クルアーンの対訳 - タミル語対訳 - Omar Sharif

அஸ்ஸுக்ருப்

external-link copy
1 : 43

حٰمٓ ۟ۚۛ

ஹா மீம். info
التفاسير:

external-link copy
2 : 43

وَالْكِتٰبِ الْمُبِیْنِ ۟ۙۛ

(சொல்லாலும் கருத்தாலும்) தெளிவான இந்த வேதத்தின் மீது சத்தியமாக! info
التفاسير:

external-link copy
3 : 43

اِنَّا جَعَلْنٰهُ قُرْءٰنًا عَرَبِیًّا لَّعَلَّكُمْ تَعْقِلُوْنَ ۟ۚ

நிச்சயமாக நாம் இதை அரபிமொழியில் ஓதப்படுகிற குர்ஆனாக ஆக்கினோம், நீங்கள் சிந்தித்து புரிய வேண்டும் என்பதற்காக. info
التفاسير:

external-link copy
4 : 43

وَاِنَّهٗ فِیْۤ اُمِّ الْكِتٰبِ لَدَیْنَا لَعَلِیٌّ حَكِیْمٌ ۟ؕ

நிச்சயமாக நம்மிடம் (இருக்கின்ற அல்லவ்ஹுல் மஹ்ஃபூள் என்ற) தாய் புத்தகத்தில் பதியப்பட்டுள்ள இ(ந்த வேதமான)து மிக உயர்ந்ததும், மகா ஞானமுடையதும் ஆகும். info
التفاسير:

external-link copy
5 : 43

اَفَنَضْرِبُ عَنْكُمُ الذِّكْرَ صَفْحًا اَنْ كُنْتُمْ قَوْمًا مُّسْرِفِیْنَ ۟

ஆக, நீங்கள் எல்லை மீறி குற்றம் புரிகிற மக்களாக இருக்க, உங்களை விட்டும் தண்டனையை அகற்றி (உங்களை நாங்கள் தண்டிக்காமல்) விடுவோமா? (நீங்கள் இந்த குர்ஆனைக் கொண்டு நேர்வழி பெறாமல், எல்லை மீறி குற்றம் புரிகிற மக்களாக இருப்பதால் இந்த குர்ஆனை தொடர்ந்து இறக்குவதை நாம் விட்டுவிடுவோமா?) info
التفاسير:

external-link copy
6 : 43

وَكَمْ اَرْسَلْنَا مِنْ نَّبِیٍّ فِی الْاَوَّلِیْنَ ۟

முன்னோரில் நாம் எத்தனையோ நபிமார்களை அனுப்பினோம். info
التفاسير:

external-link copy
7 : 43

وَمَا یَاْتِیْهِمْ مِّنْ نَّبِیٍّ اِلَّا كَانُوْا بِهٖ یَسْتَهْزِءُوْنَ ۟

அவர்களிடம் நபி எவரும் வருவதில்லை, அவர்கள் அவரை கேலி செய்பவர்களாக இருந்தே தவிர. info
التفاسير:

external-link copy
8 : 43

فَاَهْلَكْنَاۤ اَشَدَّ مِنْهُمْ بَطْشًا وَّمَضٰی مَثَلُ الْاَوَّلِیْنَ ۟

ஆக, (உம்மை ஏற்க மறுக்கின்ற) இவர்களைவிட வலிமையால் மிக பலமான (அ)வர்களை நாம் அழித்தோம். இன்னும், முன்னோரின் உதாரணம் (-தண்டனை இவர்களின் கண் முன்) சென்றிருக்கிறது. info
التفاسير:

external-link copy
9 : 43

وَلَىِٕنْ سَاَلْتَهُمْ مَّنْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ لَیَقُوْلُنَّ خَلَقَهُنَّ الْعَزِیْزُ الْعَلِیْمُ ۟ۙ

வானங்களையும் பூமியையும் யார் படைத்தான் என்று (நபியே!) நீர் அவர்களிடம் கேட்டால், “மிகைத்தவன், நன்கறிந்தவன் (-அல்லாஹ்) அவற்றைப் படைத்தான்” என்று நிச்சயமாக அவர்கள் (பதில்) கூறுவார்கள்: info
التفاسير:

external-link copy
10 : 43

الَّذِیْ جَعَلَ لَكُمُ الْاَرْضَ مَهْدًا وَّجَعَلَ لَكُمْ فِیْهَا سُبُلًا لَّعَلَّكُمْ تَهْتَدُوْنَ ۟ۚ

அவன் உங்களுக்கு பூமியை விரிப்பாக ஆக்கினான். இன்னும், அதில் உங்களுக்கு பல பாதைகளை ஏற்படுத்தினான், (அவற்றின் மூலம்) நீங்கள் (உங்களுக்குத் தேவையான இடங்களுக்கு) சரியான பாதையில் (இலகுவாக) செல்வதற்காக. info
التفاسير: