Traduction des sens du Noble Coran - La traduction tamoule du Résumé dans l'Exégèse du noble Coran

external-link copy
51 : 6

وَاَنْذِرْ بِهِ الَّذِیْنَ یَخَافُوْنَ اَنْ یُّحْشَرُوْۤا اِلٰی رَبِّهِمْ لَیْسَ لَهُمْ مِّنْ دُوْنِهٖ وَلِیٌّ وَّلَا شَفِیْعٌ لَّعَلَّهُمْ یَتَّقُوْنَ ۟

6.51. தூதரே! மறுமை நாளில் ஒன்று திரட்டப்படுவதை நினைத்து அஞ்சுபவர்களுக்கு இந்த குர்ஆனைக் கொண்டு அச்சமூட்டுவீராக. அந்நாளில் அல்லாஹ்வைத் தவிர நன்மையளிக்கும் எந்த நண்பனோ தீமையைத் தடுக்கும் எந்த சிபாரிசு செய்பவரோ இருக்கமாட்டார். இதனால் அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சலாம். இவர்கள்தாம் குர்ஆனைக் கொண்டு பயனடையக்கூடியவர்கள். info
التفاسير:
Parmi les bénéfices ( méditations ) des versets de cette page:
• الأنبياء بشر، ليس لهم من خصائص الربوبية شيء البتة، ومهمَّتهم التبليغ، فهم لا يملكون تصرفًا في الكون، فلا يعلمون الغيب، ولا يملكون خزائن رزق ونحو ذلك.
1. தூதர்களும் மனிதர்கள்தாம். எவ்வித தெய்வீகப் பண்பும் அவர்களிடம் இல்லை. அவர்களின் பணி தூதை எடுத்துரைப்பதுதான். அவர்கள் பிரபஞ்சத்தில் எவ்வித நடவடிக்கைக்கும் உரிமையற்றவர்கள். அவர்கள் மறைவானவற்றை அறியமாட்டார்கள். வாழ்வாதார கருவூலங்களுக்கும் அவர்கள் அதிபதிகளாக இல்லை. info

• اهتمام الداعية بأتباعه وخاصة أولئك الضعفاء الذين لا يبتغون سوى الحق، فعليه أن يقرِّبهم، ولا يقبل أن يبعدهم إرضاء للكفار.
2. அழைப்பாளர்கள் தம்மைப் பின்பற்றுவோருக்கே -சத்தியத்தை மட்டும் விரும்பும் பலவீனர்களுக்கு- முக்கியத்துவம் வழங்க வேண்டும். அவர்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும். நிராகரிப்பாளர்களை திருப்திப்படுத்துவதற்காக அவர்களைப் புறக்கணிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. info

• إشارة الآية إلى أهمية العبادات التي تقع أول النهار وآخره.
3. பகலின் ஆரம்பத்திலும் இறுதியிலும் நிகழும் வணக்கங்களின் முக்கியத்துவத்தையும் இவ்வசனம் உணர்த்துகின்றது. info