Translation of the Meanings of the Noble Qur'an - Tamil translation - Omar Sharif

Page Number:close

external-link copy
89 : 2

وَلَمَّا جَآءَهُمْ كِتٰبٌ مِّنْ عِنْدِ اللّٰهِ مُصَدِّقٌ لِّمَا مَعَهُمْ ۙ— وَكَانُوْا مِنْ قَبْلُ یَسْتَفْتِحُوْنَ عَلَی الَّذِیْنَ كَفَرُوْا ۚ— فَلَمَّا جَآءَهُمْ مَّا عَرَفُوْا كَفَرُوْا بِهٖ ؗ— فَلَعْنَةُ اللّٰهِ عَلَی الْكٰفِرِیْنَ ۟

இன்னும், அவர்களிடமுள்ள (வேதத்)தை உண்மைப்படுத்தக்கூடிய ஒரு வேதம் அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு வந்தபோது, - அவர்களோ, நிராகரித்தவர்களுக்கு எதிராக (இந்த வேதத்தின் பொருட்டால் அல்லாஹ்விடம்) வெற்றியை தேடுபவர்களாக (இதற்கு) முன்னர் இருந்தார்கள். ஆக, அவர்கள் அறிந்திருந்த (இந்த வேதமான)து அவர்களிடம் (இப்போது) வந்தபோது அதை (அவர்கள்) நிராகரித்தார்கள். ஆக, நிராகரிப்பவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகுக! info
التفاسير:

external-link copy
90 : 2

بِئْسَمَا اشْتَرَوْا بِهٖۤ اَنْفُسَهُمْ اَنْ یَّكْفُرُوْا بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ بَغْیًا اَنْ یُّنَزِّلَ اللّٰهُ مِنْ فَضْلِهٖ عَلٰی مَنْ یَّشَآءُ مِنْ عِبَادِهٖ ۚ— فَبَآءُوْ بِغَضَبٍ عَلٰی غَضَبٍ ؕ— وَلِلْكٰفِرِیْنَ عَذَابٌ مُّهِیْنٌ ۟

அல்லாஹ் தனது அடியார்களில், தான் நாடியவர் மீது (வேதம் எனும்) தன் அருளை இறக்குவதைப் பற்றி பொறாமைப்பட்டு, அல்லாஹ் இறக்கிய (இவ்வேதத்)தை அவர்கள் நிராகரித்து, தங்களை எதற்குப் பகரமாக விற்றார்களோ அது (மிகக்) கெட்டதாக இருக்கிறது. (தவ்ராத்தை செயல்படுத்தாததால் அவர்கள் மீதிருந்த அல்லாஹ்வின்) கோபத்திற்கு மேல் (குர்ஆனையும் இந்த நபியையும் நிராகரித்து மேலும் அல்லாஹ்வின்) கோபத்திற்குரியவர்களாக அவர்கள் ஆகிவிட்டார்கள். இன்னும், (முஹம்மத் நபியை) நிராகரிப்பவர்களுக்கு இழிவு தரக்கூடிய தண்டனை உண்டு. info
التفاسير:

external-link copy
91 : 2

وَاِذَا قِیْلَ لَهُمْ اٰمِنُوْا بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ قَالُوْا نُؤْمِنُ بِمَاۤ اُنْزِلَ عَلَیْنَا وَیَكْفُرُوْنَ بِمَا وَرَآءَهٗ ۗ— وَهُوَ الْحَقُّ مُصَدِّقًا لِّمَا مَعَهُمْ ؕ— قُلْ فَلِمَ تَقْتُلُوْنَ اَنْۢبِیَآءَ اللّٰهِ مِنْ قَبْلُ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۟

இன்னும், “அல்லாஹ் இறக்கிய (இவ்வேதத்)தை நீங்கள் நம்பிக்கை கொள்ளுங்கள்” என அவர்களுக்குக் கூறப்பட்டால், “எங்கள் (நபிமார்கள்) மீது இறக்கப்பட்டதை (மட்டுமே) நாங்கள் நம்பிக்கை கொள்வோம்” எனக் கூறுகிறார்கள். அதற்குப் பின்னால் இறக்கப்பட்ட (இந்த வேதத்)தை நிராகரிக்கிறார்கள். அதுவோ அவர்களிடமுள்ள (தவ்ராத்)தை உண்மைப்படுத்தக்கூடிய உண்மையா(ன வேதமா)கும். (நபியே!) கூறுவீராக: “(உங்கள் வேதத்தை உண்மையாகவே) நம்பிக்கை கொண்டவர்களாக நீங்கள் இருந்தால் (உங்களுக்கு அனுப்பப்பட்ட) அல்லாஹ்வுடைய தூதர்களை (இதற்கு) முன்னர் எதற்காகக் கொலை செய்தீர்கள்?” info
التفاسير:

external-link copy
92 : 2

وَلَقَدْ جَآءَكُمْ مُّوْسٰی بِالْبَیِّنٰتِ ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْ بَعْدِهٖ وَاَنْتُمْ ظٰلِمُوْنَ ۟

இன்னும், திட்டவட்டமாக மூஸா தெளிவான அத்தாட்சிகளுடன் உங்களிடம் வந்தார். பிறகு, அவர் (தனது இறைவன் குறிப்பிட்ட நேரத்தில் அவனை சந்திக்க) சென்றதற்குப் பின்னர் - நீங்களோ அநியாயக்காரர்களாக இருந்த நிலையில் - ஒரு காளைக் கன்றை(த் தெய்வமாக) எடுத்துக் கொண்டீர்கள். info
التفاسير:

external-link copy
93 : 2

وَاِذْ اَخَذْنَا مِیْثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّوْرَ ؕ— خُذُوْا مَاۤ اٰتَیْنٰكُمْ بِقُوَّةٍ وَّاسْمَعُوْا ؕ— قَالُوْا سَمِعْنَا وَعَصَیْنَا ۗ— وَاُشْرِبُوْا فِیْ قُلُوْبِهِمُ الْعِجْلَ بِكُفْرِهِمْ ؕ— قُلْ بِئْسَمَا یَاْمُرُكُمْ بِهٖۤ اِیْمَانُكُمْ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۟

இன்னும், உங்களுக்கு மேல் மலையை நாம் உயர்த்தி, “உங்களுக்கு நாம் கொடுத்ததைப் பலமாகப் பிடியுங்கள் (பின்பற்றுங்கள்); செவிசாயுங்கள்” என உங்கள் உறுதிமொழியை நாம் வாங்கிய சமயத்தை நினைவு கூருங்கள். செவியுற்றோம் (என்று நாவாலும்); மாறுசெய்தோம் என்று (உள்ளத்தாலும் அவர்கள்) கூறினார்கள். அவர்களுடைய நிராகரிப்பின் காரணமாக அவர்களுடைய உள்ளங்களில் காளைக் கன்றுடைய மோகம் (- அதை வணங்க வேண்டுமென்ற ஆசை) மிகைத்து விட்டது. “நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால், உங்கள் நம்பிக்கை உங்களுக்கு எதை ஏவுகிறதோ அது மிகக் கெட்டது” என்று (நபியே!) கூறுவீராக! info
التفاسير: