クルアーンの対訳 - クルアーン簡潔注釈(タミル語対訳)

external-link copy
12 : 31

وَلَقَدْ اٰتَیْنَا لُقْمٰنَ الْحِكْمَةَ اَنِ اشْكُرْ لِلّٰهِ ؕ— وَمَنْ یَّشْكُرْ فَاِنَّمَا یَشْكُرُ لِنَفْسِهٖ ۚ— وَمَنْ كَفَرَ فَاِنَّ اللّٰهَ غَنِیٌّ حَمِیْدٌ ۟

31.12. நாம் லுக்மானுக்கு மார்க்கத்தில் புரிதலையும் விஷயங்களில் ஞானத்தையும் வழங்கினோம். நாம் அவரிடம் கூறினோம்: “லுக்மானே! தன்னை வழிபடுவதற்கு உமக்கு அருள்புரிந்த உம் இறைவனுக்கு நன்றி செலுத்துவீராக. நிச்சயமாக தம் இறைவனுக்கு நன்றி செலுத்துபவரின் நன்றியின் பயன் அவரையே சென்றடையும். ஏனெனில் அவருடைய நன்றியைவிட்டும் அல்லாஹ் தேவையற்றவன். யாரேனும் அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றிகெட்டத்தனமாக நடந்து அவனை நிராகரித்தால் அவரது நிராகரிப்பின் தீங்கு அவரையே சென்றடையும். அதனால் அல்லாஹ்வுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடப்போவதில்லை. ஏனெனில் அவன் படைப்புகள் அனைத்தையும் விட்டும் தேவையற்றவன். எல்லா நிலைகளிலும் புகழுக்குரியவன். info
التفاسير:
本諸節の功徳:
• لما فصَّل سبحانه ما يصيب الأم من جهد الحمل والوضع دلّ على مزيد برّها.
1. தாய் அனுபவிக்கும், கருவைச் சுமத்தல், பிரசவித்தல் ஆகிய சிரமங்களை அல்லாஹ் தெளிவுபடுத்தியிருப்பது தாயின் நலனில் மேலதிக அக்கறை செலுத்த வேண்டும் என்பதைக் கூறுகிறது. info

• نفع الطاعة وضرر المعصية عائد على العبد.
2. அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிவதால் ஏற்படும் நன்மை, அவனுடைய கட்டளைக்கு மாறாகச் செயல்படுவதால் ஏற்படும் தீமை இரண்டும் அடியானையே சாரும். info

• وجوب تعاهد الأبناء بالتربية والتعليم.
3. குழந்தைகளுக்கு கல்வியையும் ஒழுக்கத்தையும் போதித்து வளர்ப்பது கட்டாயமாகும். info

• شمول الآداب في الإسلام للسلوك الفردي والجماعي.
4. இஸ்லாமிய ஒழுக்கவியல் தனிநபர் மற்றும் சமூக நடத்தைகளை உள்ளடக்கியதாகும். info