クルアーンの対訳 - クルアーン簡潔注釈(タミル語対訳)

external-link copy
33 : 3

اِنَّ اللّٰهَ اصْطَفٰۤی اٰدَمَ وَنُوْحًا وَّاٰلَ اِبْرٰهِیْمَ وَاٰلَ عِمْرٰنَ عَلَی الْعٰلَمِیْنَ ۟ۙ

3.34. அல்லாஹ் ஆதமைத் தேர்ந்தெடுத்து, வானவர்களை அவருக்குச் சிரம்பணியுமாறு செய்தான். நூஹைத் தேர்ந்தேடுத்து, பூமியில் அனுப்பப்படும் முதல் தூதராக ஆக்கினான். இப்ராஹீமின் குடும்பத்தினரையும் தேர்ந்தெடுத்தான். அவரது சந்ததிகளில் தூதுத்துவத்தை நிலைக்கச் செய்தான். இம்ரானின் குடும்பத்தினரையும் தேர்ந்தெடுத்தான். அல்லாஹ் இவர்கள் அனைவரையும் தேர்ந்தெடுத்து அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தின் மேன்மக்களாக ஆக்கினான். info
التفاسير:
本諸節の功徳:
• عظم مقام الله وشدة عقوبته تجعل العاقل على حذر من مخالفة أمره تعالى.
1. அல்லாஹ்வின் மகத்துவமும் அவன் வழங்கும் தண்டனையின் கடுமையும், அறிவாளியை அவனுடைய கட்டளைக்கு மாறுசெய்வதை விட்டும் எச்சரிக்கையாக வாழவைக்கிறது. info

• برهان المحبة الحقة لله ولرسوله باتباع الشرع أمرًا ونهيًا، وأما دعوى المحبة بلا اتباع فلا تنفع صاحبها.
2. உண்மையாகவே அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிப்பது என்பது அவனுடைய மார்க்கத்தை ஏவலாலும் விலக்கலாலும் பின்பற்றுவதேயாகும். அதைவிடுத்து வாயளவில் மட்டும் அவனை நேசிக்கிறோம் என்று கூறுவதால் எந்தப் பயனும் இல்லை. info

• أن الله تعالى يختار من يشاء من عباده ويصطفيهم للنبوة والعبادة بحكمته ورحمته، وقد يخصهم بآيات خارقة للعادة.
3. அல்லாஹ், தனது ஞானம் அருளுக்கேற்ப அடியார்களில் தான் நாடியவர்களை தூதுத்துவத்திற்காக, வணக்க வழிபாட்டிற்காக தேர்ந்தெடுக்கிறான். சிலவேளை வழக்கத்திற்கு மாறான அற்புதங்களை பிரத்யேகமாக அவர்களுக்கு வழங்குகிறான். info