क़ुरआन के अर्थों का अनुवाद - तमिल अनुवाद - अब्दुल हमीद बाक़वी

पृष्ठ संख्या:close

external-link copy
187 : 2

اُحِلَّ لَكُمْ لَیْلَةَ الصِّیَامِ الرَّفَثُ اِلٰی نِسَآىِٕكُمْ ؕ— هُنَّ لِبَاسٌ لَّكُمْ وَاَنْتُمْ لِبَاسٌ لَّهُنَّ ؕ— عَلِمَ اللّٰهُ اَنَّكُمْ كُنْتُمْ تَخْتَانُوْنَ اَنْفُسَكُمْ فَتَابَ عَلَیْكُمْ وَعَفَا عَنْكُمْ ۚ— فَالْـٰٔنَ بَاشِرُوْهُنَّ وَابْتَغُوْا مَا كَتَبَ اللّٰهُ لَكُمْ ۪— وَكُلُوْا وَاشْرَبُوْا حَتّٰی یَتَبَیَّنَ لَكُمُ الْخَیْطُ الْاَبْیَضُ مِنَ الْخَیْطِ الْاَسْوَدِ مِنَ الْفَجْرِ ۪— ثُمَّ اَتِمُّوا الصِّیَامَ اِلَی الَّیْلِ ۚ— وَلَا تُبَاشِرُوْهُنَّ وَاَنْتُمْ عٰكِفُوْنَ فِی الْمَسٰجِدِ ؕ— تِلْكَ حُدُوْدُ اللّٰهِ فَلَا تَقْرَبُوْهَا ؕ— كَذٰلِكَ یُبَیِّنُ اللّٰهُ اٰیٰتِهٖ لِلنَّاسِ لَعَلَّهُمْ یَتَّقُوْنَ ۟

187. (நம்பிக்கையாளர்களே!) நோன்பு (நாள்களின்) இரவுகளில் நீங்கள் உங்கள் மனைவிகளுடன் வீடு கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கிறீர்கள். (நோன்புடைய காலத்தில் இஷாவுக்குப் பின்னர் உங்கள் மனைவிகளுடன் கூடாமலும், ஒரு பொருளை புசிக்காமலும் இருந்து) நிச்சயமாக நீங்கள் உங்களைத் துன்பத்திற்குள்ளாக்கிக் கொண்டீர்கள் என்பதை அல்லாஹ் அறிந்து உங்கள் மீது இரக்கமுற்று உங்கள் சிரமத்தை நீக்கிவிட்டான். ஆகவே, இனி இருள் நீங்கி விடியற்காலை (ஃபஜ்ர்) ஆகிவிட்டது என்று உங்ளுக்குத் தெளிவாகும்வரை (நோன்பின் இரவு காலங்களில் உங்கள்) மனைவிகளுடன் சேர்ந்து அல்லாஹ் உங்களுக்கு(ச் சந்ததியாக) விதித்திருப்பதைத் தேடிக் கொள்ளுங்கள். இன்னும் (அந்நேரங்களில்) புசியுங்கள், பருகுங்கள். (கிழக்கு வெளுத்த) பின்பு இரவு (ஆரம்பமாகும்) வரை (மேலே கூறியவற்றைத் தவிர்த்து) நோன்புகளை (நோற்று) முழுமையாக்குங்கள். ஆயினும், நீங்கள் (வணங்குவதற்காக) மஸ்ஜிதுகளில் தங்கி (இஃதிகாஃப்) இருக்கும்போது (உங்கள்) மனைவிகளுடன் கூடாதீர்கள். இவை அல்லாஹ்வுடைய திட்டமான சட்ட வரம்புகளாகும். ஆதலால், அவ்வரம்புகளை (மீற) நெருங்காதீர்கள். மனிதர்கள் இறையச்சமுடையவர்களாக ஆவதற்காக அல்லாஹ் தன் வசனங்களை அவர்களுக்கு இவ்வாறு தெளிவாக விவரிக்கிறான். info
التفاسير:

external-link copy
188 : 2

وَلَا تَاْكُلُوْۤا اَمْوَالَكُمْ بَیْنَكُمْ بِالْبَاطِلِ وَتُدْلُوْا بِهَاۤ اِلَی الْحُكَّامِ لِتَاْكُلُوْا فَرِیْقًا مِّنْ اَمْوَالِ النَّاسِ بِالْاِثْمِ وَاَنْتُمْ تَعْلَمُوْنَ ۟۠

188. (மேலும்,) உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருள்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள். (உங்கள் வாதம் பொய்யானதென) நீங்கள் அறிந்திருந்தும் (இதர) மனிதர்களின் பொருள்களில் எதையும் பாவமான வழியில் (அநியாயமாக லஞ்சம் கொடுத்து) அபகரித்துக்கொள்ள அதிகாரிகளிடம் செல்லாதீர்கள். info
التفاسير:

external-link copy
189 : 2

یَسْـَٔلُوْنَكَ عَنِ الْاَهِلَّةِ ؕ— قُلْ هِیَ مَوَاقِیْتُ لِلنَّاسِ وَالْحَجِّ ؕ— وَلَیْسَ الْبِرُّ بِاَنْ تَاْتُوا الْبُیُوْتَ مِنْ ظُهُوْرِهَا وَلٰكِنَّ الْبِرَّ مَنِ اتَّقٰی ۚ— وَاْتُوا الْبُیُوْتَ مِنْ اَبْوَابِهَا ۪— وَاتَّقُوا اللّٰهَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ ۟

189. (நபியே! மாதந்தோறும் பிறந்து, வளர்ந்து, தேயும்) பிறைகளைப்பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். (அதற்கு) நீர் கூறுவீராக: ‘‘அவை மனிதர்களுக்கு ஒவ்வொரு மாதத்தையும் ஹஜ்ஜூடைய காலங்களையும் அறிவிக்கக்கூடியவை.'' மேலும், (நம்பிக்கையாளர்களே! இஹ்ராம் கட்டிய) நீங்கள் (உங்கள்) வீடுகளுக்கு அவற்றின் பின்புறமாக வந்து விடுவதனால் நல்லவர்களாக ஆகிவிட மாட்டீர்கள். எனினும், எவர் அல்லாஹ்வுக்குப் பயந்து நடக்கிறாரோ அவரே நல்லவர். ஆதலால், நீங்கள் (உங்கள்) வீடுகளுக்கு அவற்றின் தலை வாசல்களின் வழியாக வாருங்கள். அல்லாஹ்வுக்குப் பயந்தும் நடந்துகொள்ளுங்கள். இதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள். info
التفاسير:

external-link copy
190 : 2

وَقَاتِلُوْا فِیْ سَبِیْلِ اللّٰهِ الَّذِیْنَ یُقَاتِلُوْنَكُمْ وَلَا تَعْتَدُوْا ؕ— اِنَّ اللّٰهَ لَا یُحِبُّ الْمُعْتَدِیْنَ ۟

190. உங்களை எதிர்த்து போர் புரிய முற்பட்டோரை அல்லாஹ்வுடைய பாதையில் நீங்களும் எதிர்த்து போர் புரியுங்கள். ஆனால், நீங்கள் அத்துமீறாதீர்கள். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் அத்துமீறுபவர்களை நேசிப்பதில்லை. info
التفاسير: