Translation of the Meanings of the Noble Qur'an - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran

external-link copy
41 : 8

وَاعْلَمُوْۤا اَنَّمَا غَنِمْتُمْ مِّنْ شَیْءٍ فَاَنَّ لِلّٰهِ خُمُسَهٗ وَلِلرَّسُوْلِ وَلِذِی الْقُرْبٰی وَالْیَتٰمٰی وَالْمَسٰكِیْنِ وَابْنِ السَّبِیْلِ ۙ— اِنْ كُنْتُمْ اٰمَنْتُمْ بِاللّٰهِ وَمَاۤ اَنْزَلْنَا عَلٰی عَبْدِنَا یَوْمَ الْفُرْقَانِ یَوْمَ الْتَقَی الْجَمْعٰنِ ؕ— وَاللّٰهُ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟

8.41. -நம்பிக்கையாளர்களே!- அறிந்துகொள்ளுங்கள், அல்லாஹ்வின் பாதையில் போர்செய்து நிராகரிப்பாளர்களிடமிருந்து நீங்கள் கைப்பற்றிய செல்வங்களை ஐந்து பங்காகப் பிரிக்க வேண்டும். அதில் நான்கு பங்குகள் போரிட்ட வீரர்களிடையே பங்கிடப்பட வேண்டும். ஐந்தாவது பங்கு ஐந்தாகப் பங்கிடப்பட வேண்டும். ஒரு பங்கு அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உரியது. இது முஸ்லிம்களின் பொதுக் காரியங்களுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும். ஒரு பங்கு முஹம்மது நபியின் உறவினர்களான ஹாஷிமின் குடும்பத்தார், முத்தலிபின் குடும்பத்தார் ஆகியோருக்கு அளிக்கப்பட வேண்டும். ஒரு பங்கு அநாதைகளுக்கு வழங்கப்பட வேண்டும். ஒரு பங்கு ஏழைகளுக்கும் வறியவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். ஒரு பங்கு வழிப்போக்கர்களுக்காக வழங்கப்பட வேண்டும். நீங்கள் அல்லாஹ்வின் மீதும் சத்தியத்தையும் அசத்தியத்தையும் வேறுபடுத்திக் காட்டிய பத்ருடைய நாளில் நம்முடைய அடியார் முஹம்மதுக்கு இறக்கப்பட்டதன் மீதும் நம்பிக்கைகொண்டவர்களாக இருந்தால் மேற்கூறியவாறே பங்கிடுங்கள். பத்ருடைய தினத்தில் உங்கள் எதிரிகளுக்கு எதிராக அவன் உங்களுக்கு உதவி செய்தான். உங்களுக்கு உதவி செய்த அல்லாஹ் அனைத்தின் மீதும் ஆற்றலுடையவன். info
التفاسير:
Benefits of the verses in this page:
• الغنائم لله يجعلها حيث شاء بالكيفية التي يريد، فليس لأحد شأن في ذلك.
1. போர்ச் செல்வங்கள் அல்லாஹ்வுக்கே உரியன. தான் நாடியவாறு அவன் அதனைப் பங்கிடுகிறான். இதில் வேறு எவருக்கும் உரிமை இல்லை. info

• من أسباب النصر تدبير الله للمؤمنين بما يعينهم على النصر، والصبر والثبات والإكثار من ذكر الله.
2. நம்பிக்கையாளர்களுக்கு வெற்றியை வழங்குபவற்றை அவர்களுக்காக அல்லாஹ் திட்டமிடுவதும், பொறுமை, உறுதி, அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூறல் ஆகியவை வெற்றிக்கான காரணிகளில் உள்ளவையாகும். info

• قضاء الله نافذ وحكمته بالغة وهي الخير لعباد الله وللأمة كلها.
3. அல்லாஹ்வின் தீர்ப்பே நடந்தேறும். அவனது ஞானம் ஆழமானது. அதுவே அவனது அடியார்களுக்கும் முழு சமூகத்துக்கும் நலவாகும். info