クルアーンの対訳 - クルアーン簡潔注釈(タミル語対訳)

ページ番号:close

external-link copy
55 : 33

لَا جُنَاحَ عَلَیْهِنَّ فِیْۤ اٰبَآىِٕهِنَّ وَلَاۤ اَبْنَآىِٕهِنَّ وَلَاۤ اِخْوَانِهِنَّ وَلَاۤ اَبْنَآءِ اِخْوَانِهِنَّ وَلَاۤ اَبْنَآءِ اَخَوٰتِهِنَّ وَلَا نِسَآىِٕهِنَّ وَلَا مَا مَلَكَتْ اَیْمَانُهُنَّ ۚ— وَاتَّقِیْنَ اللّٰهَ ؕ— اِنَّ اللّٰهَ كَانَ عَلٰی كُلِّ شَیْءٍ شَهِیْدًا ۟

33.55. அவர்களின் தந்தையர், பிள்ளைகள், சகோதரர்கள், சகோதரர்களின் பிள்ளைகள், சொந்த மற்றும் பால்குடி சகோதரிகளின் பிள்ளைகள், நம்பிக்கைகொண்ட பெண்கள், அவர்களின் அடிமைகள் ஆகியோர் அவர்களைப் பார்ப்பதும் திரைமறைவின்றி பேசுவதும் அவர்கள் மீது குற்றமாகாது. -நம்பிக்கைகொண்ட பெண்களே!- அல்லாஹ்வின் கட்டளையைச் செயல்படுத்தி அவன் தடுத்தள்ளவைகளை அஞ்சிக் கொள்ளுங்கள். அவன் உங்களிடமிருந்து வெளிப்படும் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறான். info
التفاسير:

external-link copy
56 : 33

اِنَّ اللّٰهَ وَمَلٰٓىِٕكَتَهٗ یُصَلُّوْنَ عَلَی النَّبِیِّ ؕ— یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا صَلُّوْا عَلَیْهِ وَسَلِّمُوْا تَسْلِیْمًا ۟

33.56. நிச்சயமாக அல்லாஹ் தன் வானவர்களிடத்தில் தூதர் முஹம்மதை புகழ்கின்றான். அவனுடைய வானவர்கள் அவருக்காக பிரார்த்தனை செய்கிறார்கள். அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய மார்க்கத்தின்படி செயல்பட்ட அடியார்களே! தூதரின் மீது ஸலவாத்தும் சலாமும் கூறுங்கள். info
التفاسير:

external-link copy
57 : 33

اِنَّ الَّذِیْنَ یُؤْذُوْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗ لَعَنَهُمُ اللّٰهُ فِی الدُّنْیَا وَالْاٰخِرَةِ وَاَعَدَّ لَهُمْ عَذَابًا مُّهِیْنًا ۟

33.57. தூதரைக் கண்ணியப்படுத்தும்படியும் அவர் மீது ஸலவாத் கூறும்படியும் கட்டளையிட்ட இறைவன் அவருக்குத் தொல்லை தருவதை தடைசெய்கிறான். அவன் கூறுகிறான்: நிச்சயமாக சொல்லாலோ, செயலாலோ அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் தொல்லையளிப்பவர்களை இவ்வுலகிலும் மறுவுலகிலும் அல்லாஹ் தன் விசாலமான அருளை விட்டும் தூரமாக்கி விட்டான். தனது தூதருக்கு அவர்கள் தொல்லையளித்ததற்குக் கூலியாக மறுமையில் அவர்களுக்காக இழிவுமிக்க வேதனையைத் தயார்படுத்தி வைத்துள்ளான். info
التفاسير:

external-link copy
58 : 33

وَالَّذِیْنَ یُؤْذُوْنَ الْمُؤْمِنِیْنَ وَالْمُؤْمِنٰتِ بِغَیْرِ مَا اكْتَسَبُوْا فَقَدِ احْتَمَلُوْا بُهْتَانًا وَّاِثْمًا مُّبِیْنًا ۟۠

33.58. நம்பிக்கைகொண்ட ஆண்களையும் பெண்களையும் துன்புறுத்துவதற்கு தகுந்த குற்றத்தை அவர்கள் செய்யாத போதும் அதனை செய்ததாக கூறி அவர்களை சொல்லாலோ, செயலாலோ துன்புறுத்துபவர்கள் வெளிப்படையான பாவத்தையும் பொய்யையும் சுமந்து கொண்டார்கள். info
التفاسير:

external-link copy
59 : 33

یٰۤاَیُّهَا النَّبِیُّ قُلْ لِّاَزْوَاجِكَ وَبَنٰتِكَ وَنِسَآءِ الْمُؤْمِنِیْنَ یُدْنِیْنَ عَلَیْهِنَّ مِنْ جَلَابِیْبِهِنَّ ؕ— ذٰلِكَ اَدْنٰۤی اَنْ یُّعْرَفْنَ فَلَا یُؤْذَیْنَ ؕ— وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِیْمًا ۟

33.59. தூதரே! நீர் உம் மனைவியரிடமும் மகள்களிடமும் நம்பிக்கைகொண்ட பெண்களிடமும் கூறுவீராக: “அந்நிய ஆண்களுக்கு முன்னால் தங்களின் மறைவிடங்கள் வெளிப்படாதவாறு தனது மேலாடையிலிருந்து ஒரு பகுதியை தம்மீது தொங்க விட்டுக்கொள்ளட்டும். அவர்கள் சுதந்திரமான பெண்கள் என அறியப்பட்டு அடிமைப் பெண்கள் தொல்லைக்குள்ளாகுவது போன்று தொல்லைக்குட்படாமல் இருக்க இதுவே சிறந்த வழிமுறையாகும். அல்லாஹ் தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களின் பாவங்களை மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களோடு மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான். info
التفاسير:

external-link copy
60 : 33

لَىِٕنْ لَّمْ یَنْتَهِ الْمُنٰفِقُوْنَ وَالَّذِیْنَ فِیْ قُلُوْبِهِمْ مَّرَضٌ وَّالْمُرْجِفُوْنَ فِی الْمَدِیْنَةِ لَنُغْرِیَنَّكَ بِهِمْ ثُمَّ لَا یُجَاوِرُوْنَكَ فِیْهَاۤ اِلَّا قَلِیْلًا ۟ۚۛ

33.60. நயவஞ்சகர்கள் இஸ்லாத்தை வெளிப்படுத்தி நிராகரிப்பை மறைக்கும் தங்களின் நயவஞ்சகத்தை விட்டும் தவிர்ந்துகொள்ளவில்லையெனில், உள்ளங்களில் மனோஇச்சையினால் பாவங்கள் உள்ளவர்களும், நம்பிக்கையாளர்களிடையே பிரிவினை ஏற்படுத்துவதற்காக மதீனாவில் பொய்யான வதந்திகளைப் பரப்புபவர்களும் விலகிக்கொள்ளவில்லையெனில் -தூதரே!- அவர்களைத் தண்டிக்குமாறு உமக்குக் கட்டளையிட்டு, அவர்களின் மீது உம்மைச் சாட்டிவிடுவோம். பின்னர் அவர்கள் உம்முடன் மதீனாவில் சிறிது காலமே வாழ்வார்கள். ஏனெனில் அவர்கள் பூமியில் குழப்பத்தை உண்டாக்குவதால் அவர்கள் அழிக்கப்படுவார்கள். அல்லது அங்கிருந்து விரட்டப்படுவார்கள். info
التفاسير:

external-link copy
61 : 33

مَّلْعُوْنِیْنَ ۛۚ— اَیْنَمَا ثُقِفُوْۤا اُخِذُوْا وَقُتِّلُوْا تَقْتِیْلًا ۟

33.61. அவர்கள் அல்லாஹ்வின் அருளைவிட்டும் தூரமாக்கப்படுவார்கள். பூமியில் குழப்பத்தை பரப்புவதினாலும் நயவஞ்சகத்தினாலும் அவர்கள் எங்கு வசித்தாலும் பிடிக்கப்பட்டு கொலை செய்யப்படுவார்கள். info
التفاسير:

external-link copy
62 : 33

سُنَّةَ اللّٰهِ فِی الَّذِیْنَ خَلَوْا مِنْ قَبْلُ ۚ— وَلَنْ تَجِدَ لِسُنَّةِ اللّٰهِ تَبْدِیْلًا ۟

33.62. இதுதான் நயவஞ்சர்களின் விஷயத்தில் நயவஞ்சகத்தை அவர்கள் வெளிப்படுத்தும் போது நடைபெற்று வருகின்ற அல்லாஹ்வின் வழிமுறையாகும். அல்லாஹ்வின் வழிமுறை உறுதியானதாகும். அதில் ஒருபோதும் எந்த மாற்றத்தையும் நீர் காணமாட்டீர். info
التفاسير:
本諸節の功徳:
• علوّ منزلة النبي صلى الله عليه وسلم عند الله وملائكته.
1. அல்லாஹ்விடத்திலும் வானவர்களிடத்திலும் நபியவர்களின் உயர்ந்த அந்தஸ்த்து. info

• حرمة إيذاء المؤمنين دون سبب.
2. நம்பிக்கையாளர்களுக்கு காரணமின்றி தொல்லையளிப்பது தடை. info

• النفاق سبب لنزول العذاب بصاحبه.
3.நயவஞ்சகத்தனம் தனக்கு தண்டனை இறங்குவதற்குக் காரணமாகும். info