Traducción de los significados del Sagrado Corán - Traducción tamil del Mujtasar para la Exégesis del Sagrado Corán.

external-link copy
128 : 2

رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَیْنِ لَكَ وَمِنْ ذُرِّیَّتِنَاۤ اُمَّةً مُّسْلِمَةً لَّكَ ۪— وَاَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَیْنَا ۚ— اِنَّكَ اَنْتَ التَّوَّابُ الرَّحِیْمُ ۟

2.128. எங்கள் இறைவனே, உனக்கு முழுமையாகக் கட்டுப்பட்டவர்களாக எங்களை ஆக்குவாயாக. நாங்கள் உனக்கு இணையாக யாரையும் ஆக்க மாட்டோம். எங்களின் சந்ததியிலிருந்து உனக்குக் கட்டுப்பட்ட ஒரு சமூகத்தை உருவாக்குவாயாக. உன்னை வணங்கும் முறையை எமக்கு கற்றுத்தருவாயாக!. எங்களின் பாவங்களையும், வணக்கங்களில் ஏற்பட்ட குறைபாடுகளையும், மன்னித்தருள்வாயாக. நிச்சயமாக நீ உன் அடியார்களின் பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்றுக் கொள்கின்றாய். அவர்கள் விஷயத்தில் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றாய். info
التفاسير:
Beneficios de los versículos de esta página:
• المؤمن المتقي لا يغتر بأعماله الصالحة، بل يخاف أن ترد عليه، ولا تقبل منه، ولهذا يُكْثِرُ سؤالَ الله قَبولها.
1. அல்லாஹ்வை அஞ்சும் நம்பிக்கையாளன் தன் நற்செயல்களைக் கொண்டு ஏமாற மாட்டான். அவை ஏற்றுக்கொள்ளப்படாமல் நிராகரிக்கப்பட்டுவிடுமோ என்று அஞ்சுவான். எனவே அல்லாஹ்விடம் அவற்றை ஏற்றுக்கொள்ளும்படி அதிகமாக மன்றாடுவான். info

• بركة دعوة أبي الأنبياء إبراهيم عليه السلام، حيث أجاب الله دعاءه وجعل خاتم أنبيائه وأفضل رسله من أهل مكة.
2. தூதர்களின் தந்தை என்று அழைக்கப்படக்கூடிய இப்ராஹீமின் பிரார்த்தனையால் ஏற்பட்ட பரக்கத். அல்லாஹ் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டு இறுதித்தூதராகவும் தூதர்களில் சிறந்தவராகவும் மக்காவைச் சார்ந்த ஒருவரை ஆக்கினான். info

• دين إبراهيم عليه السلام هو الملة الحنيفية الموافقة للفطرة، لا يرغب عنها ولا يزهد فيها إلا الجاهل المخالف لفطرته.
3. இப்ராஹீமின் மார்க்கம் மனித இயல்புக்கேற்ற தூய மார்க்கமாகும். தனது இயல்புக்கு மாறாக செயல்படுகின்ற மூடனைத்தவிர வேறு யாரும் இதனைப் புறக்கணிக்க மாட்டார்கள். info

• مشروعية الوصية للذرية باتباع الهدى، وأخذ العهد عليهم بالتمسك بالحق والثبات عليه.
4. நேர்வழியைப் பின்பற்றுமாறும் சத்தியத்தை உறுதியுடன் பற்றிப்பிடிக்குமாறும் சந்ததியினருக்கு மரணசாசனம் செய்வது மார்க்கத்திலுள்ள விடயமாகும். info