Translation of the Meanings of the Noble Qur'an - Tamil translation - Omar Sharif

அஸ்ஸஜதா

external-link copy
1 : 32

الٓمّٓ ۟ۚ

அலிஃப் லாம் மீம். info
التفاسير:

external-link copy
2 : 32

تَنْزِیْلُ الْكِتٰبِ لَا رَیْبَ فِیْهِ مِنْ رَّبِّ الْعٰلَمِیْنَ ۟ؕ

இது, (முஹம்மத் நபியின் மீது) அகிலங்களின் இறைவனிடமிருந்து இறக்கப்பட்ட வேதமாகும். இதில் அறவே சந்தேகம் இல்லை. info
التفاسير:

external-link copy
3 : 32

اَمْ یَقُوْلُوْنَ افْتَرٰىهُ ۚ— بَلْ هُوَ الْحَقُّ مِنْ رَّبِّكَ لِتُنْذِرَ قَوْمًا مَّاۤ اَتٰىهُمْ مِّنْ نَّذِیْرٍ مِّنْ قَبْلِكَ لَعَلَّهُمْ یَهْتَدُوْنَ ۟

இதை (முஹம்மத்) இட்டுக் கட்டினார் என்று அவர்கள் கூறுகிறார்களா? மாறாக! இது, உமது இறைவனிடமிருந்து வந்த உண்மையா(ன வேதமா)கும். இதற்கு முன்னர் அவர்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவர் எவரும் வராத ஒரு சமுதாயத்தை - அவர்கள் நேர்வழி பெறுவதற்காக - நீர் எச்சரிப்பதற்காக (உமக்கு இவ்வேதம் இறக்கப்பட்டது). info
التفاسير:

external-link copy
4 : 32

اَللّٰهُ الَّذِیْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَمَا بَیْنَهُمَا فِیْ سِتَّةِ اَیَّامٍ ثُمَّ اسْتَوٰی عَلَی الْعَرْشِ ؕ— مَا لَكُمْ مِّنْ دُوْنِهٖ مِنْ وَّلِیٍّ وَّلَا شَفِیْعٍ ؕ— اَفَلَا تَتَذَكَّرُوْنَ ۟

அல்லாஹ்தான் வானங்களையும் பூமியையும் அவ்விரண்டுக்கும் இடையில் உள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தான். பிறகு, அர்ஷ் மீது உயர்ந்தான். அவனை அன்றி உங்களுக்கு பொறுப்பாளரோ பரிந்துரையாளரோ இல்லை. நீங்கள் நல்லுணர்வு பெறமாட்டீர்களா? info
التفاسير:

external-link copy
5 : 32

یُدَبِّرُ الْاَمْرَ مِنَ السَّمَآءِ اِلَی الْاَرْضِ ثُمَّ یَعْرُجُ اِلَیْهِ فِیْ یَوْمٍ كَانَ مِقْدَارُهٗۤ اَلْفَ سَنَةٍ مِّمَّا تَعُدُّوْنَ ۟

வானத்திலிருந்து பூமி வரை உள்ள (எல்லா) காரியத்தை(யும்) அவன் திட்டமிட்டு நிர்வகிக்கிறான். (பிறகு, ஒரு நாளில் அது பூமியில் இறங்குகிறது.) பிறகு, (அதே) ஒரு நாளில் அது அவன் பக்கம் உயர்கிறது. அ(ந்)த (ஒரு நாளி)ன் அளவு நீங்கள் எண்ணுகிற(கால அளவின்)படி ஆயிரம் ஆண்டுகளாக இருக்கிறது. info
التفاسير:

external-link copy
6 : 32

ذٰلِكَ عٰلِمُ الْغَیْبِ وَالشَّهَادَةِ الْعَزِیْزُ الرَّحِیْمُ ۟ۙ

அவன்தான் (உங்கள் பார்வைகளுக்கு) மறைவானதையும் (உங்கள் பார்வைக்கு வெளியில்) தெரிவதையும் அறிந்தவன், மிகைத்தவன், மகா கருணையாளன் ஆவான். info
التفاسير:

external-link copy
7 : 32

الَّذِیْۤ اَحْسَنَ كُلَّ شَیْءٍ خَلَقَهٗ وَبَدَاَ خَلْقَ الْاِنْسَانِ مِنْ طِیْنٍ ۟ۚ

தான் படைத்த ஒவ்வொன்றையும் அவன் செம்மையா(க, சீராக, அழகாக உருவா)க்கினான். மனிதன் படைக்கப்படுவதை களிமண்ணிலிருந்து ஆரம்பித்தான். info
التفاسير:

external-link copy
8 : 32

ثُمَّ جَعَلَ نَسْلَهٗ مِنْ سُلٰلَةٍ مِّنْ مَّآءٍ مَّهِیْنٍ ۟ۚ

பிறகு, அவனது சந்ததிகளை (ஆணிடமிருந்து) வெளியேறக்கூடிய நீரிலிருந்து, மென்மையான (இந்திரிய) நீரிலிருந்து உருவாக்கினான். info
التفاسير:

external-link copy
9 : 32

ثُمَّ سَوّٰىهُ وَنَفَخَ فِیْهِ مِنْ رُّوْحِهٖ وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْاَبْصَارَ وَالْاَفْـِٕدَةَ ؕ— قَلِیْلًا مَّا تَشْكُرُوْنَ ۟

பிறகு, அவனை சமமாக்கினான் (சீரான, நேர்த்தியான முறையில் உருவமைத்தான்). தான் படைத்த உயிரிலிருந்து அவனுக்குள் ஊதினான். இன்னும், உங்களுக்கு செவியையும் பார்வைகளையும் இதயங்களையும் அவன் அமைத்தான். நீங்கள் மிகக் குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள். info
التفاسير:

external-link copy
10 : 32

وَقَالُوْۤا ءَاِذَا ضَلَلْنَا فِی الْاَرْضِ ءَاِنَّا لَفِیْ خَلْقٍ جَدِیْدٍ ؕ۬— بَلْ هُمْ بِلِقَآءِ رَبِّهِمْ كٰفِرُوْنَ ۟

அவர்கள் கூறுகிறார்கள்: “நாங்கள் (மரணித்தப் பின்னர் புதைக்கப்பட்டு) பூமியில் (மண்ணோடு மண்ணாக) மறைந்து விட்டால், (அதன் பிறகு) நிச்சயமாக நாங்கள் புதிய படைப்பாக (மீண்டும்) படைக்கப்படுவோமா?” மாறாக, அவர்கள் தங்கள் இறைவனின் சந்திப்பை நிராகரிப்பவர்கள் ஆவார்கள். info
التفاسير:

external-link copy
11 : 32

قُلْ یَتَوَفّٰىكُمْ مَّلَكُ الْمَوْتِ الَّذِیْ وُكِّلَ بِكُمْ ثُمَّ اِلٰی رَبِّكُمْ تُرْجَعُوْنَ ۟۠

(நபியே) கூறுவீராக! உங்களுக்கு நியமிக்கப்பட்ட மலக்குல் மவுத் (-உயிர் வாங்கும் வானவர்) உங்களை உயிர் கைப்பற்றுவார். பிறகு, உங்கள் இறைவனிடம் நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். info
التفاسير: