Traduction des sens du Noble Coran - La traduction tamoule du Résumé dans l'Exégèse du noble Coran

external-link copy
127 : 6

لَهُمْ دَارُ السَّلٰمِ عِنْدَ رَبِّهِمْ وَهُوَ وَلِیُّهُمْ بِمَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟

6.127. அனைத்துத் தீங்குகளில் இருந்தும் பாதுகாப்புக் கிடைக்கும் சுவன இல்லம் அவர்களுக்கு உண்டு. அவர்கள் செய்த நற்செயல்களுக்குக் கூலியாக அல்லாஹ்தான் அவர்களுக்கு உதவியாளன்; அவர்களை வலுப்படுத்தக்கூடியவன். info
التفاسير:
Parmi les bénéfices ( méditations ) des versets de cette page:
• سُنَّة الله في الضلال والهداية أنهما من عنده تعالى، أي بخلقه وإيجاده، وهما من فعل العبد باختياره بعد مشيئة الله.
1. நேர்வழி மற்றும் வழிகேடு என்பவை அல்லாஹ்வின் ஏற்பாட்டின்படியே நிகழ்கின்றன. அல்லாஹ்வின் நாட்டத்திற்குப் பிறகே மனிதனது தேர்வின் மூலம் அவனது செயலாகக் கணிக்கப்படும். இதுவே அல்லாஹ்வின் வழிமுறை. info

• ولاية الله للمؤمنين بحسب أعمالهم الصالحة، فكلما زادت أعمالهم الصالحة زادت ولايته لهم والعكس.
2. நம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் நற்செயல்களுக்கேற்பவே அல்லாஹ்வின் நேசம் கிடைக்கிறது. அவர்களின் நற்செயல்கள் அதிகரிக்கும் போதெல்லாம் அவனுடைய நேசமும் அதிகமாகிறது. நற்செயல்கள் குறைந்தால் நேசமும் குறையும். info

• من سُنَّة الله أن يولي كل ظالم ظالمًا مثله، يدفعه إلى الشر ويحثه عليه، ويزهِّده في الخير وينفِّره عنه.
3. அல்லாஹ் அநியாயக்காரர்களை ஒருவரோடு ஒருவர் இணைத்து விடுகிறான். அவர்கள் ஒருவருக்கொருவர் தீமைகளை செய்யத் தூண்டுவதோடு, நற்செயல்களில் வெறுப்பையும் ஏற்படுத்துகின்றனர். அதை விட்டும் தூரமாக்கியும் விடுகின்றனர். info