Traduction des sens du Noble Coran - La traduction tamoule - 'Abd Al Hamîd Bâqawî

Numéro de la page:close

external-link copy
77 : 19

اَفَرَءَیْتَ الَّذِیْ كَفَرَ بِاٰیٰتِنَا وَقَالَ لَاُوْتَیَنَّ مَالًا وَّوَلَدًا ۟ؕ

77. (நபியே!) நம் வசனங்களை நிராகரித்தவனை நீர் பார்த்தீரா? ‘‘(மறுமையிலும்) நிச்சயமாக நான் ஏராளமான பொருள்களும் சந்ததிகளும் கொடுக்கப்படுவேன்'' என்று கூறுகிறான். info
التفاسير:

external-link copy
78 : 19

اَطَّلَعَ الْغَیْبَ اَمِ اتَّخَذَ عِنْدَ الرَّحْمٰنِ عَهْدًا ۟ۙ

78. அவன் (மறுமையில் நடக்கக்கூடிய) மறைவான விஷயங்களை அறிந்து கொண்டானா? அல்லது ரஹ்மானிடத்தில் (இத்தகையதொரு) வாக்குறுதியைப் பெற்றிருக்கிறானா? info
التفاسير:

external-link copy
79 : 19

كَلَّا ؕ— سَنَكْتُبُ مَا یَقُوْلُ وَنَمُدُّ لَهٗ مِنَ الْعَذَابِ مَدًّا ۟ۙ

79. (இவன் கூறுகிறபடி) அல்ல! இவன் (பொய்யாகக்) கூறுகின்றவற்றை நாம் எழுதிக் கொண்டே வருகிறோம். (அதற்குத் தக்கவாறு) அவனுடைய வேதனையையும் நாம் அதிகப்படுத்திவிடுவோம். info
التفاسير:

external-link copy
80 : 19

وَّنَرِثُهٗ مَا یَقُوْلُ وَیَاْتِیْنَا فَرْدًا ۟

80. அவன் (தனக்குரியதென்று) கூறும் அனைத்துக்கும் நாமே வாரிசாகி விடுவோம். அவன் (இவற்றை விட்டுவிட்டு) நம்மிடம் தனியாகவே வருவான். info
التفاسير:

external-link copy
81 : 19

وَاتَّخَذُوْا مِنْ دُوْنِ اللّٰهِ اٰلِهَةً لِّیَكُوْنُوْا لَهُمْ عِزًّا ۟ۙ

81. (இணைவைத்து வணங்கும்) இவர்கள் தங்களுக்கு உதவியாக இருக்குமென்று அல்லாஹ் அல்லாதவற்றைத் தெய்வங்களாக எடுத்துக் கொள்கின்றனர். info
التفاسير:

external-link copy
82 : 19

كَلَّا ؕ— سَیَكْفُرُوْنَ بِعِبَادَتِهِمْ وَیَكُوْنُوْنَ عَلَیْهِمْ ضِدًّا ۟۠

82. அவ்வாறல்ல; அத்தெய்வங்கள் இவர்கள் தங்களை வணங்கியதையும் நிராகரித்து, இவர்களுக்கு விரோதமாகவும் மாறிவிடும். info
التفاسير:

external-link copy
83 : 19

اَلَمْ تَرَ اَنَّاۤ اَرْسَلْنَا الشَّیٰطِیْنَ عَلَی الْكٰفِرِیْنَ تَؤُزُّهُمْ اَزًّا ۟ۙ

83. (நபியே!) நிராகரிப்பவர்களை (பாவமான காரியங்களைச் செய்யும்படித்) தூண்டிக் கொண்டிருப்பதற்காகவே ஷைத்தான்களை நாம் (அவர்களிடம்) அனுப்பிவைக்கிறோம் என்பதை நீர் கவனிக்கவில்லையா? info
التفاسير:

external-link copy
84 : 19

فَلَا تَعْجَلْ عَلَیْهِمْ ؕ— اِنَّمَا نَعُدُّ لَهُمْ عَدًّا ۟ۚ

84. ஆதலால், அவர்களுக்காக (வேதனை வரவேண்டுமென்று) நீர் அவசரப்படாதீர். அவர்களுக்கு (வேதனை வரக்கூடிய நாள்களை) நாம் எண்ணிக்கொண்டே இருக்கிறோம். info
التفاسير:

external-link copy
85 : 19

یَوْمَ نَحْشُرُ الْمُتَّقِیْنَ اِلَی الرَّحْمٰنِ وَفْدًا ۟ۙ

85. இறையச்சமுடையவர்களை ரஹ்மானிடம் (விருந்தாளிகளைப் போல) குழுக்களாக நாம் ஒன்று சேர்க்கும் நாளில், info
التفاسير:

external-link copy
86 : 19

وَّنَسُوْقُ الْمُجْرِمِیْنَ اِلٰی جَهَنَّمَ وِرْدًا ۟ۘ

86. இன்னும் குற்றவாளிகளை தாகத்துடன் நரகத்தின் பக்கம் நாம் ஓட்டுகின்ற நாளில், info
التفاسير:

external-link copy
87 : 19

لَا یَمْلِكُوْنَ الشَّفَاعَةَ اِلَّا مَنِ اتَّخَذَ عِنْدَ الرَّحْمٰنِ عَهْدًا ۟ۘ

87. ரஹ்மானிடம் அனுமதி பெற்றவர்களைத் தவிர எவரும் (எவருக்கும்) சிபாரிசு பேச உரிமை பெறமாட்டார். info
التفاسير:

external-link copy
88 : 19

وَقَالُوا اتَّخَذَ الرَّحْمٰنُ وَلَدًا ۟ؕ

88. ரஹ்மான் சந்ததி எடுத்துக் கொண்டதாக அ(ந்த கிறிஸ்தவர்கள், இன்னும் இணைவைப்ப)வர்கள் கூறுகின்றனர். info
التفاسير:

external-link copy
89 : 19

لَقَدْ جِئْتُمْ شَیْـًٔا اِدًّا ۟ۙ

89. (நபியே! அவர்களை நோக்கி கூறுவீராக:) நிச்சயமாக நீங்கள் பெரியதோர் அபாண்டத்தைக் கூறுகிறீர்கள். info
التفاسير:

external-link copy
90 : 19

تَكَادُ السَّمٰوٰتُ یَتَفَطَّرْنَ مِنْهُ وَتَنْشَقُّ الْاَرْضُ وَتَخِرُّ الْجِبَالُ هَدًّا ۟ۙ

90. வானங்கள் கிழிந்து போகவும், பூமி பிளந்து விடவும், மலைகள் இடிந்து சரிந்து விடவும் நெருங்கி விட்டன. info
التفاسير:

external-link copy
91 : 19

اَنْ دَعَوْا لِلرَّحْمٰنِ وَلَدًا ۟ۚ

91. ரஹ்மானுக்குச் சந்ததி உண்டென்று அவர்கள் கூறுவதன் காரணத்தால். info
التفاسير:

external-link copy
92 : 19

وَمَا یَنْۢبَغِیْ لِلرَّحْمٰنِ اَنْ یَّتَّخِذَ وَلَدًا ۟ؕ

92. சந்ததி எடுத்துக் கொள்வது ரஹ்மானுக்குத் தகுமானதல்ல. info
التفاسير:

external-link copy
93 : 19

اِنْ كُلُّ مَنْ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ اِلَّاۤ اٰتِی الرَّحْمٰنِ عَبْدًا ۟ؕ

93. ஏனென்றால், நிச்சயமாக வானங்களிலும் பூமியிலும் உள்ள ஒவ்வொன்றும் ரஹ்மானிடம் அடிமையாகவே வருகிறது. info
التفاسير:

external-link copy
94 : 19

لَقَدْ اَحْصٰىهُمْ وَعَدَّهُمْ عَدًّا ۟ؕ

94. அவை அனைத்தையும் அவன் சூழ்ந்து அறிந்து கணக்கிட்டும் வைத்திருக்கிறான். info
التفاسير:

external-link copy
95 : 19

وَكُلُّهُمْ اٰتِیْهِ یَوْمَ الْقِیٰمَةِ فَرْدًا ۟

95. அவை ஒவ்வொன்றும் மறுமை நாளில் (எவருடைய உதவியுமில்லாமல்) அவனிடம் தனித்தனியாகவே வரும். info
التفاسير: