क़ुरआन के अर्थों का अनुवाद - तमिल अनुवाद - अब्दुल हमीद बाक़वी

पृष्ठ संख्या:close

external-link copy
142 : 2

سَیَقُوْلُ السُّفَهَآءُ مِنَ النَّاسِ مَا وَلّٰىهُمْ عَنْ قِبْلَتِهِمُ الَّتِیْ كَانُوْا عَلَیْهَا ؕ— قُلْ لِّلّٰهِ الْمَشْرِقُ وَالْمَغْرِبُ ؕ— یَهْدِیْ مَنْ یَّشَآءُ اِلٰی صِرَاطٍ مُّسْتَقِیْمٍ ۟

142. (நபியே! ‘‘முஸ்லிம்கள்) முன்நோக்கி வந்த கிப்லாவிலிருந்து அவர்களைத் திருப்பி விட்டது எது?'' என மனிதர்களில் சில அறிவீனர்கள் கேட்க ஆரம்பிப்பார்கள். (அதற்கு) நீர் கூறுவீராக: ‘‘கிழக்குத் திசையும் மேற்குத் திசையும் அல்லாஹ்வுக்குரியதே! அவன் விரும்புகிறவர்களை நேரான வழியில் செலுத்துவான்.'' info
التفاسير:

external-link copy
143 : 2

وَكَذٰلِكَ جَعَلْنٰكُمْ اُمَّةً وَّسَطًا لِّتَكُوْنُوْا شُهَدَآءَ عَلَی النَّاسِ وَیَكُوْنَ الرَّسُوْلُ عَلَیْكُمْ شَهِیْدًا ؕ— وَمَا جَعَلْنَا الْقِبْلَةَ الَّتِیْ كُنْتَ عَلَیْهَاۤ اِلَّا لِنَعْلَمَ مَنْ یَّتَّبِعُ الرَّسُوْلَ مِمَّنْ یَّنْقَلِبُ عَلٰی عَقِبَیْهِ ؕ— وَاِنْ كَانَتْ لَكَبِیْرَةً اِلَّا عَلَی الَّذِیْنَ هَدَی اللّٰهُ ؕ— وَمَا كَانَ اللّٰهُ لِیُضِیْعَ اِیْمَانَكُمْ ؕ— اِنَّ اللّٰهَ بِالنَّاسِ لَرَءُوْفٌ رَّحِیْمٌ ۟

143. (நம்பிக்கையாளர்களே!) அவ்வாறே (ஏற்றத்தாழ்வற்ற) நடுநிலையான வகுப்பினராகவும் நாம் உங்களை ஆக்கினோம். ஆகவே, நீங்கள் (மற்ற) மனிதர்களுக்கு (வழிகாட்டக்கூடிய) சாட்சிகளாக இருங்கள். (நம்) தூதர் உங்களுக்கு (வழி காட்டக் கூடிய) சாட்சியாக இருப்பார். (நபியே!) நீர் (இதுவரை முன்னோக்கித் தொழுதுகொண்டு) இருந்த (பைத்துல் முகத்தஸின்) திசையை (மாற்றாமல் நீர் அதையே நோக்கித் தொழுது வரும்படி இதுவரை) நாம் விட்டு வைத்திருந்ததெல்லாம் (அதை மாற்றிய பின் நம்) தூதரைப் பின்பற்றுபவர் யார்? பின்பற்றாமல் தன் குதிங்கால் புறமாகவே (புறமுதுகிட்டு) திரும்பி(ச் சென்று) விடுகிறவர் யார்? என்பதை நாம் அறி(வித்து விடு) வதற்காகத்தான். ஆனால், எவர்களை அல்லாஹ் நேர்வழியில் நடத்துகிறானோ அவர்களைத் தவிர மற்றவர்களுக்கு அ(வ்வாறு கிப்லாவை மாற்றுவ)து நிச்சயமாக மிகப்பளுவாக இருக்கும். (நம்பிக்கையாளர்களே! இதற்கு முன்னர் நீங்கள் பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழுது வந்த) உங்கள் நம்பிக்கையையும் அல்லாஹ் வீணாக்கிவிட மாட்டான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிக இரக்கமுள்ளவன், மிகக் கருணையாளன் ஆவான். info
التفاسير:

external-link copy
144 : 2

قَدْ نَرٰی تَقَلُّبَ وَجْهِكَ فِی السَّمَآءِ ۚ— فَلَنُوَلِّیَنَّكَ قِبْلَةً تَرْضٰىهَا ۪— فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ ؕ— وَحَیْثُ مَا كُنْتُمْ فَوَلُّوْا وُجُوْهَكُمْ شَطْرَهٗ ؕ— وَاِنَّ الَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ لَیَعْلَمُوْنَ اَنَّهُ الْحَقُّ مِنْ رَّبِّهِمْ ؕ— وَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا یَعْمَلُوْنَ ۟

144. (நபியே!) உமது முகம் (பிரார்த்தனை செய்து) அடிக்கடி வானத்தை நோக்குவதை நாம் காண்கிறோம். ஆதலால், நீர் விரும்பும் கிப்லா(வாகிய மக்கா)வின் பக்கமே நாம் உம்மை நிச்சயமாகத் திருப்புகிறோம். எனவே, நீர் (தொழும்போது மக்காவிலுள்ள) ‘மஸ்ஜிதுல் ஹராமின்' பக்கமே உமது முகத்தைத் திருப்புவீராக. (நம்பிக்கையாளர்களே!) நீங்களும் எங்கிருந்த போதிலும் (தொழுகையில்) அதன் பக்கமே உங்கள் முகங்களைத் திருப்புங்கள். வேதம் கொடுக்கப்பட்ட (யூதர்களும், கிறிஸ்தவர்களும் (நீங்கள் மக்காவின் திசையளவில் திரும்பிய) ‘‘இது தங்கள் இறைவனிடமிருந்(து வந்)த உண்மை(யான உத்தரவு)தான்'' என நிச்சயமாக அறிவார்கள். (ஏனென்றால், அவ்வான்ற அவர்களுடைய வேதத்தில் இருக்கிறது. எனவே, உண்மையை மறைக்கும்) அவர்கள் செயலைப்பற்றி அல்லாஹ் பராமுகமாயில்லை. info
التفاسير:

external-link copy
145 : 2

وَلَىِٕنْ اَتَیْتَ الَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ بِكُلِّ اٰیَةٍ مَّا تَبِعُوْا قِبْلَتَكَ ۚ— وَمَاۤ اَنْتَ بِتَابِعٍ قِبْلَتَهُمْ ۚ— وَمَا بَعْضُهُمْ بِتَابِعٍ قِبْلَةَ بَعْضٍ ؕ— وَلَىِٕنِ اتَّبَعْتَ اَهْوَآءَهُمْ مِّنْ بَعْدِ مَا جَآءَكَ مِنَ الْعِلْمِ ۙ— اِنَّكَ اِذًا لَّمِنَ الظّٰلِمِیْنَ ۟ۘ

145. ஆகவே, (நபியே!) வேதம் கொடுக்கப்பட்ட (அ)வர்களிடம் (அவர்களை திருப்திபடுத்தக்கூடிய) அத்தாட்சிகள் அனைத்தையும் நீர் கொண்டுவந்த போதிலும் அவர்கள் உமது கிப்லாவைப் பின்பற்றப் போவதில்லை. நீரும் அவர்களுடைய கிப்லாவைப் பின்பற்றப் போவதில்லை. (வேதம் கொடுக்கப்பட்ட) அவர்களிலும் ஒருவர் மற்றொருவரின் கிப்லாவைப் பின்பற்றப் போவதுமில்லை. (ஆதலால், மக்காவை நோக்கித் தொழும்படி) உமது வஹ்யி(ன் மூலம் உத்தரவு) வந்ததன் பின்னரும் அவர்களுடைய விருப்பங்களை நீர் பின்பற்றினால் நிச்சயமாக நீரும் அநியாயக்காரர்களில் உள்ளவர்தான் (என்று கருதப்படுவீர்). info
التفاسير: