Traducción de los significados del Sagrado Corán - Traducción tamil del Mujtasar para la Exégesis del Sagrado Corán.

Número de página:close

external-link copy
211 : 2

سَلْ بَنِیْۤ اِسْرَآءِیْلَ كَمْ اٰتَیْنٰهُمْ مِّنْ اٰیَةٍ بَیِّنَةٍ ؕ— وَمَنْ یُّبَدِّلْ نِعْمَةَ اللّٰهِ مِنْ بَعْدِ مَا جَآءَتْهُ فَاِنَّ اللّٰهَ شَدِیْدُ الْعِقَابِ ۟

2.211. தூதரே! இஸ்ராயீலின் மக்களைக் கண்டிக்கும்விதமாக அவர்களிடம் கேளும், :தூதர்களை உண்மைப்படுத்தக்கூடிய எத்தனையோ தெளிவான சான்றுகளை அல்லாஹ் உங்களுக்கு வழங்கியிருக்கின்றானே! நீங்கள் அவற்றை பொய் எனக்கூறி புறக்கணித்துவிட்டீர்கள். அல்லாஹ்வின் அருட்கொடையை தெளிவாக அறிந்தபின்னரும் அதனை நிராகரிப்பாக மாற்றுபவர்கள் அறிந்துகொள்ளட்டும், ;நிச்சயமாக அல்லாஹ் தன்னை நிராகரிப்பவர்களை கடுமையாகத் தண்டிக்கக்கூடியவன் என்பதை. info
التفاسير:

external-link copy
212 : 2

زُیِّنَ لِلَّذِیْنَ كَفَرُوا الْحَیٰوةُ الدُّنْیَا وَیَسْخَرُوْنَ مِنَ الَّذِیْنَ اٰمَنُوْا ۘ— وَالَّذِیْنَ اتَّقَوْا فَوْقَهُمْ یَوْمَ الْقِیٰمَةِ ؕ— وَاللّٰهُ یَرْزُقُ مَنْ یَّشَآءُ بِغَیْرِ حِسَابٍ ۟

2.212. அல்லாஹ்வை நிராகரிப்பவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையும் அதிலுள்ள அழியக்கூடிய இன்பங்களும் அழகாக்கப்பட்டுள்ளது. அவர்கள் அல்லாஹ்வையும் மறுமைநாளையும் நம்பியவர்களை பரிகாசம் செய்கிறார்கள். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி, அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்கள் இந்த நிராகரிப்பாளர்களைவிட மறுமையில் உயர்ந்தநிலையில் இருப்பார்கள். அல்லாஹ் அவர்களை நிலையான சுவனங்களில் தங்கச் செய்வான். அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு கணக்கின்றி வழங்குகிறான். info
التفاسير:

external-link copy
213 : 2

كَانَ النَّاسُ اُمَّةً وَّاحِدَةً ۫— فَبَعَثَ اللّٰهُ النَّبِیّٖنَ مُبَشِّرِیْنَ وَمُنْذِرِیْنَ ۪— وَاَنْزَلَ مَعَهُمُ الْكِتٰبَ بِالْحَقِّ لِیَحْكُمَ بَیْنَ النَّاسِ فِیْمَا اخْتَلَفُوْا فِیْهِ ؕ— وَمَا اخْتَلَفَ فِیْهِ اِلَّا الَّذِیْنَ اُوْتُوْهُ مِنْ بَعْدِ مَا جَآءَتْهُمُ الْبَیِّنٰتُ بَغْیًا بَیْنَهُمْ ۚ— فَهَدَی اللّٰهُ الَّذِیْنَ اٰمَنُوْا لِمَا اخْتَلَفُوْا فِیْهِ مِنَ الْحَقِّ بِاِذْنِهٖ ؕ— وَاللّٰهُ یَهْدِیْ مَنْ یَّشَآءُ اِلٰی صِرَاطٍ مُّسْتَقِیْمٍ ۟

2.213. மனிதர்கள் தங்களின் தந்தை ஆதமின் மார்க்கத்தில் ஒன்றுபட்டவர்களாக, ஒரு சமூகத்தினராக இருந்தார்கள். ஷைத்தான் அவர்களை வழிகெடுத்தான். அதனால் அல்லாஹ்வை நம்பியவர்கள், நிராகரித்தவர்கள் என பிரிந்துவிட்டனர். இதனால் அல்லாஹ் தூதர்களை நற்செய்தி கூறக்கூடியவர்களாகவும், எச்சரிக்கை செய்பவர்களாகவும் அனுப்பிவைத்தான். அவர்கள் அவன் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு அவன் தயார்படுத்தியுள்ள அருட்கொடைகளைக் கொண்டு நற்செய்தி கூறினார்கள். அவனை நிராகரித்தவர்களுக்கு அவன் தயார்படுத்தி வைத்துள்ள வேதனையைக் கொண்டு எச்சரிக்கை செய்தார்கள். மக்களிடையே தோன்றும் கருத்துவேறுபாடுகளுக்குத் தீர்ப்பளிப்பதற்காக தூதர்களுடன் உறுதியான சத்தியத்தை உள்ளடக்கிய வேதங்களையும் இறக்கினான். தவ்ராத்தின் அறிவு வழங்கப்பட்டவர்களே அதில் முரண்பட்டனர். கருத்துவேறுபாடு கொள்ளமுடியாத அளவு அல்லாஹ்விடமிருந்து வந்த உண்மைதான் என்பதற்கு ஆதாரங்கள் வந்த பின்பும் யூதர்கள் அநியாயமாகவே தவ்ராத்தில் கருத்துவேறுபட்டார்கள். தன்மீது நம்பிக்கைகொண்ட அடியார்களுக்கு அல்லாஹ், நேர்வழியை அறிந்து அதனைப் பின்பற்றும் பாக்கியத்தை அளித்தான். அல்லாஹ் தான் நாடியோருக்கு எவ்வித கோணலுமற்ற நேரான வழியான ஈமானின் வழியைக் காட்டுகிறான்.
info
التفاسير:

external-link copy
214 : 2

اَمْ حَسِبْتُمْ اَنْ تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا یَاْتِكُمْ مَّثَلُ الَّذِیْنَ خَلَوْا مِنْ قَبْلِكُمْ ؕ— مَسَّتْهُمُ الْبَاْسَآءُ وَالضَّرَّآءُ وَزُلْزِلُوْا حَتّٰی یَقُوْلَ الرَّسُوْلُ وَالَّذِیْنَ اٰمَنُوْا مَعَهٗ مَتٰی نَصْرُ اللّٰهِ ؕ— اَلَاۤ اِنَّ نَصْرَ اللّٰهِ قَرِیْبٌ ۟

2.214. நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்சென்றவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் போன்று உங்களுக்கும் ஏற்படாமலேயே நீங்கள் சுவனம் சென்றுவிடலாம் என்று எண்ணிக்கொண்டீர்களா? வறுமையும் நோயும் அவர்களைப் பீடித்தது. அவர்கள் கடும் அச்சத்திற்கு உள்ளாக்கப்பட்டார்கள். தூதரும் அவருடன் நம்பிக்கைகொண்டவர்களும்: அல்லாஹ்வின் உதவி எப்போது வரும்? என்று அவசரப்படும் அளவுக்கு அவர்கள் சோதனைக்குள்ளாக்கப்பட்டார்கள். அறிந்துகொள்ளுங்கள்:அல்லாஹ்வையே நம்பியவர்களுக்கும் அவனையே சார்ந்திருப்பவர்களுக்கும் அவனுடைய உதவி சமீபத்தில் இருக்கிறது. info
التفاسير:

external-link copy
215 : 2

یَسْـَٔلُوْنَكَ مَاذَا یُنْفِقُوْنَ ؕ— قُلْ مَاۤ اَنْفَقْتُمْ مِّنْ خَیْرٍ فَلِلْوَالِدَیْنِ وَالْاَقْرَبِیْنَ وَالْیَتٰمٰی وَالْمَسٰكِیْنِ وَابْنِ السَّبِیْلِ ؕ— وَمَا تَفْعَلُوْا مِنْ خَیْرٍ فَاِنَّ اللّٰهَ بِهٖ عَلِیْمٌ ۟

2.215. தூதரே! உம்முடைய தோழர்கள், அவர்களின் செல்வங்களில் எதைச் செலவுசெய்ய வேண்டும்? யாருக்கு வழங்க வேண்டும்? என்று உம்மிடம் கேட்கிறார்கள். நீர் அவர்களுக்குக் கூறுவீராக: நீங்கள் தூய்மையான எந்த செல்வத்தைச் செலவு செய்தாலும் உங்களின் தாய்தந்தையருக்காக, தேவைக்கேற்ப நெருங்கிய உங்களின் உறவினருக்காக, தேவையுடைய அநாதைகளுக்காக, ஏழைகளுக்காக, நாட்டையும் குடும்பத்தையும் விட்டு துண்டிக்கப்பட்ட வழிப்போக்கர்களுக்காக செலவு செய்யுங்கள்.முஃமின்களே! குறைவாகவோ அதிகமாகவோ நீங்கள் செய்த நன்மைகள் அனைத்தையும் அல்லாஹ் நன்கறிந்தவன். எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான். info
التفاسير:
Beneficios de los versículos de esta página:
• ترك شكر الله تعالى على نعمه وترك استعمالها في طاعته يعرضها للزوال ويحيلها بلاءً على صاحبها.
1. அல்லாஹ் வழங்கிய அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தாமலும் அவனுக்குக் கட்டுப்பட்ட வழிகளில் அவற்றைப் பயன்படுத்தாமலும் இருப்பது அவற்றின் அழிவுக்கும் அவை துன்பமாக மாறுவதற்கும் காரணமாக அமைந்துவிடுகிறது. info

• الأصل أن الله خلق عباده على فطرة التوحيد والإيمان به، وإبليس وأعوانه هم الذين صرفوهم عن هذه الفطرة إلى الشرك به.
2. இயல்பில் தன் அடியார்கள் தன்னையே வணங்கி, தன்மீதே நம்பிக்கைகொள்ளுமாறுதான் அல்லாஹ் அவர்களைப் படைத்துள்ளான். ஷைத்தானும் அவனுடைய சகாக்களுமே அடியார்களின் இந்த இயல்பிருந்து திசைதிருப்பி இணைவைப்பின் பக்கம் அவர்களைக் கொண்டு செல்கிறார்கள். info

• أعظم الخذلان الذي يؤدي للفشل أن تختلف الأمة في كتابها وشريعتها، فيكفّر بعضُها بعضًا، ويلعن بعضُها بعضًا.
3. சமூகத்தை பலவீனத்தின் பக்கம் இட்டுச் செல்லும் மிக மோசமான வீழ்ச்சி, ஒரு சமூகம் தங்களின் வேதத்திலும் மார்க்கத்திலும் கருத்துவேறுபட்டு ஒருவர் மற்றவரை காஃபிர் என்று கூறுவதும் ஒருவர் மற்றவரை சபிப்பதும்தான். info

• الهداية للحق الذي يختلف فيه الناس، ومعرفة وجه الصواب بيد الله، ويُطلب منه تعالى بالإيمان به والانقياد له.
4. மக்கள் முரண்பட்டுள்ளவற்றில் சரியான வழியை அறிந்து அடைவது அல்லாஹ்வின் கையில்தான் உள்ளது. அவன்மீது நம்பிக்கைகொண்டு அவனுக்குக் கட்டுப்படுவதன் மூலமே அவனிடம் அதனைக் கேட்கவேண்டும். info

• الابتلاء سُنَّة الله تعالى في أوليائه، فيبتليهم بقدر ما في قلوبهم من الإيمان به والتوكل عليه.
5. சோதனை, அல்லாஹ் தன் நேசர்களின் விஷயத்தில் ஏற்படுத்திக் கொண்ட நியதியாகும். அவர்களின் உள்ளத்திலிருக்கும் ஈமான் மற்றும் அவனைச் சார்ந்திருக்கும் தன்மைக்கேற்பவே அவன் அவர்களைச் சோதிக்கிறான். info

• من أعظم ما يعين على الصبر عند نزول البلاء، الاقتداء بالصالحين وأخذ الأسوة منهم.
6. துன்பம் வரும்போது பொறுமையாக இருக்க உதவும் மிகச் சிறந்த வழி நல்லவர்களைப் பின்பற்றுவதும் அவர்களிடமிருந்து முன்மாதிரியைப் பெற்றுக்கொள்வதும்தான். info