クルアーンの対訳 - クルアーン簡潔注釈(タミル語対訳)

external-link copy
63 : 8

وَاَلَّفَ بَیْنَ قُلُوْبِهِمْ ؕ— لَوْ اَنْفَقْتَ مَا فِی الْاَرْضِ جَمِیْعًا مَّاۤ اَلَّفْتَ بَیْنَ قُلُوْبِهِمْ ۙ— وَلٰكِنَّ اللّٰهَ اَلَّفَ بَیْنَهُمْ ؕ— اِنَّهٗ عَزِیْزٌ حَكِیْمٌ ۟

8.63. உமக்கு உதவி செய்த நம்பிக்கையாளர்களின் பிரிந்து கிடந்த உள்ளங்களை அவன் ஒன்றிணைத்தான். அவற்றை ஒன்றிணைப்பதற்கு நீர் பூமியிலுள்ள செல்வங்கள் அனைத்தையும் செலவு செய்திருந்தாலும் உம்மால் அவற்றை ஒன்றிணைத்திருக்க முடியாது. ஆயினும் அல்லாஹ்வே அந்த உள்ளங்களிடையே இணைப்பை ஏற்படுத்தினான். அவன் தன் ஆட்சியதிகாரத்தில் யாவற்றையும் மிகைத்தவன். யாராலும் அவனை மிகைக்க முடியாது. தான் அமைத்த விதிகளில், திட்டமிடுவதில், வழங்கும் சட்டங்களில் அவன் ஞானம்மிக்கவன். info
التفاسير:
本諸節の功徳:
• في الآيات وَعْدٌ من الله لعباده المؤمنين بالكفاية والنصرة على الأعداء.
1. நம்பிக்கைகொண்ட தன் அடியார்களை பொறுப்பெடுத்துக் கொள்வதாகவும் எதிரிகளுக்கு எதிராக அவர்களுக்கு வெற்றியளிப்பதாகவும் அல்லாஹ் வாக்களித்துள்ளான். info

• الثبات أمام العدو فرض على المسلمين لا اختيار لهم فيه، ما لم يحدث ما يُرَخِّص لهم بخلافه.
2. எதிரிகளுக்கு முன்னால் உறுதியுடன் நிற்பது முஸ்லிம்களின் மீது கட்டாயக் கடமையாகும். அதிலே அவர்கள் வேறு எந்த தெரிவும் கிடையாது, கடமையில்லை என சலுகை வழங்கும் ஏதேனும் நிகழ்வு நடந்தாலே தவிர. info

• الله يحب لعباده معالي الأمور، ويكره منهم سَفْسَافَها، ولذلك حثهم على طلب ثواب الآخرة الباقي والدائم.
3. அல்லாஹ் தன் அடியார்களுக்கு உயர்ந்த விஷயங்களை விரும்புகிறான், தாழ்ந்த விஷயங்களை வெறுக்கிறான். எனவேதான் நிலையான மறுமையின் நன்மையைத் தேடுமாறு அவர்களுக்கு ஆர்வமூட்டியுள்ளான். info

• مفاداة الأسرى أو المنّ عليهم بإطلاق سراحهم لا يكون إلا بعد توافر الغلبة والسلطان على الأعداء، وإظهار هيبة الدولة في وجه الآخرين.
4. எதிரிகளின் மீது அதிகாரம் ஏற்பட்டு முஸ்லிம் நாட்டைப் பற்றிய பயம் ஏனையோரிடம் வெளிப்படும் வரை கைதிகளுக்குப் பிணைவழங்கவோ அல்லது அவர்களை இலவசமாக விடுவித்து கருணை காட்டவோ முடியாது. info