Translation of the Meanings of the Noble Qur'an - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran

external-link copy
16 : 73

فَعَصٰی فِرْعَوْنُ الرَّسُوْلَ فَاَخَذْنٰهُ اَخْذًا وَّبِیْلًا ۟

73.16. ஃபிர்அவ்ன் தன்னிடம் தனது இறைவனிடமிருந்து அனுப்பப்பட்ட தூதருக்குக் கீழ்ப்படிய மறுத்தான். நாம் உலகில் அவனை மூழ்கடித்து கடுமையான முறையில் தண்டித்தோம். மறுமையில் நரக வேதனையால் நாம் அவனைத் தண்டிப்போம். நீங்கள் உங்கள் தூதரின் கட்டளைக்கு மாறாகச் செயல்படாதீர்கள். அவ்வாறு செயல்பட்டால் அவனுக்கு நேர்ந்ததைப் போன்றே உங்களுக்கும் நேரும். info
التفاسير:
Benefits of the verses in this page:
• أهمية قيام الليل وتلاوة القرآن وذكر الله والصبر للداعية إلى الله.
1. இரவுத் தொழுகை, குர்ஆன் ஓதுவது, அல்லாஹ்வை நினைவுகூர்வது, பொறுமையைக் கடைப்பிடித்தல் ஆகியவை அல்லாஹ்வின்பால் அழைக்கும் அழைப்பாளனுக்கு மிகப்பிரதானமானவையாகும். info

• فراغ القلب في الليل له أثر في الحفظ والفهم.
2. இரவு நேரத்தில் உள்ளம் ஓய்வாக இருப்பது மனனம் மற்றும் புரிதலில் தாக்கம் செலுத்தத் தக்கதாகும். info

• تحمّل التكاليف يقتضي تربية صارمة.
3. பொறுப்புகளைச் சுமப்பதற்கு கண்டிப்பான பண்பாட்டுப் பயிற்சி அவசியமானதாகும். info

• الترف والتوسع في التنعم يصدّ عن سبيل الله.
4. ஆடம்பரமும் அதிக உல்லாசமும் அல்லாஹ்வின் பாதையைவிட்டும் தடுக்கின்றன. info