Traduction des sens du Noble Coran - La traduction tamoule du Résumé dans l'Exégèse du noble Coran

external-link copy
51 : 40

اِنَّا لَنَنْصُرُ رُسُلَنَا وَالَّذِیْنَ اٰمَنُوْا فِی الْحَیٰوةِ الدُّنْیَا وَیَوْمَ یَقُوْمُ الْاَشْهَادُ ۟ۙ

40.51. ஃபிர்அவ்னின் சம்பவத்தையும் அவனுக்கும் அவனைப் பின்பற்றியோருக்கும் இவ்வுலகிலும் மறுவுலகிலும் நேர்ந்த கதியை அல்லாஹ் குறிப்பிட்ட பிறகு தூதர்கள் மற்றும் நம்பிக்கையாளர்களுக்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் கிடைத்த வெற்றியைக் குறித்து குறிப்பிடுகிறான். அவன் கூறுகிறான்: நிச்சயமாக நாம் நம் தூதர்களுக்கும் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கைகொண்டவர்களுக்கு இவ்வுலகில் அவர்களின் ஆதாரங்களை மேலோங்கச் செய்தும் எதிரிகளுக்கு எதிராக அவர்களை வலுப்படுத்தியும் உதவி புரிகின்றோம். மறுமை நாளில் அவர்களை சுவனத்தில் பிரவேசிக்கச் செய்தும் உலகில் அவர்களை எதிர்த்தோரை நரகில் நுழைவித்தும் உதவிபுரிகின்றோம். இது சத்தியவாதிகள், நபிமார்கள் மற்றும் வானவர்கள் தாங்கள் எடுத்துரைத்து விட்டதற்கும் சமூகங்கள் அதனை பொய்ப்பித்ததற்கும் சாட்சி கூறியபிறகு நிகழக்கூடியதாகும். info
التفاسير:
Parmi les bénéfices ( méditations ) des versets de cette page:
• نصر الله لرسله وللمؤمنين سُنَّة إلهية ثابتة.
1. தன் தூதர்களுக்கும் நம்பிக்கையாளர்களுக்கும் உதவி செய்வது இறைவனின் உறுதியான வழிமுறையாகும். info

• اعتذار الظالم يوم القيامة لا ينفعه.
2. மறுமை நாளில் அநியாயக்காரன் கூறும் சாக்குப்போக்கினால் அவனுக்கு எந்தப் பயனும் இல்லை. info

• أهمية الصبر في مواجهة الباطل.
3. அசத்தியத்தை எதிர்கொள்ளும்போது பொறுமையாக இருக்க வேண்டியதன் முக்கியத்துவம் தெளிவாகிறது. info

• دلالة خلق السماوات والأرض على البعث؛ لأن من خلق ما هو عظيم قادر على إعادة الحياة إلى ما دونه.
4. வானங்கள் மற்றும் பூமியைப் படைத்திருப்பது மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதற்கான ஆதாரமாக கூறப்பட்டுள்ளது. ஏனெனில் பிரமாண்டமானவற்றைப் படைத்தவன் அதனை விடச் சிறியவற்றிற்கு மீண்டும் உயிர்வழங்குவதற்கு ஆற்றல் உள்ளவன். info