クルアーンの対訳 - クルアーン簡潔注釈(タミル語対訳)

ページ番号: 64:50 close

external-link copy
116 : 3

اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا لَنْ تُغْنِیَ عَنْهُمْ اَمْوَالُهُمْ وَلَاۤ اَوْلَادُهُمْ مِّنَ اللّٰهِ شَیْـًٔا ؕ— وَاُولٰٓىِٕكَ اَصْحٰبُ النَّارِ ۚ— هُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟

3.116. அல்லாஹ்வையும் அவனது தூதர்களையும் நிராகரித்தவர்களின் செல்வங்களோ பிள்ளைகளோ அல்லாஹ்வின் வேதனையிலிருந்து அவர்களை சிறிதும் காப்பாற்றிவிடாது. அவனது அருளையும் வரவழைக்காது. மாறாக அவை அவர்களின் வேதனையையும் வருத்தத்தையுமே அதிகப்படுத்தும். இவர்கள்தாம் நரகவாசிகள். என்றென்றும் அங்கு வீழ்ந்துகிடப்பார்கள். info
التفاسير:

external-link copy
117 : 3

مَثَلُ مَا یُنْفِقُوْنَ فِیْ هٰذِهِ الْحَیٰوةِ الدُّنْیَا كَمَثَلِ رِیْحٍ فِیْهَا صِرٌّ اَصَابَتْ حَرْثَ قَوْمٍ ظَلَمُوْۤا اَنْفُسَهُمْ فَاَهْلَكَتْهُ ؕ— وَمَا ظَلَمَهُمُ اللّٰهُ وَلٰكِنْ اَنْفُسَهُمْ یَظْلِمُوْنَ ۟

3.117. இந்த நிராகரிப்பாளர்கள் நன்மையான விஷயங்களில் செலவு செய்து அதன் பிரதிபலனை எதிர்பார்ப்பதற்கு உதாரணம் கடுங்குளிர் அடங்கிய காற்றைப் போன்றதாகும். அது பாவங்கள் செய்து தமக்குத்தாமே அநீதி இழைத்துக் கொண்டவர்களின் வயல்களில் வீசி அதனை நாசப்படுத்திவிட்டது. அவர்கள் அதிலிருந்து அதிகமான நன்மைகளை எதிர்பார்த்தார்கள். அவர்கள் பயன்பெறமுடியாதவாறு அந்தக் காற்று பயிர்களை அழித்துவிட்டது போன்றே நிராகரிப்பு அவர்கள் ஆதரவு வைத்திருக்கும் செயல்களின் கூலியையும் வீணாக்கிவிடும். அல்லாஹ் அவர்கள்மீது அநீதி இழைக்கவில்லை. அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நிராகரித்ததன் காரணமாக அவர்கள்தான் தமக்குத்தாமே அநீதி இழைத்துக் கொண்டார்கள். info
التفاسير:

external-link copy
118 : 3

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَتَّخِذُوْا بِطَانَةً مِّنْ دُوْنِكُمْ لَا یَاْلُوْنَكُمْ خَبَالًا ؕ— وَدُّوْا مَا عَنِتُّمْ ۚ— قَدْ بَدَتِ الْبَغْضَآءُ مِنْ اَفْوَاهِهِمْ ۖۚ— وَمَا تُخْفِیْ صُدُوْرُهُمْ اَكْبَرُ ؕ— قَدْ بَیَّنَّا لَكُمُ الْاٰیٰتِ اِنْ كُنْتُمْ تَعْقِلُوْنَ ۟

3.118. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! நம்பிக்கையாளர்களை விடுத்து மற்றவர்களை உங்கள் இரகசியங்களையும் பிரத்யேக நிலமைகளையும் நீங்கள் தெரிவிக்கும் உற்ற நண்பர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். அவர்கள் உங்களுக்குத் தீங்குவிளைவிப்பதில் சோர்ந்துவிட மாட்டார்கள். உங்களுக்கு சிரமம்,தீங்கு ஏற்படுவதையே அவர்கள் விரும்புகிறார்கள். உங்கள்மீதான பகைமையும் வெறுப்பும் அவர்களின் நாவுகளில் வெளிப்பட்டுவிட்டது. அவர்கள் உங்கள் மார்க்கத்தைக் குறைகூறுகிறார்கள்; உங்களிடையே சண்டை மூட்டுகிறார்கள்; உங்களின் இரகசியங்களை வெளிப்படுத்துகிறார்கள். அவர்களின் உள்ளங்களில் மறைத்துவைத்திருக்கும் வெறுப்போ மிகக் கடுமையானது. நம்பிக்கையாளர்களே! உங்கள் இரட்சகனிடத்திலிருந்து இறக்கப்பட்டதை நீங்கள் விளங்கிக் கொள்பவர்களாக இருந்தால் இவ்வுலக மறுவுலக நலவுகளுக்கான தெளிவான ஆதாரங்களை நாம் தெளிவுபடுத்திவிட்டோம். info
التفاسير:

external-link copy
119 : 3

هٰۤاَنْتُمْ اُولَآءِ تُحِبُّوْنَهُمْ وَلَا یُحِبُّوْنَكُمْ وَتُؤْمِنُوْنَ بِالْكِتٰبِ كُلِّهٖ ۚ— وَاِذَا لَقُوْكُمْ قَالُوْۤا اٰمَنَّا ۖۗۚ— وَاِذَا خَلَوْا عَضُّوْا عَلَیْكُمُ الْاَنَامِلَ مِنَ الْغَیْظِ ؕ— قُلْ مُوْتُوْا بِغَیْظِكُمْ ؕ— اِنَّ اللّٰهَ عَلِیْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ ۟

3.119. நம்பிக்கையாளர்களே! நீங்கள் அந்தக் கூட்டத்தை விரும்புகிறீர்கள். அவர்களுக்கு நன்மையை நாடுகிறீர்கள். ஆனால் அவர்களோ உங்களை விரும்புவதில்லை; உங்களுக்கு நன்மையையும் நாடுவதில்லை. மாறாக உங்களை வெறுக்கிறார்கள். நீங்கள் அவர்களது வேதங்கள் உட்பட அனைத்து வேதங்களையும் நம்புகிறீர்கள். ஆனால் அவர்கள் உங்களின் தூதரான முஹம்மதுமீது அல்லாஹ் இறக்கியதை நம்ப மறுக்கிறார்கள். அவர்கள் உங்களை சந்தித்தால், ‘நாங்கள் நம்புகிறோம்’ என்று கூறுகிறார்கள். ஆனால் அவர்களில் சிலர் சிலருடன் தனித்துவிட்டால் உங்களின் ஒற்றுமையையும் இஸ்லாத்தின் கண்ணியத்தையும் அவர்களது இழிவையும் கண்டு கோபத்தாலும் கவலையாலும் தங்களின் விரல்களின் நுனிகளை கடித்துக் கொள்கிறார்கள். உள்ளங்களிலுள்ள ஈமானையும் நிராகரிப்பையும், நன்மையையும் தீமையையும் அல்லாஹ் நன்கறிந்தவன். info
التفاسير:

external-link copy
120 : 3

اِنْ تَمْسَسْكُمْ حَسَنَةٌ تَسُؤْهُمْ ؗ— وَاِنْ تُصِبْكُمْ سَیِّئَةٌ یَّفْرَحُوْا بِهَا ؕ— وَاِنْ تَصْبِرُوْا وَتَتَّقُوْا لَا یَضُرُّكُمْ كَیْدُهُمْ شَیْـًٔا ؕ— اِنَّ اللّٰهَ بِمَا یَعْمَلُوْنَ مُحِیْطٌ ۟۠

3.120. நம்பிக்கையாளர்களே! எதிரிகளுக்கு எதிரான வெற்றி, செல்வ வளம், குழந்தைகள் என்று ஏதேனும் அருட்கொடைகளை அவர்கள் உங்களிடம் கண்டால் கவலையடைந்து விடுகிறார்கள். எதிரிகளின் ஆதிக்கம், செல்வங்களிலும் குழந்தைகளிலும் ஏற்படும் இழப்பு போன்ற துன்பங்கள் உங்களுக்கு ஏற்படுவதைக் கண்டால் அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். நீங்கள் அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவனுடைய விதியை பொறுமையை ஏற்றுக்கொண்டு அவனுடைய கோபத்திலிருந்து தவிர்ந்திருந்தால் அவர்களின் சூழ்ச்சியும் நோவினையும் உங்களுக்கு எந்தத் தீங்கும் அளிக்காது. அவர்கள் செய்யும் சூழ்ச்சிகளை அல்லாஹ் சூழ்ந்துள்ளான். அவன் அவர்களை தோல்வியடைந்தோராக திருப்பிவிடுவான். info
التفاسير:

external-link copy
121 : 3

وَاِذْ غَدَوْتَ مِنْ اَهْلِكَ تُبَوِّئُ الْمُؤْمِنِیْنَ مَقَاعِدَ لِلْقِتَالِ ؕ— وَاللّٰهُ سَمِیْعٌ عَلِیْمٌ ۟ۙ

3.121. தூதரே! இணைவைப்பாளர்களுடன் போரிடுவதற்காக நீர் மதீனாவிலிருந்து உஹதை நோக்கி காலைப்பொழுதில் புறப்பட்ட சந்தர்ப்பத்தை நினைவுகூர்வீராக!. போரிடுவதற்காக நம்பிக்கையாளர்களை அவர்களுக்குரிய இடத்தில் நிறுத்தி ஒவ்வொருவருக்கும் அவரவருக்குரிய இடத்தை நீர் தெளிவுபடுத்தினீர். நீங்கள் பேசுவதை அல்லாஹ் செவியேற்பவன்; உங்களின் செயல்களை அவன் நன்கறிந்தவன். info
التفاسير:
本諸節の功徳:
• نَهْي المؤمنين عن موالاة الكافرين وجَعْلهم أَخِلّاء وأصفياء يُفْضَى إليهم بأحوال المؤمنين وأسرارهم.
1. நம்பிக்கையாளர்கள் நிராகரிப்பாளர்களை நேசிக்கவும் தங்களின் இரகசியங்களை வெளிப்படுத்தும் உற்ற நண்பர்களாக ஆக்கவும் கூடாது. info

• من صور عداوة الكافرين للمؤمنين فرحهم بما يصيب المؤمنين من بلاء ونقص، وغيظهم إن أصابهم خير.
2. நம்பிக்கையாளர்களுக்கு ஏற்படும் துன்பங்களைக் கண்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது, அவர்களுக்கு ஏற்படும் நன்மைகளைக் கண்டு கவலைப்படுவது நிராகரிப்பாளர்களின் பகைமையின் ஒரு தோற்றமாகும். info

• الوقاية من كيد الكفار ومكرهم تكون بالصبر وعدم إظهار الخوف، ثم تقوى الله والأخذ بأسباب القوة والنصر.
3. பொறுமை, அச்சத்தை வெளிப்படுத்தாமை, இறையச்சம், பலப்படுத்தல் மற்றும் வெற்றிக்கான முயற்சிகளை முன்னெடுத்தல் என்பவற்றின் மூலமே நிராகரிப்பாளர்களின் சூழ்ச்சியிலிருந்து பாதுகாப்புப் பெறமுடியும். info