Traduzione dei Significati del Sacro Corano - Traduzione tamil dell'Abbreviata Esegesi del Nobile Corano

external-link copy
23 : 12

وَرَاوَدَتْهُ الَّتِیْ هُوَ فِیْ بَیْتِهَا عَنْ نَّفْسِهٖ وَغَلَّقَتِ الْاَبْوَابَ وَقَالَتْ هَیْتَ لَكَ ؕ— قَالَ مَعَاذَ اللّٰهِ اِنَّهٗ رَبِّیْۤ اَحْسَنَ مَثْوَایَ ؕ— اِنَّهٗ لَا یُفْلِحُ الظّٰلِمُوْنَ ۟

12.23. அரசனின் மனைவி இதமாகவும் தந்திரமாகவும் யூஸுஃபை தவறான நடத்தைக்காக அழைத்தாள். தனிமையை உறுதிப்படுத்த கதவுகள் அனைத்தையும் தாழிட்டுக்கொண்டு, “என் பக்கம் நெருங்கி வா” என்றாள். யூஸுஃப் கூறினார்: “நீ அழைக்கும் விஷயத்திலிருந்து நான் அல்லாஹ்வின் மூலம் பாதுகாவல் தேடுகிறேன். என் எஜமான் என்னை நல்ல முறையில் அவரிடம் தங்க வைத்துள்ளார். நான் அவருக்கு ஒருபோதும் துரோகமிழைக்க மாட்டேன். நான் அவருக்கு துரோகமிழைத்தால் அநியாயக்காரனாக ஆகிவிடுவேன். நிச்சயமாக அநியாயக்காரர்கள் வெற்றிபெற மாட்டார்கள்.” info
التفاسير:
Alcuni insegnamenti da trarre da questi versi sono:
• قبح خيانة المحسن في أهله وماله، الأمر الذي ذكره يوسف من جملة أسباب رفض الفاحشة.
1. மனிதன் தனக்கு நன்மை செய்வோரின் குடும்பத்திலும் சொத்திலும் துரோகமிழைப்பது மிகவும் மோசமான ஒன்றாகும். யூஸுஃப் (அலை) மானக்கேடான செயலை நிராகரித்ததற்கு குறிப்பிட்ட காரணங்களில் இதுவும் ஒன்றாகும். info

• بيان عصمة الأنبياء وحفظ الله لهم من الوقوع في السوء والفحشاء.
2. இறைத்தூதர்களை அல்லாஹ் தீய காரியம் மற்றும் மானக்கேடான காரியங்களிலிருந்து பாதுகாத்துள்ளான். info

• وجوب دفع الفاحشة والهرب والتخلص منها.
3. மானக்கேடான காரியத்தை தடுத்து விடுவதும் அதிலிருந்து வெருண்டோடி தப்பிப்பதும் கட்டாயமாகும். info

• مشروعية العمل بالقرائن في الأحكام.
4. தீர்ப்புக்களில் அடையாளங்களை வைத்து செயற்பட அனுமதியுண்டு. info