Translation of the Meanings of the Noble Qur'an - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran

அத்தக்வீர்

Purposes of the Surah:
كمال القرآن في تذكير الأنفس باختلال الكون عند البعث.
மீண்டும் எழுப்பும் போது பிரபஞ்சம் சீர்குழைந்துவிடும் என உள்ளங்களுக்கு ஞாபகமூட்டுவதில் அல்குர்ஆனின் பரிபூரணத்துவம் info

external-link copy
1 : 81

اِذَا الشَّمْسُ كُوِّرَتْ ۟

81.1. சூரியன் ஒன்றுசேர்க்கப்பட்டு அதன் ஒளி சென்றுவிடும்போது. info
التفاسير:

external-link copy
2 : 81

وَاِذَا النُّجُوْمُ انْكَدَرَتْ ۟

81.2. நட்சத்திரங்கள் வீழ்ந்து அவற்றின் ஒளி அழிந்துவிடும்போது. info
التفاسير:

external-link copy
3 : 81

وَاِذَا الْجِبَالُ سُیِّرَتْ ۟

81.3. மலைகள் தம் இடங்களிலிருந்து இடம்பெயர்க்கப்படும் போது. info
التفاسير:

external-link copy
4 : 81

وَاِذَا الْعِشَارُ عُطِّلَتْ ۟

மக்கள் பெறுவதற்கு போட்டி போட்டுக்கொள்ளும் கருவுற்ற ஒட்டகங்கள் அவற்றின் உரிமையாளர்களால் கைவிடப்படும்போது
info
التفاسير:

external-link copy
5 : 81

وَاِذَا الْوُحُوْشُ حُشِرَتْ ۟

81.5. வனவிலங்குகள் மனிதர்களுடன் ஒரே இடத்தில் ஒன்றுதிரட்டப்படும்போது. info
التفاسير:

external-link copy
6 : 81

وَاِذَا الْبِحَارُ سُجِّرَتْ ۟

81.6. கடல்கள் எரிக்கப்பட்டு நெருப்பாகி விடும்போது. info
التفاسير:

external-link copy
7 : 81

وَاِذَا النُّفُوْسُ زُوِّجَتْ ۟

81.7. உயிர்கள் அதற்கு இணையானவற்றுடன் ஒன்றுசேர்க்கப்படும் போது, தீயவர்கள் தீயவர்களுடனும் இறையச்சமுடையவர்கள் இறையச்சமுடையவர்களுடன் ஒன்றுசேர்க்கப்படுவார்கள். info
التفاسير:

external-link copy
8 : 81

وَاِذَا الْمَوْءٗدَةُ سُىِٕلَتْ ۟

81.8,9. உயிருடன் புதைக்கப்பட்ட பெண் குழந்தையிடம் (உன்னைக் கொன்றவன் எந்த குற்றத்திற்காக கொன்றான் என்று) அல்லாஹ் கேட்கும்போது. info
التفاسير:

external-link copy
9 : 81

بِاَیِّ ذَنْۢبٍ قُتِلَتْ ۟ۚ

“உன்னைக் கொன்றவன் எந்த குற்றத்திற்காக கொன்றான். info
التفاسير:

external-link copy
10 : 81

وَاِذَا الصُّحُفُ نُشِرَتْ ۟

81.10. ஒவ்வொருவரும் தம் செயல்பதிவேட்டை படிக்க வேண்டும் என்பதற்காக, அடியார்களின் செயல்பதிவேடுகள் விரிக்கப்படும் போது. info
التفاسير:

external-link copy
11 : 81

وَاِذَا السَّمَآءُ كُشِطَتْ ۟

81.11. ஆட்டிலிருந்து தோல் கழற்றப்படுவது போன்று வானம் கழற்றப்படும் போது. info
التفاسير:

external-link copy
12 : 81

وَاِذَا الْجَحِیْمُ سُعِّرَتْ ۟

81.12. நெருப்பு மூட்டப்படும் போது. info
التفاسير:

external-link copy
13 : 81

وَاِذَا الْجَنَّةُ اُزْلِفَتْ ۟

81.13. சுவனம் இறையச்சமுடையோருக்காக அருகில் கொண்டுவரப்படும் போது. info
التفاسير:

external-link copy
14 : 81

عَلِمَتْ نَفْسٌ مَّاۤ اَحْضَرَتْ ۟ؕ

81.14. இவை நிகழும்போது ஒவ்வொருவரும் அந்த நாளுக்காக முற்படுத்தி வைத்த செயல்களை அறிந்துகொள்வார்கள். info
التفاسير:

external-link copy
15 : 81

فَلَاۤ اُقْسِمُ بِالْخُنَّسِ ۟ۙ

81.15. இரவில் வெளிப்படுவதற்கு முன் மறைந்து காணப்படும் நட்சத்திரங்களைக் கொண்டு அல்லாஹ் சத்தியம் செய்கின்றான். info
التفاسير:

external-link copy
16 : 81

الْجَوَارِ الْكُنَّسِ ۟ۙ

81.16. அவை தமது பாதைகளில் ஓடுகின்றன. மேலும் மான்கள் தம் இல்லங்களில் பிரவேசித்து மறைவது போல அவை பொழுது விடியும் போது மறைகின்றன. info
التفاسير:

external-link copy
17 : 81

وَالَّیْلِ اِذَا عَسْعَسَ ۟ۙ

81.17. முன்னோக்கி வரும் இரவின் ஆரம்பத்தைக் கொண்டும் பின்னோக்கிச் செல்லும் இரவின் இறுதியைக் கொண்டும் அவன் சத்தியம் செய்கின்றான். info
التفاسير:

external-link copy
18 : 81

وَالصُّبْحِ اِذَا تَنَفَّسَ ۟ۙ

81.18. பிரகாசமான காலைப் பொழுதைக் கொண்டும் அவன் சத்தியம் செய்கின்றான். info
التفاسير:

external-link copy
19 : 81

اِنَّهٗ لَقَوْلُ رَسُوْلٍ كَرِیْمٍ ۟ۙ

81.19. நிச்சயமாக முஹம்மது மீது இறக்கப்பட்ட குர்ஆன் இறைவன் நம்பிக்கைக்குரியவராக எடுத்துக்கொண்ட ஜிப்ரீல் என்னும் வானவரால் எடுத்துரைக்கப்பட்ட அல்லாஹ்வின் பேச்சாகும். info
التفاسير:

external-link copy
20 : 81

ذِیْ قُوَّةٍ عِنْدَ ذِی الْعَرْشِ مَكِیْنٍ ۟ۙ

81.20. அவர் பலம் மிக்கவர், அர்ஷின் இறைவனிடத்தில் பெரும் அந்தஸ்துடையவர். info
التفاسير:

external-link copy
21 : 81

مُّطَاعٍ ثَمَّ اَمِیْنٍ ۟ؕ

81.21. வானத்திலுள்ளவர்கள் அவருக்குக் கட்டுப்படுகிறார்கள். தான் எடுத்துரைக்கும் வஹியில் அவர் நம்பிக்கைக்குரியவர். info
التفاسير:

external-link copy
22 : 81

وَمَا صَاحِبُكُمْ بِمَجْنُوْنٍ ۟ۚ

81.22. நீங்கள் அபாண்டமாக இட்டுக்கட்டி வாதிடுவது போல உங்களோடு சேர்ந்து இருக்கும் முஹம்மது பைத்தியக்காரர் அல்ல. அவரது அறிவையும் வாய்மையையும் அமானிதத்தையும் நீங்கள் அறிவீர்கள். info
التفاسير:

external-link copy
23 : 81

وَلَقَدْ رَاٰهُ بِالْاُفُقِ الْمُبِیْنِ ۟ۚ

81.23. உங்களின் தோழர் தெளிவான அடிவானத்தில் ஜிப்ரீலை அவரது இயல்பான தோற்றத்தில் கண்டார். info
التفاسير:

external-link copy
24 : 81

وَمَا هُوَ عَلَی الْغَیْبِ بِضَنِیْنٍ ۟ۚ

81.24. உங்களின் தோழர் தமக்குக் கட்டளையிடப்பட்டதை உங்களுக்கு எடுத்துரைக்காமல் கஞ்சத்தனம் செய்பவர் அல்ல. ஜோதிடர்கள் கூலி பெறுவதுபோல கூலி பெறுபவரும் அல்ல. info
التفاسير:

external-link copy
25 : 81

وَمَا هُوَ بِقَوْلِ شَیْطٰنٍ رَّجِیْمٍ ۟ۙ

81.25. இந்த குர்ஆன் அல்லாஹ்வின் அருளிலிருந்து தூரமாக்கப்பட்ட ஷைத்தானின் வாக்கும் அல்ல. info
التفاسير:

external-link copy
26 : 81

فَاَیْنَ تَذْهَبُوْنَ ۟ؕ

81.26. இவ்வளவு ஆதாரங்களுக்குப் பிறகும் நிச்சயமாக இது அல்லாஹ்விடமிருந்தே வந்துள்ளது என்பதை மறுப்பதற்கு நீங்கள் எந்த வழிமுறையைப் பின்பற்றுவீர்கள்? info
التفاسير:

external-link copy
27 : 81

اِنْ هُوَ اِلَّا ذِكْرٌ لِّلْعٰلَمِیْنَ ۟ۙ

81.27. இந்த குர்ஆன் மனிதர்கள் மற்றும் ஜின்களுக்கு நினைவூட்டலும் அறிவுரையுமேயாகும். info
التفاسير:

external-link copy
28 : 81

لِمَنْ شَآءَ مِنْكُمْ اَنْ یَّسْتَقِیْمَ ۟ؕ

81.28. உங்களில் யார் சத்தியப் பாதையில் செல்ல விரும்புகிறார்களோ அவர்களுக்கு. info
التفاسير:

external-link copy
29 : 81

وَمَا تَشَآءُوْنَ اِلَّاۤ اَنْ یَّشَآءَ اللّٰهُ رَبُّ الْعٰلَمِیْنَ ۟۠

81.29. படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் இறைவனான அல்லாஹ் நாடினாலன்றி நீங்கள் நேர்வழியில் செல்லவோ, இன்னபிற வழிகளில் செல்லவோ உங்களால் நாட முடியாது. info
التفاسير:
Benefits of the verses in this page:
• حَشْر المرء مع من يماثله في الخير أو الشرّ.
1. மனிதன் நன்மையிலும் தீமையிலும் தன்னைப் போன்றவர்களுடன் ஒன்றுதிரட்டப்படுவான். info

• إذا كانت الموءُودة تُسأل فما بالك بالوائد؟ وهذا دليل على عظم الموقف.
2. உயிருடன் புதைக்கப்பட்ட பெண் குழந்தையும் கேள்விக்குட்படுத்தப்படும் என்றிருக்கும் போது உயிருடன் அக்குழந்தைகளைப் புதைத்தவனின் நிலமை என்ன? இது அந்நிலமையின் பாரதூரத்துக்கான ஒரு ஆதாரமாகும். info

• مشيئة العبد تابعة لمشيئة الله.
3. அடியானின் விருப்பம் அல்லாஹ்வின் விருப்பத்திற்குக் கட்டுப்பட்டதாகும். info