Terjemahan makna Alquran Alkarim - Terjemahan Berbahasa Tamil - Abdul Hamid Baqawiy

Nomor Halaman:close

external-link copy
122 : 3

اِذْ هَمَّتْ طَّآىِٕفَتٰنِ مِنْكُمْ اَنْ تَفْشَلَا ۙ— وَاللّٰهُ وَلِیُّهُمَا ؕ— وَعَلَی اللّٰهِ فَلْیَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ ۟

122. உங்களில் இரு பிரிவினர் தைரியமிழந்து (‘உஹுத்' என்னும் போர்க்களத்தை விட்டுச் சென்று) விட(லாமா என்று) இருந்தனர். அல்லாஹ் அவர்களின் உதவியாளன் (பாதுகாவலன்). (ஆகவே,) நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைப்பார்களாக! info
التفاسير:

external-link copy
123 : 3

وَلَقَدْ نَصَرَكُمُ اللّٰهُ بِبَدْرٍ وَّاَنْتُمْ اَذِلَّةٌ ۚ— فَاتَّقُوا اللّٰهَ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ ۟

123. பத்ரில் (நடந்த போரில்) நீங்கள் (எதிரிகளைவிட ஆயுதத்திலும், தொகையிலும்) குறைந்தவர்களாக இருந்த சமயத்தில் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தான். ஆகவே, அல்லாஹ்வுக்கு நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அவனுக்குப் பயந்து (வழிப்பட்டு) நடங்கள். info
التفاسير:

external-link copy
124 : 3

اِذْ تَقُوْلُ لِلْمُؤْمِنِیْنَ اَلَنْ یَّكْفِیَكُمْ اَنْ یُّمِدَّكُمْ رَبُّكُمْ بِثَلٰثَةِ اٰلٰفٍ مِّنَ الْمَلٰٓىِٕكَةِ مُنْزَلِیْنَ ۟ؕ

124. (நபியே! அப்பொழுது) நீர் நம்பிக்கையாளர்களை நோக்கி ‘‘(வானத்திலிருந்து) இறக்கப்பட்ட மூவாயிரம் வானவர்களால் உங்கள் இறைவன் உங்களுக்கு உதவி செய்வது உங்களுக்குப் போதாதா?'' என்று கூறியதையும் நினைவு கூருவீராக! info
التفاسير:

external-link copy
125 : 3

بَلٰۤی ۙ— اِنْ تَصْبِرُوْا وَتَتَّقُوْا وَیَاْتُوْكُمْ مِّنْ فَوْرِهِمْ هٰذَا یُمْدِدْكُمْ رَبُّكُمْ بِخَمْسَةِ اٰلٰفٍ مِّنَ الْمَلٰٓىِٕكَةِ مُسَوِّمِیْنَ ۟

125. நீங்கள் (அல்லாஹ்வுக்குப்) பயந்து பொறுமையுடன் இருந்தால், இதே சமயத்தில் (எதிரிகள்) உங்கள் மீது அடர்ந்தேறிய போதிலும் (மூவாயிரம் என்ன?) அடையாள மிடப்பட்ட ஐயாயிரம் வானவர்களால் உங்கள் இறைவன் உங்களுக்கு உதவிசெய்வான். info
التفاسير:

external-link copy
126 : 3

وَمَا جَعَلَهُ اللّٰهُ اِلَّا بُشْرٰی لَكُمْ وَلِتَطْمَىِٕنَّ قُلُوْبُكُمْ بِهٖ ؕ— وَمَا النَّصْرُ اِلَّا مِنْ عِنْدِ اللّٰهِ الْعَزِیْزِ الْحَكِیْمِ ۟ۙ

126. உங்கள் உள்ளங்கள் திருப்தியடையவும், உங்களுக்கு ஒரு நற்செய்தியாகவுமே அல்லாஹ் இவ்வுதவியைப் புரிந்தான். (அனைவரையும்) மிகைத்தவனும், ஞானமுடையவனுமாகிய அல்லாஹ்விடமிருந்தே தவிர (வேறுயாரிடம் இருந்தும் இந்த) உதவி (உங்களுக்கு) கிடைக்கவில்லை. (கிடைக்கவும் செய்யாது.) info
التفاسير:

external-link copy
127 : 3

لِیَقْطَعَ طَرَفًا مِّنَ الَّذِیْنَ كَفَرُوْۤا اَوْ یَكْبِتَهُمْ فَیَنْقَلِبُوْا خَآىِٕبِیْنَ ۟

127. (அவன் உங்களுக்கு இவ்வுதவி புரிந்ததெல்லாம்) நிராகரிப்பவர்களில் ஒரு பாகத்தினரைக் குறைக்கவோ அல்லது அவர்கள் சிறுமைப்பட்டு (தோல்வி அடைந்தவர்களாகத்) திரும்பிச் சென்று விடுவதற்காகவேதான். info
التفاسير:

external-link copy
128 : 3

لَیْسَ لَكَ مِنَ الْاَمْرِ شَیْءٌ اَوْ یَتُوْبَ عَلَیْهِمْ اَوْ یُعَذِّبَهُمْ فَاِنَّهُمْ ظٰلِمُوْنَ ۟

128. (நபியே!) இவ்விஷயத்தில் உமக்கு ஓர் அதிகாரமுமில்லை. (அல்லாஹ்) அவர் களை (இஸ்லாமைத் தழுவும்படிச் செய்து) மன்னித்துவிடலாம். அல்லது அவர்கள் அநியாயக்காரர்களாக இருப்பதனால் அவர்களை வேதனையும் செய்யலாம். info
التفاسير:

external-link copy
129 : 3

وَلِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ— یَغْفِرُ لِمَنْ یَّشَآءُ وَیُعَذِّبُ مَنْ یَّشَآءُ ؕ— وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟۠

129. (ஏனென்றால்) வானங்களில் உள்ளவை அனைத்தும், பூமியிலுள்ளவை அனைத்தும் அல்லாஹ்வுக்குரியனவே! அவன் விரும்பியவர்களை மன்னிப்பான்; அவன் விரும்பியவர்களைத் தண்டிப்பான். ஆனால், அல்லாஹ் மிக மன்னிப்பவன் மகா கருணையாளன் ஆவான். info
التفاسير:

external-link copy
130 : 3

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَاْكُلُوا الرِّبٰۤوا اَضْعَافًا مُّضٰعَفَةً ۪— وَّاتَّقُوا اللّٰهَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ ۟ۚ

130. நம்பிக்கையாளர்களே! (அசலுக்கு அதிகமாகவும் வட்டிக்கு வட்டி போட்டும்) இரட்டித்துக் கொண்டே அதிகரிக்கக்கூடிய வட்டியை (வாங்கி)த் தின்னாதீர்கள். அல்லாஹ்வுக்குப் பயந்து (இதைத் தவிர்த்துக் கொண்டால்) நீங்கள் வெற்றியடைவீர்கள். info
التفاسير:

external-link copy
131 : 3

وَاتَّقُوا النَّارَ الَّتِیْۤ اُعِدَّتْ لِلْكٰفِرِیْنَ ۟ۚ

131. (நரக) நெருப்பிற்குப் பயந்துகொள்ளுங்கள். அது (இறைவனுடைய இக்கட்டளையை) நிராகரிப்பவர்களுக்காக தயார்படுத்தப்பட்டுள்ளது. info
التفاسير:

external-link copy
132 : 3

وَاَطِیْعُوا اللّٰهَ وَالرَّسُوْلَ لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ ۟ۚ

132. அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் கீழ்ப்படிந்து நடங்கள். அதனால் நீங்கள் (அல்லாஹ்வின்) அன்பை அடையலாம். info
التفاسير: