Traduzione dei Significati del Sacro Corano - Traduzione in tamil - Omar Sharif

அல்ஹாக்கா

external-link copy
1 : 69

اَلْحَآقَّةُ ۟ۙ

உண்மையான நிகழ்வு! info
التفاسير:

external-link copy
2 : 69

مَا الْحَآقَّةُ ۟ۚ

உண்மையான நிகழ்வு என்றால் என்ன? info
التفاسير:

external-link copy
3 : 69

وَمَاۤ اَدْرٰىكَ مَا الْحَآقَّةُ ۟ؕ

உண்மையான நிகழ்வு என்றால் என்ன என்று உமக்கு எது அறிவித்தது!? info
التفاسير:

external-link copy
4 : 69

كَذَّبَتْ ثَمُوْدُ وَعَادٌ بِالْقَارِعَةِ ۟

ஸமூது சமுதாயமும் ஆது சமுதாயமும் (உள்ளங்களை) தட்டக்கூடிய (திடுக்கிட செய்கின்ற) மறுமை நாளை பொய்ப்பித்தனர். info
التفاسير:

external-link copy
5 : 69

فَاَمَّا ثَمُوْدُ فَاُهْلِكُوْا بِالطَّاغِیَةِ ۟

ஆக, ஸமூது சமுதாயம் அளவு கடந்த சப்தத்தைக் கொண்டு அழிக்கப்பட்டனர். info
التفاسير:

external-link copy
6 : 69

وَاَمَّا عَادٌ فَاُهْلِكُوْا بِرِیْحٍ صَرْصَرٍ عَاتِیَةٍ ۟ۙ

ஆக, ஆது சமுதாயம் கடுமையான குளிருடன் வீசக்கூடிய அதி வேகமான (கட்டுக்கடங்காத) ஒரு காற்றைக் கொண்டு அழிக்கப்பட்டனர். info
التفاسير:

external-link copy
7 : 69

سَخَّرَهَا عَلَیْهِمْ سَبْعَ لَیَالٍ وَّثَمٰنِیَةَ اَیَّامٍ ۙ— حُسُوْمًا فَتَرَی الْقَوْمَ فِیْهَا صَرْعٰی ۙ— كَاَنَّهُمْ اَعْجَازُ نَخْلٍ خَاوِیَةٍ ۟ۚ

அவன், அதை (-அந்த காற்றை) ஏழு இரவுகளும் எட்டு பகல்களும் அவர்கள் மீது தொடர்ச்சியாக (வீசக்கூடிய நிலையில்) கட்டுப்படுத்தி வைத்திருந்தான். ஆக, அதில் மக்களை செத்து மடிந்தவர்களாக நீர் பார்ப்பீர். அவர்களோ (கரையான் தின்று) அழிந்துபோன பேரீச்ச மரத்தின் அடிப்பகுதிகளைப் போல் இருந்தனர். info
التفاسير:

external-link copy
8 : 69

فَهَلْ تَرٰی لَهُمْ مِّنْ بَاقِیَةٍ ۟

ஆக, அவர்களில் உயிரோடு மீதம் இருப்பவர் யாரையும் நீர் பார்க்கிறீரா? info
التفاسير: