Terjemahan makna Alquran Alkarim - Terjemahan Berbahasa Tamil - Abdul Hamid Baqawiy

Nomor Halaman:close

external-link copy
23 : 3

اَلَمْ تَرَ اِلَی الَّذِیْنَ اُوْتُوْا نَصِیْبًا مِّنَ الْكِتٰبِ یُدْعَوْنَ اِلٰی كِتٰبِ اللّٰهِ لِیَحْكُمَ بَیْنَهُمْ ثُمَّ یَتَوَلّٰی فَرِیْقٌ مِّنْهُمْ وَهُمْ مُّعْرِضُوْنَ ۟

23. (நபியே!) வேதத்தில் ஒரு பாகம் கொடுக்கப்பட்ட (யூதர்களாகிய இ)வர்களை நீர் கவனிக்கவில்லையா? (அவர்களுக்குள் ஏற்பட்ட விவகாரத்தைத் தீர்த்து வைக்க அவர்களிடமுள்ள) அல்லாஹ்வின் வேதத்தின் மூலமே தீர்ப்பளிக்க அவர்கள் அழைக்கப்பட்டபோது, அவர்களில் ஒரு பிரிவினர் இதைப் புறக்கணித்து விலகிக் கொண்டார்கள். info
التفاسير:

external-link copy
24 : 3

ذٰلِكَ بِاَنَّهُمْ قَالُوْا لَنْ تَمَسَّنَا النَّارُ اِلَّاۤ اَیَّامًا مَّعْدُوْدٰتٍ ۪— وَّغَرَّهُمْ فِیْ دِیْنِهِمْ مَّا كَانُوْا یَفْتَرُوْنَ ۟

24. இதன் காரணம்: ‘‘சில நாள்களைத் தவிர நரகத்தின் நெருப்பு நிச்சயமாக எங்களைத் தீண்டாது'' என்று அவர்கள் கூறிக்கொண்டிருப்பதுதான். மேலும், தங்கள் மார்க்க (விஷய)த்தில் பொய்யாகக் கற்பனை செய்து கூறி வந்ததும் அவர்களையே ஏமாற்றிவிட்டது. info
التفاسير:

external-link copy
25 : 3

فَكَیْفَ اِذَا جَمَعْنٰهُمْ لِیَوْمٍ لَّا رَیْبَ فِیْهِ ۫— وَوُفِّیَتْ كُلُّ نَفْسٍ مَّا كَسَبَتْ وَهُمْ لَا یُظْلَمُوْنَ ۟

25. (நபியே!) சந்தேகமற்ற ஒரு (விசாரணை) நாளில் நாம் அவர்களை ஒன்று சேர்த்து (அவர்களுடைய) ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அதன் செயலுக்குத் தக்க பலன் முழுமையாக அளிக்கப்பட்டால் (அவர்களின் நிலைமை) எப்படி இருக்கும்? அவர்கள் (தங்கள் பிரதிபலனை அடைவதில்) சிறிதும் அநியாயம் செய்யப்படமாட்டார்கள். info
التفاسير:

external-link copy
26 : 3

قُلِ اللّٰهُمَّ مٰلِكَ الْمُلْكِ تُؤْتِی الْمُلْكَ مَنْ تَشَآءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَآءُ ؗ— وَتُعِزُّ مَنْ تَشَآءُ وَتُذِلُّ مَنْ تَشَآءُ ؕ— بِیَدِكَ الْخَیْرُ ؕ— اِنَّكَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟

26. (நபியே! பிரார்த்தித்து) கூறுவீராக: ‘‘எங்கள் அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ விரும்பியவர்களுக்கு ஆட்சியைக் கொடுக்கிறாய். நீ விரும்பியவர்களிடமிருந்து ஆட்சியை நீக்கி விடுகிறாய். நீ விரும்பியவர்களை கண்ணியப்படுத்துகிறாய். நீ விரும்பியவர்களை இழிவுபடுத்துகிறாய். நன்மைகள் அனைத்தும் உன் கையில் இருக்கின்றன. நிச்சயமாக நீ அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன் ஆவாய். info
التفاسير:

external-link copy
27 : 3

تُوْلِجُ الَّیْلَ فِی النَّهَارِ وَتُوْلِجُ النَّهَارَ فِی الَّیْلِ ؗ— وَتُخْرِجُ الْحَیَّ مِنَ الْمَیِّتِ وَتُخْرِجُ الْمَیِّتَ مِنَ الْحَیِّ ؗ— وَتَرْزُقُ مَنْ تَشَآءُ بِغَیْرِ حِسَابٍ ۟

27. நீதான் இரவைப் பகலில் நுழையவைக்கிறாய். நீதான் பகலை இரவில் நுழையவைக்கிறாய். இறந்ததிலிருந்து உயிருள்ளதை வெளியாக்குவதும் நீயே! உயிருள்ளதிலிருந்து இறந்ததை வெளியாக்குவதும் நீயே! நீ விரும்பியவர்களுக்கு கணக்கின்றியே அளிக்கிறாய்.'' info
التفاسير:

external-link copy
28 : 3

لَا یَتَّخِذِ الْمُؤْمِنُوْنَ الْكٰفِرِیْنَ اَوْلِیَآءَ مِنْ دُوْنِ الْمُؤْمِنِیْنَ ۚ— وَمَنْ یَّفْعَلْ ذٰلِكَ فَلَیْسَ مِنَ اللّٰهِ فِیْ شَیْءٍ اِلَّاۤ اَنْ تَتَّقُوْا مِنْهُمْ تُقٰىةً ؕ— وَیُحَذِّرُكُمُ اللّٰهُ نَفْسَهٗ ؕ— وَاِلَی اللّٰهِ الْمَصِیْرُ ۟

28. நம்பிக்கையாளர்கள் (தங்களைப் போன்ற) நம்பிக்கையாளர்களை விடுத்து நிராகரிப்பவர்களைத் தங்களுக்குப் பாதுகாவலர்களாக ஆக்கிக்கொள்ள வேண்டாம். அவர்களிலிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காகவே தவிர எவரேனும் இவ்வாறு செய்தால் அவர்களுக்கு அல்லாஹ்விடத்தில் எத்தகைய சம்பந்தமுமில்லை. அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களுக்கு (அச்சமூட்டி) எச்சரிக்கை செய்கிறான். (நீங்கள்) அல்லாஹ்விடம்தான் (இறுதியாகச்) செல்ல வேண்டியதிருக்கிறது. info
التفاسير:

external-link copy
29 : 3

قُلْ اِنْ تُخْفُوْا مَا فِیْ صُدُوْرِكُمْ اَوْ تُبْدُوْهُ یَعْلَمْهُ اللّٰهُ ؕ— وَیَعْلَمُ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ— وَاللّٰهُ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟

29. (நபியே!) கூறுவீராக: உங்கள் மனங்களில் நீங்கள் மறைத்துக் கொண்டாலும் அல்லது அதை வெளிப்படுத்தினாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிவான். (இது மட்டிலுமா?) வானங்களில் உள்ளவற்றையும், பூமியில் உள்ளவற்றையும் அவன் அறிகிறான். (அறிவது மட்டுமல்ல) அல்லாஹ் (இவை) அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன். info
التفاسير: