Traduzione dei Significati del Sacro Corano - Traduzione in tamil - Abdul Hamid Baqui

அர்ரஃத்

external-link copy
1 : 13

الٓمّٓرٰ ۫— تِلْكَ اٰیٰتُ الْكِتٰبِ ؕ— وَالَّذِیْۤ اُنْزِلَ اِلَیْكَ مِنْ رَّبِّكَ الْحَقُّ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یُؤْمِنُوْنَ ۟

1. அலிஃப் லாம் மீம் றா. இவை இவ்வேதத்தின் (சில) வசனங்களாகும். (நபியே!) உமது இறைவனால் உமக்கு இறக்கப்படும் இது முற்றிலும் உண்மையானது. எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் (இதை) நம்புவதில்லை. info
التفاسير:

external-link copy
2 : 13

اَللّٰهُ الَّذِیْ رَفَعَ السَّمٰوٰتِ بِغَیْرِ عَمَدٍ تَرَوْنَهَا ثُمَّ اسْتَوٰی عَلَی الْعَرْشِ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ ؕ— كُلٌّ یَّجْرِیْ لِاَجَلٍ مُّسَمًّی ؕ— یُدَبِّرُ الْاَمْرَ یُفَصِّلُ الْاٰیٰتِ لَعَلَّكُمْ بِلِقَآءِ رَبِّكُمْ تُوْقِنُوْنَ ۟

2. வானங்களை தூணின்றியே உயர்த்தியவன் அல்லாஹ்வே! அதை நீங்கள் (உங்கள் கண்களால்) காண்கிறீர்கள். அன்றி அர்ஷின் மீது அவன் (தன் மகிமைக்குத்தக்கவாறு) உயர்ந்து விட்டான். அவனே சூரியனையும் சந்திரனையும் தன் அதிகாரத்திற்குள் வைத்திருக்கிறான். (இவை) ஒவ்வொன்றும் (அவற்றிற்குக்) குறிப்பிட்ட கால திட்டப்படி நடந்து வருகிறது. (அவற்றில் நடைபெறும்) சகல காரியங்களையும் அவனே திட்டமிடுகிறான். நீங்கள் (இறந்த பின்னர் உயிர்பெற்று) உங்கள் இறைவனைச் சந்திப்பதை உறுதி கொள்வதற்காக (தன்) வசனங்களை (இவ்வாறு உங்களுக்கு) விவரித்து அறிவிக்கிறான். info
التفاسير:

external-link copy
3 : 13

وَهُوَ الَّذِیْ مَدَّ الْاَرْضَ وَجَعَلَ فِیْهَا رَوَاسِیَ وَاَنْهٰرًا ؕ— وَمِنْ كُلِّ الثَّمَرٰتِ جَعَلَ فِیْهَا زَوْجَیْنِ اثْنَیْنِ یُغْشِی الَّیْلَ النَّهَارَ ؕ— اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّقَوْمٍ یَّتَفَكَّرُوْنَ ۟

3. அவன்தான் பூமியை விரித்து, அதில் உறுதியான (பெரிய பெரிய) மலைகளையும் (நீண்ட) ஆறுகளையும் அமைத்தான். ஒவ்வொரு கனிவர்க்கத்(தின் மரங்களையும் ஆண் பெண் கொண்ட ஜ)தை ஜதைகளாக்கினான். இரவைக் கொண்டு பகலை மூடுகிறான். சிந்திக்கக்கூடிய மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. info
التفاسير:

external-link copy
4 : 13

وَفِی الْاَرْضِ قِطَعٌ مُّتَجٰوِرٰتٌ وَّجَنّٰتٌ مِّنْ اَعْنَابٍ وَّزَرْعٌ وَّنَخِیْلٌ صِنْوَانٌ وَّغَیْرُ صِنْوَانٍ یُّسْقٰی بِمَآءٍ وَّاحِدٍ ۫— وَنُفَضِّلُ بَعْضَهَا عَلٰی بَعْضٍ فِی الْاُكُلِ ؕ— اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّقَوْمٍ یَّعْقِلُوْنَ ۟

4. பூமியில் பல தொகுதிகளை சேர்ந்தாற்போல் அமைத்து (அதில்) திராட்சை, தானியப்பயிர் நிலங்களையும், பேரீச்சந்தோப்புகளையும் ஆக்கினான்; கிளைகள் உள்ளதும், கிளைகள் இல்லாததுமான மரங்களையும் (உற்பத்தி செய்கிறான். இவை அனைத்திற்கும்) ஒரேவித நீர் புகட்டப்பட்டபோதிலும், சிலவற்றைவிட சிலவற்றை சுவையில் நாம் மேன்மையாக்கி வைத்தோம். இதில், அறிவுடைய மக்களுக்கு நிச்சயமாக பல அத்தாட்சிகள் இருக்கின்றன. info
التفاسير:

external-link copy
5 : 13

وَاِنْ تَعْجَبْ فَعَجَبٌ قَوْلُهُمْ ءَاِذَا كُنَّا تُرٰبًا ءَاِنَّا لَفِیْ خَلْقٍ جَدِیْدٍ ؕ۬— اُولٰٓىِٕكَ الَّذِیْنَ كَفَرُوْا بِرَبِّهِمْ ۚ— وَاُولٰٓىِٕكَ الْاَغْلٰلُ فِیْۤ اَعْنَاقِهِمْ ۚ— وَاُولٰٓىِٕكَ اَصْحٰبُ النَّارِ ۚ— هُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟

5. (நபியே! இந்நிராகரிப்பவர்கள் உம்மைப் பொய்யாக்குவது பற்றி) நீர் ஆச்சரியப்படுவதாயின், அவர்கள் கூறுவது (இதை விட) மிக்க ஆச்சரியமானதே! (ஏனென்றால்) ‘‘நாம் (இறந்து உக்கி) மண்ணாய்ப் போனதன் பின்னரா புதிதாக நாம் படைக்கப்பட்டு விடுவோம்?'' என்று கூறுகின்ற இவர்கள், தங்களைப் படைத்த இறைவனையே நிராகரிக்கின்றனர். (ஆகவே, மறுமையில்) இவர்களுடைய கழுத்தில் விலங்கிடப்படும். இவர்கள் நரகவாசிகளே! அதில் என்றென்றும் இவர்கள் தங்கிவிடுவார்கள். info
التفاسير: