クルアーンの対訳 - クルアーン簡潔注釈(タミル語対訳)

external-link copy
26 : 3

قُلِ اللّٰهُمَّ مٰلِكَ الْمُلْكِ تُؤْتِی الْمُلْكَ مَنْ تَشَآءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَآءُ ؗ— وَتُعِزُّ مَنْ تَشَآءُ وَتُذِلُّ مَنْ تَشَآءُ ؕ— بِیَدِكَ الْخَیْرُ ؕ— اِنَّكَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟

3.26. தூதரே! உம் இறைவனைப் புகழ்ந்தவாறும் கண்ணியப்படுத்தியவாறும் நீர் கூறுவீராக: “இவ்வுலகிலும் மறுவுலகிலும் நீதான் ஆட்சியதிகாரத்திற்கு அதிபதியாக இருக்கின்றாய். உன் படைப்புகளில் நீ நாடியவர்களுக்கு ஆட்சியதிகாரத்தை வழங்குகின்றாய். நீ நாடியவர்களிடமிருந்து அதனைப் பறித்து விடுகின்றாய். அவர்களில் நீ நாடியவர்களை கண்ணியப்படுத்துகின்றாய். நீ நாடியவர்களை இழிவுபடுத்துகின்றாய். இவையனைத்திலும் உன்னுடைய ஞானமும் நீதியும் அடங்கியுள்ளது. உன் கைவசம்தான் நன்மைகள் அனைத்தும் உள்ளன. நீ எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவனாவாய். info
التفاسير:
本諸節の功徳:
• أن التوفيق والهداية من الله تعالى، والعلم - وإن كثر وبلغ صاحبه أعلى المراتب - إن لم يصاحبه توفيق الله لم ينتفع به المرء.
1. பாக்கியமும் நேர்வழியும் அல்லாஹ்விடமிருந்தே கிடைப்பதாகும். மனிதன் கல்வியில் எவ்வளவு உயர்ந்த நிலையை அடைந்துவிட்டாலும் அல்லாஹ்வின் அருள் இல்லையெனில் அவனால் அதிலிருந்து பயனடைய முடியாது. info

• أن الملك لله تعالى، فهو المعطي المانع، المعز المذل، بيده الخير كله، وإليه يرجع الأمر كله، فلا يُسأل أحد سواه.
2. ஆட்சியதிகாரம் அனைத்தும் அல்லாஹ்வின் கைவசமே உள்ளது. அவன்தான் கொடுக்கக்கூடியவன், தடுக்கக்கூடியவன், கண்ணியமளிப்பவன், இழிவுபடுத்துபவன். அவன் கைவசமே நன்மைகள் அனைத்தும் உள்ளன. அனைத்தும் அவன் பக்கமே திரும்புகின்றன. அவனைத்தவிர யாரிடமும் கேட்கப்படக்கூடாது. info

• خطورة تولي الكافرين، حيث توعَّد الله فاعله بالبراءة منه وبالحساب يوم القيامة.
3. நம்பிக்கையாளர்கள் நிராகரிப்பாளர்களை நேசர்களாக ஆக்கிக் கொள்வது பாரதூரமான தவறாகும். அவ்வாறு நேசம் கொள்வோரை விட்டு அல்லாஹ் விலகிக்கொள்வதாகவும் மறுமையில் கடுமையான விசாரணை செய்வதாகவும் அல்லாஹ் எச்சரித்துள்ளான். info