Translation of the Meanings of the Noble Qur'an - Tamil translation - Omar Sharif

அல்பலத்

external-link copy
1 : 90

لَاۤ اُقْسِمُ بِهٰذَا الْبَلَدِ ۟ۙ

இந்த (மக்கா) நகரத்தின் மீது சத்தியம் செய்கிறேன். info
التفاسير:

external-link copy
2 : 90

وَاَنْتَ حِلٌّۢ بِهٰذَا الْبَلَدِ ۟ۙ

இன்னும், (நபியே!) நீர் இந்த நகரத்தில் (எதிரிகளைத் தண்டிப்பதற்கு) அனுமதிக்கப்பட்டு இருக்கிறீர். info
التفاسير:

external-link copy
3 : 90

وَوَالِدٍ وَّمَا وَلَدَ ۟ۙ

தந்தை மீதும், அவர் பெற்றெடுத்தவர்கள் மீதும் சத்தியமாக! info
التفاسير:

external-link copy
4 : 90

لَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ فِیْ كَبَدٍ ۟ؕ

திட்டவட்டமாக, மனிதனை சிரமத்தில் (சிக்கிக் கொள்பவனாகவே) படைத்தோம். info
التفاسير:

external-link copy
5 : 90

اَیَحْسَبُ اَنْ لَّنْ یَّقْدِرَ عَلَیْهِ اَحَدٌ ۟ۘ

தன்மீது ஒருவனும் ஆற்றல் பெறவே மாட்டான் என்று (அவன்) எண்ணுகிறானா? info
التفاسير:

external-link copy
6 : 90

یَقُوْلُ اَهْلَكْتُ مَالًا لُّبَدًا ۟ؕ

அதிகமான செல்வத்தை நான் அழித்தேன் என்று (அவன் பெருமையாக) கூறுகிறான். info
التفاسير:

external-link copy
7 : 90

اَیَحْسَبُ اَنْ لَّمْ یَرَهٗۤ اَحَدٌ ۟ؕ

அவனை ஒருவனும் பார்க்கவில்லை என்று எண்ணுகிறானா? info
التفاسير:

external-link copy
8 : 90

اَلَمْ نَجْعَلْ لَّهٗ عَیْنَیْنِ ۟ۙ

இரு கண்களை அவனுக்கு நாம் ஆக்கவில்லையா? info
التفاسير:

external-link copy
9 : 90

وَلِسَانًا وَّشَفَتَیْنِ ۟ۙ

இன்னும், ஒரு நாவையும், இரு உதடுகளையும் (அவனுக்கு நாம் படைக்கவில்லையா?) info
التفاسير:

external-link copy
10 : 90

وَهَدَیْنٰهُ النَّجْدَیْنِ ۟ۚ

இன்னும், இரு பாதைகளை அவனுக்கு வழிகாட்டினோம். info
التفاسير:

external-link copy
11 : 90

فَلَا اقْتَحَمَ الْعَقَبَةَ ۟ؗۖ

ஆக, அவன் அகபாவைக் கடக்கவில்லை. info
التفاسير:

external-link copy
12 : 90

وَمَاۤ اَدْرٰىكَ مَا الْعَقَبَةُ ۟ؕ

(நபியே!) அகபா என்றால் என்னவென்று உமக்கு அறிவித்தது எது? info
التفاسير:

external-link copy
13 : 90

فَكُّ رَقَبَةٍ ۟ۙ

(அது,) ஓர் அடிமையை விடுதலை செய்தல், info
التفاسير:

external-link copy
14 : 90

اَوْ اِطْعٰمٌ فِیْ یَوْمٍ ذِیْ مَسْغَبَةٍ ۟ۙ

அல்லது, கடுமையான பசியுடைய நாளில் உணவளித்தல், info
التفاسير:

external-link copy
15 : 90

یَّتِیْمًا ذَا مَقْرَبَةٍ ۟ۙ

(யாருக்கு என்றால்) உறவினரான ஓர் அனாதைக்கு, info
التفاسير:

external-link copy
16 : 90

اَوْ مِسْكِیْنًا ذَا مَتْرَبَةٍ ۟ؕ

அல்லது, மிக வறியவரான ஓர் ஏழைக்கு உணவளித்தல் (அகபாவை கடப்பதாகும்). info
التفاسير:

external-link copy
17 : 90

ثُمَّ كَانَ مِنَ الَّذِیْنَ اٰمَنُوْا وَتَوَاصَوْا بِالصَّبْرِ وَتَوَاصَوْا بِالْمَرْحَمَةِ ۟ؕ

(இத்தகைய புண்ணியத்தை செய்த) பிறகு, (அத்துடன்) அவர் நம்பிக்கையைக் கொண்டவர்களிலும், பொறுமையைக் கொண்டு உபதேசித்துக் கொண்டவர்களிலும், கருணையைக் கொண்டு உபதேசித்துக் கொண்டவர்களிலும் ஆகிவிட வேண்டும். info
التفاسير:

external-link copy
18 : 90

اُولٰٓىِٕكَ اَصْحٰبُ الْمَیْمَنَةِ ۟ؕ

இ(த்தகைய நன்மைகளை செய்த)வர்கள் வலப்பக்கமுடையவர்கள் (-சொர்க்க வாசிகள்) ஆவார்கள், info
التفاسير:

external-link copy
19 : 90

وَالَّذِیْنَ كَفَرُوْا بِاٰیٰتِنَا هُمْ اَصْحٰبُ الْمَشْـَٔمَةِ ۟ؕ

இன்னும், எவர்கள் நம் வசனங்களை நிராகரித்தார்களோ அவர்கள் இடப்பக்கமுடையவர்கள் (நரகவாசிகள்) ஆவார்கள். info
التفاسير:

external-link copy
20 : 90

عَلَیْهِمْ نَارٌ مُّؤْصَدَةٌ ۟۠

(அவர்கள் நரகத்தில் தள்ளப்பட்டப்பின் அந்த) நரகம் அவர்கள் மீது மூடப்படும். (அதற்கு வாசல்களோ ஜன்னல்களோ இருக்காது.) info
التفاسير: