், “அவர்கள் புறமுதுகிட்டு ஓடமாட்டார்கள்” என்று அவர்கள் அல்லாஹ்விடம் உடன்படிக்கை செய்திருந்தனர். அல்லாஹ்வின் (பெயர் கூறி இவர்கள் செய்த) ஒப்பந்தம் விசாரிக்கப்படுவதாக இருக்கிறது. info
التفاسير: