Traduzione dei Significati del Sacro Corano - Traduzione tamil dell'Abbreviata Esegesi del Nobile Corano

external-link copy
110 : 2

وَاَقِیْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَ ؕ— وَمَا تُقَدِّمُوْا لِاَنْفُسِكُمْ مِّنْ خَیْرٍ تَجِدُوْهُ عِنْدَ اللّٰهِ ؕ— اِنَّ اللّٰهَ بِمَا تَعْمَلُوْنَ بَصِیْرٌ ۟

2.110. தொழுகையை அதன் நிபந்தனைகளோடும், கடமைகளோடும், சுன்னத்துகளோடும் முழுமையாக நிறைவேற்றுங்கள். உங்கள் செல்வங்களிலிருந்து தகுதியானவர்களுக்கு ஸகாத்தை வழங்குங்கள். உங்களது வாழ்வில் நீங்கள் நற்செயல்கள் செய்து இறப்பதற்கு முன்னால் உங்களின் சேமிப்புக்காக முற்படுத்தி அனுப்பி வைத்தவைகளுக்கான கூலியை மறுமையில் உங்கள் இறைவனிடம் பெறுவீர்கள். அதனடிப்படையில் அவன் உங்களுக்கு கூலி வழங்குவான். நீங்கள் செய்கின்ற செயல்கள் அனைத்தையும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான். அதனால் ஒவ்வொருவருக்கும் அவரது செயல்களுக்கேற்ப கூலி வழங்குவான். info
التفاسير:
Alcuni insegnamenti da trarre da questi versi sono:
• أن الأمر كله لله، فيبدل ما يشاء من أحكامه وشرائعه، ويبقي ما يشاء منها، وكل ذلك بعلمه وحكمته.
1. அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்வின் வசமே உள்ளது. அவன் தன்னுடைய மார்க்கத்தில் தான் விரும்பியவற்றை மாற்றுகிறான், தான் விரும்பியவற்றை நிலைத்திருக்கச் செய்கிறான். அனைத்தும் அவனுடைய அறிவு மற்றும் ஞானத்தின் பிரகாரமே நடக்கின்றன. info

• حَسَدُ كثيرٍ من أهل الكتاب هذه الأمة، لما خصَّها الله من الإيمان واتباع الرسول، حتى تمنوا رجوعها إلى الكفر كما كانت.
2. ஈமானைக் கொண்டும் தூதரைப் பின்பற்றுவதைக் கொண்டும் அல்லாஹ் இந்த சமூகத்தை சிறப்பித்த காரணத்தால், வேதக்காரர்களில் பெரும்பாலோர் இந்த சமூகத்தின் மீது பொறாமை கொண்டுள்ளனர். அதனால் இந்த முஸ்லிம் சமூகம் தங்களின் முந்தைய நிலையான நிராகரிப்புக்கே திரும்பிவிட வேண்டும் என்று ஆசை கொண்டிருந்தார்கள். info