Translation of the Meanings of the Noble Qur'an - Tamil translation - Omar Sharif

இப்ராஹீம்

external-link copy
1 : 14

الٓرٰ ۫— كِتٰبٌ اَنْزَلْنٰهُ اِلَیْكَ لِتُخْرِجَ النَّاسَ مِنَ الظُّلُمٰتِ اِلَی النُّوْرِ ۙ۬— بِاِذْنِ رَبِّهِمْ اِلٰی صِرَاطِ الْعَزِیْزِ الْحَمِیْدِ ۟ۙ

1, அலிஃப் லாம் றா. (நபியே!) இது ஒரு வேதம். மக்களை அவர்களுடைய இறைவனின் அனுமதியின்படி இருள்களிலிருந்து ஒளியின் பக்கம்; மிகைத்தவன், மகா புகழாளன் உடைய பாதையின் பக்கம் நீர் வெளியேற்றுவதற்காக இதை உமக்கு இறக்கி தந்தோம். info
التفاسير:

external-link copy
2 : 14

اللّٰهِ الَّذِیْ لَهٗ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ— وَوَیْلٌ لِّلْكٰفِرِیْنَ مِنْ عَذَابٍ شَدِیْدِ ۟ۙ

அல்லாஹ், வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அவனுக்கே சொந்தமானவையாகும். நிராகரிப்பாளர்களுக்கு கடினமான தண்டனையின் கேடு உண்டாகுக! info
التفاسير:

external-link copy
3 : 14

١لَّذِیْنَ یَسْتَحِبُّوْنَ الْحَیٰوةَ الدُّنْیَا عَلَی الْاٰخِرَةِ وَیَصُدُّوْنَ عَنْ سَبِیْلِ اللّٰهِ وَیَبْغُوْنَهَا عِوَجًا ؕ— اُولٰٓىِٕكَ فِیْ ضَلٰلٍۢ بَعِیْدٍ ۟

அவர்கள் மறுமையை விட உலக வாழ்க்கையை விரும்புகிறார்கள்; இன்னும், அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மக்களை) தடுக்கிறார்கள்; மேலும், அதில் கோணலை(யும் குறையையும் உண்டாக்க) தேடுகிறார்கள். அவர்கள் தூரமான வழிகேட்டில் உள்ளனர். info
التفاسير:

external-link copy
4 : 14

وَمَاۤ اَرْسَلْنَا مِنْ رَّسُوْلٍ اِلَّا بِلِسَانِ قَوْمِهٖ لِیُبَیِّنَ لَهُمْ ؕ— فَیُضِلُّ اللّٰهُ مَنْ یَّشَآءُ وَیَهْدِیْ مَنْ یَّشَآءُ ؕ— وَهُوَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟

(நபியே!) எந்த ஒரு தூதரையும் அவருடைய மக்களின் மொழியிலேயே தவிர நாம் அனுப்பவில்லை. நோக்கம், அவர் அவர்களுக்கு (மார்க்கத்தை) தெளிவுபடுத்த வேண்டும் என்பதாகும். ஆக, அல்லாஹ், தான் நாடுபவர்களை வழிகெடுக்கிறான். இன்னும், தான் நாடுபவர்களை நேர்வழி செலுத்துகிறான். மேலும், அவன்தான் மிகைத்தவன், மகா ஞானவான். info
التفاسير:

external-link copy
5 : 14

وَلَقَدْ اَرْسَلْنَا مُوْسٰی بِاٰیٰتِنَاۤ اَنْ اَخْرِجْ قَوْمَكَ مِنَ الظُّلُمٰتِ اِلَی النُّوْرِ ۙ۬— وَذَكِّرْهُمْ بِاَیّٰىمِ اللّٰهِ ؕ— اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّكُلِّ صَبَّارٍ شَكُوْرٍ ۟

திட்டவட்டமாக மூஸாவை நம் அத்தாட்சிகளுடன் (அவரது மக்களிடம்) நாம் அனுப்பினோம், (மூஸாவே!) “உம் சமுதாயத்தை இருள்களில் இருந்து ஒளியின் பக்கம் வெளியேற்றுவீராக! இன்னும், அல்லாஹ்வின் அருட்கொடைகளை அவர்களுக்கு ஞாபகமூட்டுவீராக! மிக பொறுமையாளர், மிக்க நன்றியறிபவர் எல்லோருக்கும் நிச்சயமாக இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன. info
التفاسير: