Traduzione dei Significati del Sacro Corano - Traduzione in tamil - Omar Sharif

Numero di pagina:close

external-link copy
11 : 39

قُلْ اِنِّیْۤ اُمِرْتُ اَنْ اَعْبُدَ اللّٰهَ مُخْلِصًا لَّهُ الدِّیْنَ ۟ۙ

(நபியே!) கூறுவீராக! “அல்லாஹ்வை நான் வணங்க வேண்டும், மார்க்கத்தை - வணக்க வழிபாடுகளை அவனுக்கு (மட்டும்) நான் தூய்மையாக செய்ய வேண்டும்” என்று நிச்சயமாக நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். info
التفاسير:

external-link copy
12 : 39

وَاُمِرْتُ لِاَنْ اَكُوْنَ اَوَّلَ الْمُسْلِمِیْنَ ۟

இன்னும், “முஸ்லிம்களில் முதலாமவனாக நான் இருக்க வேண்டும்” என்றும் நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். info
التفاسير:

external-link copy
13 : 39

قُلْ اِنِّیْۤ اَخَافُ اِنْ عَصَیْتُ رَبِّیْ عَذَابَ یَوْمٍ عَظِیْمٍ ۟

(நபியே!) கூறுவீராக! “நான் என் இறைவனுக்கு மாறுசெய்தால் மகத்தான (மறுமை) நாளின் தண்டனையை நிச்சயமாக நான் பயப்படுகிறேன்.” info
التفاسير:

external-link copy
14 : 39

قُلِ اللّٰهَ اَعْبُدُ مُخْلِصًا لَّهٗ دِیْنِیْ ۟ۙۚ

(நபியே!) கூறுவீராக! “அல்லாஹ்வைத்தான் நான் வணங்குவேன், அவனுக்கு (மட்டும்) என் மார்க்கத்தை - வணக்க வழிபாட்டை தூய்மைப்படுத்தியவனாக இருக்கும் நிலையில்.” info
التفاسير:

external-link copy
15 : 39

فَاعْبُدُوْا مَا شِئْتُمْ مِّنْ دُوْنِهٖ ؕ— قُلْ اِنَّ الْخٰسِرِیْنَ الَّذِیْنَ خَسِرُوْۤا اَنْفُسَهُمْ وَاَهْلِیْهِمْ یَوْمَ الْقِیٰمَةِ ؕ— اَلَا ذٰلِكَ هُوَ الْخُسْرَانُ الْمُبِیْنُ ۟

ஆக, அவனை அன்றி நீங்கள் விரும்பியவர்களை நீங்கள் வணங்குங்கள். (நபியே!) கூறுவீராக! “நிச்சயமாக நஷ்டவாளிகள் (யாரென்றால்) தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் மறுமையில் நஷ்டமிழைத்தவர்கள்தான்.” அறிந்து கொள்ளுங்கள்! “இதுதான் மிகத்தெளிவான நஷ்டமாகும்.” info
التفاسير:

external-link copy
16 : 39

لَهُمْ مِّنْ فَوْقِهِمْ ظُلَلٌ مِّنَ النَّارِ وَمِنْ تَحْتِهِمْ ظُلَلٌ ؕ— ذٰلِكَ یُخَوِّفُ اللّٰهُ بِهٖ عِبَادَهٗ ؕ— یٰعِبَادِ فَاتَّقُوْنِ ۟

அவர்களுக்கு அவர்களின் மேலிருந்து நரகத்தின் நிழல்கள் (அடுக்கடுக்காக நரகத்தின் புகைகளும் ஜுவாலைகளும் இருக்கும்.) இன்னும் அவர்களுக்கு கீழிருந்து (நரகத்தின்) நிழல்கள் உண்டு. இ(ந்த தண்டனையான)து - இதன் மூலம் அல்லாஹ் தனது அடியார்களை பயமுறுத்துகிறான். என் அடியார்களே! என்னை அஞ்சுங்கள்! (நரக நெருப்பு அவர்களை அடர்த்தியாக சூழ்ந்துவிடும்.) info
التفاسير:

external-link copy
17 : 39

وَالَّذِیْنَ اجْتَنَبُوا الطَّاغُوْتَ اَنْ یَّعْبُدُوْهَا وَاَنَابُوْۤا اِلَی اللّٰهِ لَهُمُ الْبُشْرٰی ۚ— فَبَشِّرْ عِبَادِ ۟ۙ

இன்னும், எவர்கள் தாகூத்துகளை (-ஷைத்தான்கள், சிலைகள், தாம் வணங்கப்படுவதை விரும்புகின்ற தலைவர்கள், குருக்கள் ஆகிய) இவர்களை வணங்குவதை விட்டு விலகி, அல்லாஹ்வின் பக்கம் திரும்பினார்களோ அவர்களுக்குத்தான் (சொர்க்கத்தின்) நற்செய்தி உண்டு. ஆகவே, என் அடியார்களுக்கு நற்செய்தி சொல்வீராக!. info
التفاسير:

external-link copy
18 : 39

الَّذِیْنَ یَسْتَمِعُوْنَ الْقَوْلَ فَیَتَّبِعُوْنَ اَحْسَنَهٗ ؕ— اُولٰٓىِٕكَ الَّذِیْنَ هَدٰىهُمُ اللّٰهُ وَاُولٰٓىِٕكَ هُمْ اُولُوا الْاَلْبَابِ ۟

அவர்கள் உண்மையான பேச்சுகளை செவியுறுவார்கள். பின்னர், அவற்றில் மிக அழகானதை பின்பற்றுவார்கள். அவர்கள், எத்தகையோர் என்றால் அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழி காட்டினான். இன்னும் அவர்கள்தான் அறிவாளிகள். info
التفاسير:

external-link copy
19 : 39

اَفَمَنْ حَقَّ عَلَیْهِ كَلِمَةُ الْعَذَابِ ؕ— اَفَاَنْتَ تُنْقِذُ مَنْ فِی النَّارِ ۟ۚ

ஆக, எவர் மீது தண்டனையின் வாக்கு உறுதியாகிவிட்டதோ அவரை; இன்னும், நரகத்தில் எவர் இருப்பாரோ அவரை (நபியே) நீர் பாதுகாப்பீரா? (உம்மால் அவர்களை பாதுகாக்க முடியாது)? info
التفاسير:

external-link copy
20 : 39

لٰكِنِ الَّذِیْنَ اتَّقَوْا رَبَّهُمْ لَهُمْ غُرَفٌ مِّنْ فَوْقِهَا غُرَفٌ مَّبْنِیَّةٌ ۙ— تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ؕ۬— وَعْدَ اللّٰهِ ؕ— لَا یُخْلِفُ اللّٰهُ الْمِیْعَادَ ۟

எனினும், எவர்கள் தங்கள் இறைவனை அஞ்சினார்களோ அவர்களுக்கு (சொர்க்கத்தில் கோபுரங்களில்) அறைகள் உண்டு. அவற்றுக்குமேல் (-அந்த அறைகளுக்கு மேல் இன்னும் பல) அறைகள் கட்டப்பட்டிருக்கும். அவற்றைச் சுற்றி நதிகள் ஓடும். இது அல்லாஹ் வாக்களித்த வாக்காகும். அல்லாஹ் (தனது) வாக்கை (ஒருபோதும்) மாற்றமாட்டான். info
التفاسير:

external-link copy
21 : 39

اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ اَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً فَسَلَكَهٗ یَنَابِیْعَ فِی الْاَرْضِ ثُمَّ یُخْرِجُ بِهٖ زَرْعًا مُّخْتَلِفًا اَلْوَانُهٗ ثُمَّ یَهِیْجُ فَتَرٰىهُ مُصْفَرًّا ثُمَّ یَجْعَلُهٗ حُطَامًا ؕ— اِنَّ فِیْ ذٰلِكَ لَذِكْرٰی لِاُولِی الْاَلْبَابِ ۟۠

(நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் வானத்தில் இருந்து மழையை இறக்கினான். அதை பூமியில் பல ஊற்றுகளாக ஓடவைத்தான். பிறகு, அதன் நிறங்கள் மாறுபட்ட விளைச்சல்களை அதன் மூலம் அவன் உற்பத்தி செய்கிறான். பிறகு, அது காய்ந்து விடுகிறது. அதை மஞ்சளாக பார்க்கிறீர். பிறகு அதை அவன் காய்ந்த சருகுகளாக ஆக்கிவிடுகிறான். நிறைவான அறிவுடையவர்களுக்கு நிச்சயமாக இதில் ஓர் உபதேசம் இருக்கிறது. info
التفاسير: