Traducción de los significados del Sagrado Corán - Traducción al tamil- Abdul Hamid Bakawi

Número de página:close

external-link copy
77 : 2

اَوَلَا یَعْلَمُوْنَ اَنَّ اللّٰهَ یَعْلَمُ مَا یُسِرُّوْنَ وَمَا یُعْلِنُوْنَ ۟

77. அவர்கள் மறைப்பதையும் பகிரங்கப்படுத்துவதையும் நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான் என்பதை அவர்கள் அறிய வேண்டாமா? info
التفاسير:

external-link copy
78 : 2

وَمِنْهُمْ اُمِّیُّوْنَ لَا یَعْلَمُوْنَ الْكِتٰبَ اِلَّاۤ اَمَانِیَّ وَاِنْ هُمْ اِلَّا یَظُنُّوْنَ ۟

78. மேலும், கல்வி அறிவு இல்லாதவர்களும் அவர்களில் உண்டு. வேதத்தைப் பற்றி (கேள்விப்பட்டுள்ள) வீண் நம்பிக்கைகளைத் தவிர (உண்மையை) அவர்கள் அறியவே மாட்டார்கள். அவர்கள் வீண் சந்தேகத்தில் (ஆழ்ந்து) கிடப்பவர்களைத் தவிர (வேறு) இல்லை. info
التفاسير:

external-link copy
79 : 2

فَوَیْلٌ لِّلَّذِیْنَ یَكْتُبُوْنَ الْكِتٰبَ بِاَیْدِیْهِمْ ۗ— ثُمَّ یَقُوْلُوْنَ هٰذَا مِنْ عِنْدِ اللّٰهِ لِیَشْتَرُوْا بِهٖ ثَمَنًا قَلِیْلًا ؕ— فَوَیْلٌ لَّهُمْ مِّمَّا كَتَبَتْ اَیْدِیْهِمْ وَوَیْلٌ لَّهُمْ مِّمَّا یَكْسِبُوْنَ ۟

79. எவர்கள் தங்கள் கைகளைக் கொண்டு (கற்பனையாக) எழுதிய புத்தகத்தை ஒரு சொற்பக்கிரயத்தை அடைவதற்காக “இது அல்லாஹ்விடமிருந்து வந்ததுதான்'' என்று கூறுகிறார்களோ அவர்களுக்குக் கேடுதான்! (அதை) அவர்களுடைய கைகள் எழுதியதனாலும் அவர்களுக்குக் கேடுதான்! அவர்கள் (அதைக்கொண்டு பொருள்) சம்பாதிப்பதாலும் அவர்களுக்குக் கேடுதான்! info
التفاسير:

external-link copy
80 : 2

وَقَالُوْا لَنْ تَمَسَّنَا النَّارُ اِلَّاۤ اَیَّامًا مَّعْدُوْدَةً ؕ— قُلْ اَتَّخَذْتُمْ عِنْدَ اللّٰهِ عَهْدًا فَلَنْ یُّخْلِفَ اللّٰهُ عَهْدَهٗۤ اَمْ تَقُوْلُوْنَ عَلَی اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ ۟

80. ‘‘ஒரு சில நாள்களுக்கேத் தவிர நரக நெருப்பு எங்களைத் தீண்டவே செய்யாது'' என அவர்கள் கூறுகிறார்கள். (அதற்கு நபியே! அவர்களை) கேட்பீராக: அல்லாஹ்விடம் ஏதேனும் (அவ்வாறு) ஓர் உறுதிமொழியை நீங்கள் பெற்றிருக்கிறீர்களா? அவ்வாறாயின் நிச்சயமாக அல்லாஹ் தன் வாக்கு மாறமாட்டான். அல்லது நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது (பொய்) சொல்கிறீர்களா? info
التفاسير:

external-link copy
81 : 2

بَلٰی مَنْ كَسَبَ سَیِّئَةً وَّاَحَاطَتْ بِهٖ خَطِیْٓـَٔتُهٗ فَاُولٰٓىِٕكَ اَصْحٰبُ النَّارِ ۚ— هُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟

81. அவ்வாறன்று! எவர்கள் பாவத்தையே சம்பாதித்துக் கொண்டிருந்து, அவர்களுடைய பாவம் அவர்களை சூழ்ந்து கொண்டதோ அவர்கள் (யாராக இருப்பினும்) நரகவாசிகளே! அதில்தான் அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள். info
التفاسير:

external-link copy
82 : 2

وَالَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ اُولٰٓىِٕكَ اَصْحٰبُ الْجَنَّةِ ۚ— هُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟۠

82. ஆனால், எவர்கள் (இவ்வேதத்தை) உண்மையாகவே நம்பிக்கைகொண்டு நற்காரியங்களைச் செய்கிறார்களோ அவர்கள் சொர்க்கவாசிகளே! அதில் அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள். info
التفاسير:

external-link copy
83 : 2

وَاِذْ اَخَذْنَا مِیْثَاقَ بَنِیْۤ اِسْرَآءِیْلَ لَا تَعْبُدُوْنَ اِلَّا اللّٰهَ ۫— وَبِالْوَالِدَیْنِ اِحْسَانًا وَّذِی الْقُرْبٰی وَالْیَتٰمٰی وَالْمَسٰكِیْنِ وَقُوْلُوْا لِلنَّاسِ حُسْنًا وَّاَقِیْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَ ؕ— ثُمَّ تَوَلَّیْتُمْ اِلَّا قَلِیْلًا مِّنْكُمْ وَاَنْتُمْ مُّعْرِضُوْنَ ۟

83. மேலும், (நினைத்துப் பாருங்கள்:) இஸ்ராயீலின் சந்ததிகளிடம் ‘‘நீங்கள் அல்லாஹ்வைத் தவிர (வேறொன்றையும்) வணங்காதீர்கள்; தாய், தந்தைக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும் நன்மை செய்யுங்கள்; அனைத்து மனிதர்களிடமும் அழகாகப் பேசுங்கள் (நல்ல பேச்சுகளை பேசுங்கள்); தொழுகையை நிலைநிறுத்துங்கள்; ஜகாத்து கொடுத்து வாருங்கள்'' என்று நாம் வாக்குறுதி வாங்கியபொழுது, உங்களில் சிலரைத் தவிர மற்ற அனைவரும் புறக்கணித்து (மாறி) விட்டீர்கள். (எப்பொழுதும், இவ்வாறே) நீங்கள் புறக்கணித்தே வந்திருக்கிறீர்கள். info
التفاسير: