Traduction des sens du Noble Coran - La traduction tamoule - 'Umar Charîf

அல்அன்ஆம்

external-link copy
1 : 6

اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِیْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَجَعَلَ الظُّلُمٰتِ وَالنُّوْرَ ؕ۬— ثُمَّ الَّذِیْنَ كَفَرُوْا بِرَبِّهِمْ یَعْدِلُوْنَ ۟

புகழ் (எல்லாம்) வானங்களையும் பூமியையும் படைத்தவனாகிய; இன்னும், இருள்களையும் ஒளியையும் உண்டாக்கிய அல்லாஹ்விற்குரியதே! (இதற்குப்) பிறகு(ம்), நிராகரிப்பவர்கள் தங்கள் இறைவனுக்கு (பொய்யான தெய்வங்களை வணக்க வழிபாட்டில்) சமமாக்குகிறார்கள். info
التفاسير:

external-link copy
2 : 6

هُوَ الَّذِیْ خَلَقَكُمْ مِّنْ طِیْنٍ ثُمَّ قَضٰۤی اَجَلًا ؕ— وَاَجَلٌ مُّسَمًّی عِنْدَهٗ ثُمَّ اَنْتُمْ تَمْتَرُوْنَ ۟

அவன்தான் உங்களைக் களிமண்ணிலிருந்து படைத்தான். பிறகு, (உங்கள் மரணத்திற்கு) ஒரு தவணையை விதித்தான். இன்னும், அவனிடம் (மறுமை நிகழ்வதற்கு வேறு ஒரு) குறிப்பிட்ட தவணையும் உண்டு. (இதற்குப்) பிறகு(ம்), நீங்கள் (அல்லாஹ் உங்களை மறுமையில் எழுப்புவான் என்பதில்) சந்தேகிக்கிறீர்கள். info
التفاسير:

external-link copy
3 : 6

وَهُوَ اللّٰهُ فِی السَّمٰوٰتِ وَفِی الْاَرْضِ ؕ— یَعْلَمُ سِرَّكُمْ وَجَهْرَكُمْ وَیَعْلَمُ مَا تَكْسِبُوْنَ ۟

இன்னும், அவன்தான் வானங்களிலும், பூமியிலும் வணங்கப்படுவதற்கு தகுதியான அல்லாஹ் ஆவான். (அவன்) உங்கள் இரகசியத்தையும் உங்கள் பகிரங்கத்தையும் நன்கறிவான். இன்னும், நீங்கள் செய்வதையும் நன்கறிவான். info
التفاسير:

external-link copy
4 : 6

وَمَا تَاْتِیْهِمْ مِّنْ اٰیَةٍ مِّنْ اٰیٰتِ رَبِّهِمْ اِلَّا كَانُوْا عَنْهَا مُعْرِضِیْنَ ۟

அவர்களுக்கு தங்கள் இறைவனின் வசனங்களிலிருந்து வசனம் ஏதும் வருவதில்லை, அதை அவர்கள் புறக்கணிப்பவர்களாக இருந்தே தவிர. info
التفاسير:

external-link copy
5 : 6

فَقَدْ كَذَّبُوْا بِالْحَقِّ لَمَّا جَآءَهُمْ ؕ— فَسَوْفَ یَاْتِیْهِمْ اَنْۢبٰٓؤُا مَا كَانُوْا بِهٖ یَسْتَهْزِءُوْنَ ۟

ஆக, அவர்கள் சத்தியத்தை, - அது அவர்களிடம் வந்தபோது - பொய்ப்பித்தனர். ஆக, அவர்கள் எதை கேலி செய்து கொண்டிருந்தார்களோ அதன் (உண்மை) செய்திகள் அவர்களிடம் விரைவில் வரும். info
التفاسير:

external-link copy
6 : 6

اَلَمْ یَرَوْا كَمْ اَهْلَكْنَا مِنْ قَبْلِهِمْ مِّنْ قَرْنٍ مَّكَّنّٰهُمْ فِی الْاَرْضِ مَا لَمْ نُمَكِّنْ لَّكُمْ وَاَرْسَلْنَا السَّمَآءَ عَلَیْهِمْ مِّدْرَارًا ۪— وَّجَعَلْنَا الْاَنْهٰرَ تَجْرِیْ مِنْ تَحْتِهِمْ فَاَهْلَكْنٰهُمْ بِذُنُوْبِهِمْ وَاَنْشَاْنَا مِنْ بَعْدِهِمْ قَرْنًا اٰخَرِیْنَ ۟

அவர்களுக்கு முன்னர் எத்தனையோ சமுதாயத்தை நாம் அழித்தோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? பூமியில் உங்களுக்கு நாம் வசதியளிக்காத அளவு அவர்களுக்கு வசதி அளித்தோம்; இன்னும், அவர்கள் மீது தாரை தாரையாக மழையை அனுப்பினோம்; இன்னும், நதிகளை அவர்களுக்குக் கீழ் ஓடும்படி ஆக்கினோம். ஆக, அவர்களுடைய பாவங்களினால் அவர்களை அழித்தோம். இன்னும், அவர்களுக்குப் பின்னர் வேறு சமுதாயத்தை உருவாக்கினோம். info
التفاسير:

external-link copy
7 : 6

وَلَوْ نَزَّلْنَا عَلَیْكَ كِتٰبًا فِیْ قِرْطَاسٍ فَلَمَسُوْهُ بِاَیْدِیْهِمْ لَقَالَ الَّذِیْنَ كَفَرُوْۤا اِنْ هٰذَاۤ اِلَّا سِحْرٌ مُّبِیْنٌ ۟

ஏடுகளில் (எழுதப்பட்ட) ஒரு வேதத்தையே நாம் உம்மீது இறக்கி, அதை அவர்கள் (உம்மிடமிருந்து) தங்கள் கரங்களால் தொட்டுப் பார்த்தாலும், “இது தெளிவான சூனியமே தவிர (உண்மையான வேதம்) இல்லை” என்று அந்த நிராகரிப்பாளர்கள் திட்டமாகக் கூறுவார்கள். info
التفاسير:

external-link copy
8 : 6

وَقَالُوْا لَوْلَاۤ اُنْزِلَ عَلَیْهِ مَلَكٌ ؕ— وَلَوْ اَنْزَلْنَا مَلَكًا لَّقُضِیَ الْاَمْرُ ثُمَّ لَا یُنْظَرُوْنَ ۟

இன்னும், “அவர் மீது ஒரு வானவர் இறக்கப்பட வேண்டாமா?” என்று அவர்கள் கூறினார்கள். நாம் ஒரு வானவரை இறக்கினால் (அவர்களது) காரியம் முடிக்கப்பட்டு விடும். பிறகு, அவர்களுக்கு அவகாசம் அளிக்கப்படாது. info
التفاسير: