Traduzione dei Significati del Sacro Corano - Traduzione tamil dell'Abbreviata Esegesi del Nobile Corano

Numero di pagina:close

external-link copy
45 : 6

فَقُطِعَ دَابِرُ الْقَوْمِ الَّذِیْنَ ظَلَمُوْا ؕ— وَالْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِیْنَ ۟

6.45. நிராகரிப்பாளர்கள் அடியோடு அழிக்கப்பட்டார்கள். அல்லாஹ் தன் தூதர்களுக்கு உதவிசெய்தான். தனது எதிரிகளை அழித்து தனது நேசர்களுக்கு உதவி புரிந்ததற்காக, நன்றியும் புகழும் அகிலங்களைப் படைத்துப் பராமரிக்கும் அல்லாஹ்வுக்கே உரியதாகும். info
التفاسير:

external-link copy
46 : 6

قُلْ اَرَءَیْتُمْ اِنْ اَخَذَ اللّٰهُ سَمْعَكُمْ وَاَبْصَارَكُمْ وَخَتَمَ عَلٰی قُلُوْبِكُمْ مَّنْ اِلٰهٌ غَیْرُ اللّٰهِ یَاْتِیْكُمْ بِهٖ ؕ— اُنْظُرْ كَیْفَ نُصَرِّفُ الْاٰیٰتِ ثُمَّ هُمْ یَصْدِفُوْنَ ۟

6.46. தூதரே! இந்த இணைவைப்பாளர்களிடம் நீர் கேட்பீராக: “அல்லாஹ் உங்களின் கேட்கும் திறனைப் பறித்து செவிடனாகவும், பார்வையைப் பறித்து குருடனாகவும், எதையும் புரிந்துகொள்ள முடியாதவாறு உங்கள் உள்ளங்களின் மீது முத்திரையிட்டும் விட்டால், அல்லாஹ்வைத் தவிர நீங்கள் இழந்தவற்றைத் திருப்பித் தரும் இறைவன் யார்?” தூதரே! நாம் எவ்வாறு விதவிதமாக அவர்களுக்கு ஆதாரங்களைத் தெளிவுபடுத்துகிறோம் என்பதைக் கவனிப்பீராக! பின்னரும் அவர்கள் அவற்றைப் புறக்கணிக்கிறார்கள். info
التفاسير:

external-link copy
47 : 6

قُلْ اَرَءَیْتَكُمْ اِنْ اَتٰىكُمْ عَذَابُ اللّٰهِ بَغْتَةً اَوْ جَهْرَةً هَلْ یُهْلَكُ اِلَّا الْقَوْمُ الظّٰلِمُوْنَ ۟

6.47. தூதரே! அவர்களிடம் கேட்பீராக: “நீங்கள் உணராமலேயே திடீரென அல்லாஹ்வின் வேதனை உங்களை அடைந்துவிட்டால் அல்லது வெளிப்படையாக அது உங்களிடம் வந்துவிட்டால், அல்லாஹ்வை நிராகரித்து அவனுடைய தூதரைப் பொய்யர் என்று கூறிய அநியாயக்காரக்காரர்களைத் தவிர வேறு யார்தான் அழிவார்கள் என்பதை எனக்கு அறிவியுங்கள்.” info
التفاسير:

external-link copy
48 : 6

وَمَا نُرْسِلُ الْمُرْسَلِیْنَ اِلَّا مُبَشِّرِیْنَ وَمُنْذِرِیْنَ ۚ— فَمَنْ اٰمَنَ وَاَصْلَحَ فَلَا خَوْفٌ عَلَیْهِمْ وَلَا هُمْ یَحْزَنُوْنَ ۟

6.48. நாம் தூதர்களை அனுப்பவதெல்லாம் நம்பிக்கைகொண்டு கீழ்ப்படிந்தவர்களுக்கு என்றும் முடிவுறாத நிலையான அருட்கொடைகள் உண்டு என்று நற்செய்தி கூறுவதற்காகவும் நிராகரிப்பாளர்களுக்கும் பாவிகளுக்கும் நம்முடைய கடுமையான வேதனையைக் கொண்டு எச்சரிக்கை செய்வதற்காகவும்தான். தூதர்கள் மீது நம்பிக்கைகொண்டு தம் செயலைச் சீர்படுத்திக் கொண்டவர்கள் மறுமைநாளில் நிகழக்கூடியதை எண்ணி அச்சம் கொள்ள மாட்டார்கள். அவர்கள் இழந்த உலக பாக்கியங்களை எண்ணி கவலைகொள்ளவோ கைசேப்படவோ மாட்டார்கள். info
التفاسير:

external-link copy
49 : 6

وَالَّذِیْنَ كَذَّبُوْا بِاٰیٰتِنَا یَمَسُّهُمُ الْعَذَابُ بِمَا كَانُوْا یَفْسُقُوْنَ ۟

6.49. நம்முடைய சான்றுகளை பொய்யெனக் கூறி அவர்கள் அல்லாஹ்வுக்குக் கீழ்படிய மறுத்ததனால் அவர்களை வேதனை பிடித்துக் கொள்ளும். info
التفاسير:

external-link copy
50 : 6

قُلْ لَّاۤ اَقُوْلُ لَكُمْ عِنْدِیْ خَزَآىِٕنُ اللّٰهِ وَلَاۤ اَعْلَمُ الْغَیْبَ وَلَاۤ اَقُوْلُ لَكُمْ اِنِّیْ مَلَكٌ ۚ— اِنْ اَتَّبِعُ اِلَّا مَا یُوْحٰۤی اِلَیَّ ؕ— قُلْ هَلْ یَسْتَوِی الْاَعْمٰی وَالْبَصِیْرُ ؕ— اَفَلَا تَتَفَكَّرُوْنَ ۟۠

6.50. தூதரே! இந்த இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: “நான் விரும்பியபடி செலவு செய்யும் விதத்தில் வாழ்வாதாரத்தின் அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் என்னிடம் இருப்பதாக நான் உங்களிடம் கூற மாட்டேன். அல்லாஹ் எனக்கு அறிவித்த வஹியைத் தவிர மறைவானவற்றை நான் அறிவேன் என்றோ நான் வானவர் என்றோ கூறமாட்டேன். நான் அல்லாஹ்வின் தூதராவேன். அவன் எனக்கு வஹியாக அறிவிப்பதையே பின்பற்றுகிறேன். என்னிடம் இல்லாதவற்றை இருப்பதாக வாதிடமாட்டேன்.” தூதரே! நீர் அவர்களிடம் கேட்பீராக: “சத்தியத்தைக் கண்டுகொள்ளாத நிராகரிப்பாளனும் சத்தியத்தைக் கண்டுகொண்ட நம்பிக்கையாளனும் சமமாவார்களா? இணைவைப்பாளர்களே! உங்களைச் சுற்றியிருக்கும் சான்றுகளை சிந்தித்துப் பார்க்க மாட்டீர்களா? info
التفاسير:

external-link copy
51 : 6

وَاَنْذِرْ بِهِ الَّذِیْنَ یَخَافُوْنَ اَنْ یُّحْشَرُوْۤا اِلٰی رَبِّهِمْ لَیْسَ لَهُمْ مِّنْ دُوْنِهٖ وَلِیٌّ وَّلَا شَفِیْعٌ لَّعَلَّهُمْ یَتَّقُوْنَ ۟

6.51. தூதரே! மறுமை நாளில் ஒன்று திரட்டப்படுவதை நினைத்து அஞ்சுபவர்களுக்கு இந்த குர்ஆனைக் கொண்டு அச்சமூட்டுவீராக. அந்நாளில் அல்லாஹ்வைத் தவிர நன்மையளிக்கும் எந்த நண்பனோ தீமையைத் தடுக்கும் எந்த சிபாரிசு செய்பவரோ இருக்கமாட்டார். இதனால் அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சலாம். இவர்கள்தாம் குர்ஆனைக் கொண்டு பயனடையக்கூடியவர்கள். info
التفاسير:

external-link copy
52 : 6

وَلَا تَطْرُدِ الَّذِیْنَ یَدْعُوْنَ رَبَّهُمْ بِالْغَدٰوةِ وَالْعَشِیِّ یُرِیْدُوْنَ وَجْهَهٗ ؕ— مَا عَلَیْكَ مِنْ حِسَابِهِمْ مِّنْ شَیْءٍ وَّمَا مِنْ حِسَابِكَ عَلَیْهِمْ مِّنْ شَیْءٍ فَتَطْرُدَهُمْ فَتَكُوْنَ مِنَ الظّٰلِمِیْنَ ۟

6.52. தூதரே! இணைவைப்பாளர்களின் தலைவர்களைக் கவர்வதற்காக காலையிலும் மாலையிலும் உளத்தூய்மையுடன் அல்லாஹ்வை மட்டுமே எப்பொழுதும் வணங்கும் ஏழை முஸ்லிம்களை உம் அவையைவிட்டு விரட்டிவிடாதீர். இந்த ஏழைகளுக்கு நீங்களோ, அவர்களுக்கு நீங்களோ எவ்விதப் பொறுப்பும் இல்லை. அவர்களது பொறுப்பு அவர்களின் இறைவனிடமே உள்ளது. நீர் அவர்களை உம் அவையிலிருந்து விரட்டினால் நீர் அல்லாஹ்வின் வரம்புகளை மீறியவரே. info
التفاسير:
Alcuni insegnamenti da trarre da questi versi sono:
• الأنبياء بشر، ليس لهم من خصائص الربوبية شيء البتة، ومهمَّتهم التبليغ، فهم لا يملكون تصرفًا في الكون، فلا يعلمون الغيب، ولا يملكون خزائن رزق ونحو ذلك.
1. தூதர்களும் மனிதர்கள்தாம். எவ்வித தெய்வீகப் பண்பும் அவர்களிடம் இல்லை. அவர்களின் பணி தூதை எடுத்துரைப்பதுதான். அவர்கள் பிரபஞ்சத்தில் எவ்வித நடவடிக்கைக்கும் உரிமையற்றவர்கள். அவர்கள் மறைவானவற்றை அறியமாட்டார்கள். வாழ்வாதார கருவூலங்களுக்கும் அவர்கள் அதிபதிகளாக இல்லை. info

• اهتمام الداعية بأتباعه وخاصة أولئك الضعفاء الذين لا يبتغون سوى الحق، فعليه أن يقرِّبهم، ولا يقبل أن يبعدهم إرضاء للكفار.
2. அழைப்பாளர்கள் தம்மைப் பின்பற்றுவோருக்கே -சத்தியத்தை மட்டும் விரும்பும் பலவீனர்களுக்கு- முக்கியத்துவம் வழங்க வேண்டும். அவர்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும். நிராகரிப்பாளர்களை திருப்திப்படுத்துவதற்காக அவர்களைப் புறக்கணிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. info

• إشارة الآية إلى أهمية العبادات التي تقع أول النهار وآخره.
3. பகலின் ஆரம்பத்திலும் இறுதியிலும் நிகழும் வணக்கங்களின் முக்கியத்துவத்தையும் இவ்வசனம் உணர்த்துகின்றது. info