Traduction des sens du Noble Coran - La traduction tamoule - 'Umar Charîf

Numéro de la page:close

external-link copy
46 : 11

قَالَ یٰنُوْحُ اِنَّهٗ لَیْسَ مِنْ اَهْلِكَ ۚ— اِنَّهٗ عَمَلٌ غَیْرُ صَالِحٍ ۗ— فَلَا تَسْـَٔلْنِ مَا لَیْسَ لَكَ بِهٖ عِلْمٌ ؕ— اِنِّیْۤ اَعِظُكَ اَنْ تَكُوْنَ مِنَ الْجٰهِلِیْنَ ۟

(அல்லாஹ்) கூறினான்: “நூஹே! அவன் உமது குடும்பத்தைச் சேர்ந்தவன் இல்லை. நிச்சயமாக இ(வ்வாறு கேட்ப)து நல்ல செயல் அல்ல. உமக்கு ஞானமில்லாததை என்னிடம் கேட்காதீர். அறியாதவர்களில் நீர் ஆகுவதிலிருந்து (விலகி இருக்க வேண்டுமென) நிச்சயமாக நான் உமக்கு உபதேசிக்கிறேன்.” info
التفاسير:

external-link copy
47 : 11

قَالَ رَبِّ اِنِّیْۤ اَعُوْذُ بِكَ اَنْ اَسْـَٔلَكَ مَا لَیْسَ لِیْ بِهٖ عِلْمٌ ؕ— وَاِلَّا تَغْفِرْ لِیْ وَتَرْحَمْنِیْۤ اَكُنْ مِّنَ الْخٰسِرِیْنَ ۟

(உடனே நூஹ்) கூறினார்: “என் இறைவா! எனக்கு ஞானமில்லாததை உன்னிடம் நான் கேட்பதை விட்டும் உன்னிடம் பாதுகாவல் கோருகிறேன். நீ என்னை மன்னிக்கவில்லையெனில், இன்னும், எனக்கு நீ கருணை காட்டவில்லையெனில் நான் நஷ்டவாளிகளில் ஆகிவிடுவேன்.” info
التفاسير:

external-link copy
48 : 11

قِیْلَ یٰنُوْحُ اهْبِطْ بِسَلٰمٍ مِّنَّا وَبَرَكٰتٍ عَلَیْكَ وَعَلٰۤی اُمَمٍ مِّمَّنْ مَّعَكَ ؕ— وَاُمَمٌ سَنُمَتِّعُهُمْ ثُمَّ یَمَسُّهُمْ مِّنَّا عَذَابٌ اَلِیْمٌ ۟

(அல்லாஹ்வின் புறத்திலிருந்து) கூறப்பட்டது: “நூஹே! உம்மீதும் உம்முடன் இருக்கின்ற உயிரினங்கள் மீதும் நம் புறத்திலிருந்து ஸலாம் – ஈடேற்றத்துடன், இன்னும், அபிவிருத்திகளுடன் நீர் இறங்குவீராக! இன்னும் (சில) சமுதாயங்கள் வருவார்கள். அவர்களுக்கு (சற்று) சுகமான வாழ்வளிப்போம். பிறகு, அவர்களை நம்மிடமிருந்து துன்புறுத்தக்கூடிய தண்டனை வந்தடையும்.” info
التفاسير:

external-link copy
49 : 11

تِلْكَ مِنْ اَنْۢبَآءِ الْغَیْبِ نُوْحِیْهَاۤ اِلَیْكَ ۚ— مَا كُنْتَ تَعْلَمُهَاۤ اَنْتَ وَلَا قَوْمُكَ مِنْ قَبْلِ هٰذَا ۛؕ— فَاصْبِرْ ۛؕ— اِنَّ الْعَاقِبَةَ لِلْمُتَّقِیْنَ ۟۠

(நபியே!) இவை (உமக்கு) மறைவான சரித்திரங்களில் உள்ளவையாகும். இவற்றை உமக்கு வஹ்யி அறிவிக்கிறோம். இதற்கு முன்னர் நீரோ அல்லது உமது மக்களோ இவற்றை அறிந்திருக்கவில்லை. ஆகவே, பொறுமையாக (உறுதியுடன்) இருப்பீராக! நிச்சயமாக (நல்ல) முடிவு அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்கே. info
التفاسير:

external-link copy
50 : 11

وَاِلٰی عَادٍ اَخَاهُمْ هُوْدًا ؕ— قَالَ یٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَكُمْ مِّنْ اِلٰهٍ غَیْرُهٗ ؕ— اِنْ اَنْتُمْ اِلَّا مُفْتَرُوْنَ ۟

‘ஆது’ சமுதாயத்திடம் அவர்களுடைய சகோதரர் -ஹூதை- (தூதராக அனுப்பினோம்). அவர் கூறினார்: “என் மக்களே! அல்லாஹ்வை வணங்குங்கள். அவனை அன்றி (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் யாரும் உங்களுக்கில்லை. நீங்கள் (உங்கள் கற்பனைக்கு ஏற்ப இறைவனைப் பற்றி பொய்யை) இட்டுக்கட்டுபவர்களாகவே தவிர இல்லை.. info
التفاسير:

external-link copy
51 : 11

یٰقَوْمِ لَاۤ اَسْـَٔلُكُمْ عَلَیْهِ اَجْرًا ؕ— اِنْ اَجْرِیَ اِلَّا عَلَی الَّذِیْ فَطَرَنِیْ ؕ— اَفَلَا تَعْقِلُوْنَ ۟

என் மக்களே! (எனது) இ(ந்)த (அழைப்பி)ற்காக நான் உங்களிடத்தில் ஒரு கூலியையும் கேட்கவில்லை. என் கூலி என்னை படைத்தவனின் மீதே தவிர (உங்கள் மீது) இல்லை. சிந்தித்துப் புரியமாட்டீர்களா? info
التفاسير:

external-link copy
52 : 11

وَیٰقَوْمِ اسْتَغْفِرُوْا رَبَّكُمْ ثُمَّ تُوْبُوْۤا اِلَیْهِ یُرْسِلِ السَّمَآءَ عَلَیْكُمْ مِّدْرَارًا وَّیَزِدْكُمْ قُوَّةً اِلٰی قُوَّتِكُمْ وَلَا تَتَوَلَّوْا مُجْرِمِیْنَ ۟

‘‘என் மக்களே! உங்கள் இறைவனிடம் மன்னிப்புக் கோருங்கள்! பிறகு, (எல்லா பாவங்களை விட்டும்) திருந்தி (நன்மைகளை செய்து) அவன் பக்கம் திரும்புங்கள்! மழையை உங்களுக்கு தாரை தாரையாக அனுப்புவான். இன்னும், உங்கள் பலத்துடன் (மேலும்) பலத்தை உங்களுக்கு அதிகப்படுத்துவான். இன்னும், (உபதேசங்களை புறக்கணித்த) குற்றவாளிகளாக விலகி சென்று விடாதீர்கள்.” info
التفاسير:

external-link copy
53 : 11

قَالُوْا یٰهُوْدُ مَا جِئْتَنَا بِبَیِّنَةٍ وَّمَا نَحْنُ بِتَارِكِیْۤ اٰلِهَتِنَا عَنْ قَوْلِكَ وَمَا نَحْنُ لَكَ بِمُؤْمِنِیْنَ ۟

(மேலும் அந்த மக்கள்) கூறினார்கள்: “ஹூதே! எந்த ஓர் அத்தாட்சியையும் நம்மிடம் நீர் கொண்டு வரவில்லை. இன்னும், உம் சொல்லுக்காக நாங்கள் (வணங்குகின்ற) எங்கள் தெய்வங்களை விட்டுவிடுபவர்களாக இல்லை. இன்னும், நாங்கள் உம்மை நம்பிக்கை கொண்டவர்களாகவும் இல்லை” info
التفاسير: