Traducción de los significados del Sagrado Corán - Traducción al tamil - Omar Sharif

external-link copy
24 : 10

اِنَّمَا مَثَلُ الْحَیٰوةِ الدُّنْیَا كَمَآءٍ اَنْزَلْنٰهُ مِنَ السَّمَآءِ فَاخْتَلَطَ بِهٖ نَبَاتُ الْاَرْضِ مِمَّا یَاْكُلُ النَّاسُ وَالْاَنْعَامُ ؕ— حَتّٰۤی اِذَاۤ اَخَذَتِ الْاَرْضُ زُخْرُفَهَا وَازَّیَّنَتْ وَظَنَّ اَهْلُهَاۤ اَنَّهُمْ قٰدِرُوْنَ عَلَیْهَاۤ ۙ— اَتٰىهَاۤ اَمْرُنَا لَیْلًا اَوْ نَهَارًا فَجَعَلْنٰهَا حَصِیْدًا كَاَنْ لَّمْ تَغْنَ بِالْاَمْسِ ؕ— كَذٰلِكَ نُفَصِّلُ الْاٰیٰتِ لِقَوْمٍ یَّتَفَكَّرُوْنَ ۟

உலக வாழ்க்கையின் உதாரணமெல்லாம் மேகத்திலிருந்து நாம் இறக்கிய (மழை) நீரைப் போன்றுதான். ஆக, மனிதர்களும் கால்நடைகளும் புசிக்கின்ற பூமியின் தாவரம் அ(ந்)த (மழையி)ன் மூலம் முளைத்து, (ஒன்றோடு ஒன்று) கலந்து (அடர்த்தியாக வளர்ந்து) விட்டது. இறுதியாக, (அந்த செடி கொடிகளால்) பூமி அலங்காரமாக காட்சி தந்தது. இன்னும், அதன் உரிமையாளர்கள் (பயிர்களை அறுவடை செய்வதற்காக அங்கு வந்து,) நிச்சயமாக அவர்கள் அவற்றின் மேல் (-அவற்றை அறுவடை செய்ய) ஆற்றல் பெற்றவர்கள் என்று எண்ணியபோது, - (அவற்றை அழிப்பதற்குரிய) நம் கட்டளை இரவில் அல்லது பகலில் அவற்றுக்கு வந்தது. ஆகவே, அவற்றை அவை நேற்றைய தினம் இல்லாததைப் போன்று வேரறுக்கப்பட்டதாக நாம் ஆக்கி விட்டோம். (அல்லாஹ்வின் அத்தாட்சிகளில்) சிந்திக்கின்ற மக்களுக்கு வசனங்களை இவ்வாறு நாம் விவரிக்கிறோம். info
التفاسير: