Terjemahan makna Alquran Alkarim - Terjemahan Al-Mukhtaṣar fī Tafsīr Al-Qur`ān Al-Karīm ke bahasa Tamil

Nomor Halaman:close

external-link copy
13 : 36

وَاضْرِبْ لَهُمْ مَّثَلًا اَصْحٰبَ الْقَرْیَةِ ۘ— اِذْ جَآءَهَا الْمُرْسَلُوْنَ ۟ۚ

36.13. -தூதரே!- பிடிவாதம் கொண்ட இந்த பொய்ப்பிப்பவர்கள் படிப்பினை பெறும்பொருட்டு அவர்களுக்கு ஒரு உதாரணத்தை எடுத்துரைப்பீராக. அது தூதர்கள் வந்த ஒரு ஊர் மக்களைக் குறித்த சம்பவமாகும். info
التفاسير:

external-link copy
14 : 36

اِذْ اَرْسَلْنَاۤ اِلَیْهِمُ اثْنَیْنِ فَكَذَّبُوْهُمَا فَعَزَّزْنَا بِثَالِثٍ فَقَالُوْۤا اِنَّاۤ اِلَیْكُمْ مُّرْسَلُوْنَ ۟

36.14. நாம் அவர்களிடம் முதலில், அவர்களை அல்லாஹ்வை ஒருமைப்படுத்துமாறும் அவனை வணங்குமாறும் அழைக்கக்கூடிய இரு தூதர்களை அனுப்பியபோது அவர்கள் இருவரையும் அவர்கள் பொய்ப்பித்தார்கள். எனவே நாம் அவர்களுடன் மூன்றாவது ஒரு தூதரை அனுப்பி அவர்கள் இருவரையும் வலுப்படுத்தினோம். மூன்று தூதர்களும் அந்த ஊர் மக்களிடம் கூறினார்கள்: “நிச்சயமாக நாங்கள் -மூவரும்- அல்லாஹ் ஒருவனே வணக்கத்திற்குரியவன். அவனுடைய மார்க்கத்தையே பின்பற்ற வேண்டும் என்பதன் பக்கம் உங்களை அழைக்கக்கூடிய அல்லாஹ்வின் தூதர்களாவோம்.” info
التفاسير:

external-link copy
15 : 36

قَالُوْا مَاۤ اَنْتُمْ اِلَّا بَشَرٌ مِّثْلُنَا ۙ— وَمَاۤ اَنْزَلَ الرَّحْمٰنُ مِنْ شَیْءٍ ۙ— اِنْ اَنْتُمْ اِلَّا تَكْذِبُوْنَ ۟

36.15. அந்த ஊர் மக்கள் தூதர்களிடம் கூறினார்கள்: “நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்கள்தாம். எங்களைவிட உங்களுக்கு எந்தச் சிறப்பும் இல்லை. அளவில்லாக் கருணையாளன் உங்கள் மீது எதையும் இறக்கி வைக்கவில்லை. உங்களது இக்கூற்றில் நீங்கள் அல்லாஹ்வின் பெயரால் பொய் கூறுபவர்களே அன்றி வேறில்லை.” info
التفاسير:

external-link copy
16 : 36

قَالُوْا رَبُّنَا یَعْلَمُ اِنَّاۤ اِلَیْكُمْ لَمُرْسَلُوْنَ ۟

36.16. ஊர் மக்களின் பொய்ப்பித்தலுக்கு பதிலாக மூன்று தூதர்களும் கூறினார்கள்: “-ஊர்மக்களே!- நிச்சயமாக நாங்கள் உங்களின்பால் அனுப்பப்பட்ட தூதர்கள்தாம் என்பதை எங்களின் இறைவன் நன்கறிவான். எங்களுக்கு ஆதாரமாக அமைவதற்கு அதுவே போதுமானது. info
التفاسير:

external-link copy
17 : 36

وَمَا عَلَیْنَاۤ اِلَّا الْبَلٰغُ الْمُبِیْنُ ۟

36.17. எங்களுக்கு இடப்பட்ட கட்டளைகளை உங்களிடம் தெளிவாக எடுத்துரைப்பதைத் தவிர எங்கள் மீது வேறு எந்த கடமையும் இல்லை. உங்களுக்கு நேர்வழியளிக்கும் அதிகாரம் எங்களிடம் இல்லை.” info
التفاسير:

external-link copy
18 : 36

قَالُوْۤا اِنَّا تَطَیَّرْنَا بِكُمْ ۚ— لَىِٕنْ لَّمْ تَنْتَهُوْا لَنَرْجُمَنَّكُمْ وَلَیَمَسَّنَّكُمْ مِّنَّا عَذَابٌ اَلِیْمٌ ۟

36.18. அந்த ஊர் மக்கள் தூதர்களிடம் கூறினார்கள்: “நிச்சயமாக நாங்கள் உங்களை துர்ச்சகுனமாக கருதுகின்றோம். நீங்கள் ஓரிறைக் கொள்கையின்பால் எங்களை அழைப்பதை விட்டும் விலகிக் கொள்ளவில்லையெனில் கல்லால் அடித்து உங்களைக் கொன்று விடுவோம். திட்டமாக எங்களிடமிருந்து வேதனை மிக்க தண்டனையும் பெற்றுக்கொள்வீர்கள்.” info
التفاسير:

external-link copy
19 : 36

قَالُوْا طَآىِٕرُكُمْ مَّعَكُمْ ؕ— اَىِٕنْ ذُكِّرْتُمْ ؕ— بَلْ اَنْتُمْ قَوْمٌ مُّسْرِفُوْنَ ۟

36.19. தூதர்கள் அவர்களுக்கு மறுப்பாகக் கூறினார்கள்: “உங்களின் துர்ச்சகுனம் அல்லாஹ்வை நிராகரித்ததனாலும் தூதர்களை பின்பற்றாமல் விட்ட காரணத்தினால் ஆகும். நாம் உங்களுக்கு அல்லாஹ்வை நினைவூட்டுவதையா துர்ச்சகுனமாகக் கருதுகிறீர்கள்? மாறாக நீங்கள் நிராகரிப்பான செயல்கள் மற்றும் பாவங்களில் ஈடுபட்டு வரம்புமீறும் மக்களாக இருக்கின்றீர்கள்.” info
التفاسير:

external-link copy
20 : 36

وَجَآءَ مِنْ اَقْصَا الْمَدِیْنَةِ رَجُلٌ یَّسْعٰی ؗ— قَالَ یٰقَوْمِ اتَّبِعُوا الْمُرْسَلِیْنَ ۟ۙ

36.20. தனது சமூகம் தூதர்களை பொய்ப்பித்து அவர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுப்பதன் மூலம் அவர்களுக்கு ஏற்படும் விபரீதத்தைப் பயந்ததனால் ஊரின் தூரமான இடத்திலிருந்து ஒருவர் விரைவாக வந்து கூறினார்: “என் சமூகத்தினரே! இத்தூதர்கள் கொண்டுவந்ததைப் பின்பற்றுங்கள். info
التفاسير:

external-link copy
21 : 36

اتَّبِعُوْا مَنْ لَّا یَسْـَٔلُكُمْ اَجْرًا وَّهُمْ مُّهْتَدُوْنَ ۟

36.21. -என் சமூகத்தினரே!- தாம் கொண்டுவந்ததை கூறுவதற்காக உங்களிடம் எந்த கூலியையும் எதிர்பார்க்காத இந்த தூதர்களைப் பின்பற்றுங்கள். அவர்கள் அல்லாஹ்விடமிருந்து வஹியின் மூலம் எடுத்துரைக்கும் விஷயங்களில் நேர்வழிபெற்றவர்களாக இருக்கின்றார்கள். இவ்வாறு இருப்பவர்களே பின்பற்றத் தகுதியானவர்கள்.” info
التفاسير:

external-link copy
22 : 36

وَمَا لِیَ لَاۤ اَعْبُدُ الَّذِیْ فَطَرَنِیْ وَاِلَیْهِ تُرْجَعُوْنَ ۟

36.22. நலம் நாடிய அந்த மனிதர் தொடர்ந்து கூறினார்: “என்னைப் படைத்த அல்லாஹ்வை வணங்குவதை விட்டும் என்னைத் தடுப்பது எது? உங்களைப் படைத்த இறைவனை வணங்குவதை விட்டும் உங்களைத் தடுப்பது எது? கூலி கொடுக்கப்படுவதற்காக மறுமை நாளில் நீங்கள் அவன் பக்கமே திரும்ப வேண்டும். info
التفاسير:

external-link copy
23 : 36

ءَاَتَّخِذُ مِنْ دُوْنِهٖۤ اٰلِهَةً اِنْ یُّرِدْنِ الرَّحْمٰنُ بِضُرٍّ لَّا تُغْنِ عَنِّیْ شَفَاعَتُهُمْ شَیْـًٔا وَّلَا یُنْقِذُوْنِ ۟ۚ

36.23. என்னைப் படைத்த அல்லாஹ்வை விடுத்து நான் அநியாயமாக மற்றவர்களை தெய்வங்களாக்கிக் கொள்வேனா? அளவிலாக் கருணையாளன் எனக்கு ஏதேனும் தீங்கிழைக்க நாடினால் இந்த தெய்வங்களின் பரிந்துரைகள் எனக்கு எந்தப் பயனையும் அளிக்காது. அவை எனக்கு பலனளிக்கவோ, தீங்கிழைக்கவோ சக்தி பெறாது. நான் நிராகரித்த நிலையிலேயே இறந்தால் அல்லாஹ் எனக்கு நாடியிருக்கும் தீங்கிலிருந்து என்னைக் காப்பாற்ற அவை சக்தி பெறாது. info
التفاسير:

external-link copy
24 : 36

اِنِّیْۤ اِذًا لَّفِیْ ضَلٰلٍ مُّبِیْنٍ ۟

36.24. நிச்சயமாக நான் அவற்றை அல்லாஹ் அல்லாத தெய்வங்களைாக எடுத்துக்கொண்டால், வணக்கத்திற்குத் தகுதியானவனை வணங்குவதை விட்டுவிட்டு தகுதியற்றவர்களை வணங்கி தெளிவான வழிகேட்டில் வீழ்ந்து விடுவேன். info
التفاسير:

external-link copy
25 : 36

اِنِّیْۤ اٰمَنْتُ بِرَبِّكُمْ فَاسْمَعُوْنِ ۟ؕ

36.25. -என் சமூகமே!- நிச்சயமாக நான் என் இறைவனும் உங்கள் அனைவரின் இறைவனுமான அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டேன். எனவே நான் கூறுவதை காதுகொடுத்துக் கேளுங்கள். உங்களின் கொலை அச்சுறுத்தலை நான் பொருட்படுத்த மாட்டேன்.” அவர்கள் அந்த மனிதரைக் கொன்றுவிட்டார்கள். அல்லாஹ் அவரை சுவனத்தில் பிரவேசிக்கச் செய்தான். info
التفاسير:

external-link copy
26 : 36

قِیْلَ ادْخُلِ الْجَنَّةَ ؕ— قَالَ یٰلَیْتَ قَوْمِیْ یَعْلَمُوْنَ ۟ۙ

36.26,27. அவரது வீரமரணத்தின் பின் அந்த மனிதரைக் கண்ணியப்படுத்தும்பொருட்டு அவரிடம், “சுவனத்தில் நுழைந்து விடுவீராக” என்று கூறப்பட்டது. அவர் சுவனத்தில் நுழைந்து அதிலுள்ள அருட்கொடைகளைக் கண்டவுடன் ஆசை கொண்டவராகக் கூறினார்: “என்னை பொய்ப்பித்து கொலை செய்த என் சமூகம் எனக்குக் கிடைத்த பாவமன்னிப்பையும் என் இறைவன் அளித்த கண்ணியத்தையும் அறிந்திருக்க வேண்டுமே! நான் நம்பிக்கைகொண்டது போல அவர்களும் நம்பிக்கைகொண்டிருப்பார்களே! நான் பெற்ற வெகுமதியை அவர்களும் பெற்றிருப்பார்களே! info
التفاسير:

external-link copy
27 : 36

بِمَا غَفَرَ لِیْ رَبِّیْ وَجَعَلَنِیْ مِنَ الْمُكْرَمِیْنَ ۟

36.26,27. தம் சமூகத்தினரால் கொல்லப்பட்ட அந்த மனிதரைக் கண்ணியப்படுத்தும்பொருட்டு அவரிடம், “சுவனத்தில் நுழைந்து விடுவீராக” என்று கூறப்பட்டது. அவர் சுவனத்தில் நுழைந்து அதிலுள்ள அருட்கொடைகளைக் கண்டவுடன் ஆசை கொண்டவராகக் கூறினார்: “என்னை நிராகரித்து கொலை செய்த என் சமூகம் எனக்குக் கிடைத்த பாவமன்னிப்பையும் என் இறைவன் அளித்த கண்ணியத்தையும் அறிந்திருக்க வேண்டுமே! நான் நம்பிக்கைகொண்டதுபோல அவர்களும் நம்பிக்கைகொண்டிருப்பார்களே! நான் பெற்ற வெகுமதியை அவர்களும் பெற்றிருப்பார்களே! info
التفاسير:
Beberapa Faedah Ayat-ayat di Halaman Ini:
• أهمية القصص في الدعوة إلى الله.
1. அல்லாஹ்வின்பால் அழைக்கும் பணியில் சம்பவங்களின் முக்கியத்துவம் தெளிவாகிறது. info

• الطيرة والتشاؤم من أعمال الكفر.
2. துர்ச்சகுனம் பார்ப்பது நிராகரிப்பான செயல்களில் ஒன்றாகும். info

• النصح لأهل الحق واجب .
3. சத்தியவாதிகளுக்கு நலம் நாடுவது கட்டாயமாகும். info

• حب الخير للناس صفة من صفات أهل الإيمان.
4. மக்களுக்கு நன்மையை விரும்புவது நம்பிக்கையாளர்களின் பண்புகளில் ஒன்றாகும். info