Terjemahan makna Alquran Alkarim - Terjemahan Al-Mukhtaṣar fī Tafsīr Al-Qur`ān Al-Karīm ke bahasa Tamil

external-link copy
14 : 36

اِذْ اَرْسَلْنَاۤ اِلَیْهِمُ اثْنَیْنِ فَكَذَّبُوْهُمَا فَعَزَّزْنَا بِثَالِثٍ فَقَالُوْۤا اِنَّاۤ اِلَیْكُمْ مُّرْسَلُوْنَ ۟

36.14. நாம் அவர்களிடம் முதலில், அவர்களை அல்லாஹ்வை ஒருமைப்படுத்துமாறும் அவனை வணங்குமாறும் அழைக்கக்கூடிய இரு தூதர்களை அனுப்பியபோது அவர்கள் இருவரையும் அவர்கள் பொய்ப்பித்தார்கள். எனவே நாம் அவர்களுடன் மூன்றாவது ஒரு தூதரை அனுப்பி அவர்கள் இருவரையும் வலுப்படுத்தினோம். மூன்று தூதர்களும் அந்த ஊர் மக்களிடம் கூறினார்கள்: “நிச்சயமாக நாங்கள் -மூவரும்- அல்லாஹ் ஒருவனே வணக்கத்திற்குரியவன். அவனுடைய மார்க்கத்தையே பின்பற்ற வேண்டும் என்பதன் பக்கம் உங்களை அழைக்கக்கூடிய அல்லாஹ்வின் தூதர்களாவோம்.” info
التفاسير:
Beberapa Faedah Ayat-ayat di Halaman Ini:
• أهمية القصص في الدعوة إلى الله.
1. அல்லாஹ்வின்பால் அழைக்கும் பணியில் சம்பவங்களின் முக்கியத்துவம் தெளிவாகிறது. info

• الطيرة والتشاؤم من أعمال الكفر.
2. துர்ச்சகுனம் பார்ப்பது நிராகரிப்பான செயல்களில் ஒன்றாகும். info

• النصح لأهل الحق واجب .
3. சத்தியவாதிகளுக்கு நலம் நாடுவது கட்டாயமாகும். info

• حب الخير للناس صفة من صفات أهل الإيمان.
4. மக்களுக்கு நன்மையை விரும்புவது நம்பிக்கையாளர்களின் பண்புகளில் ஒன்றாகும். info