Translation of the Meanings of the Noble Qur'an - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran

external-link copy
16 : 7

قَالَ فَبِمَاۤ اَغْوَیْتَنِیْ لَاَقْعُدَنَّ لَهُمْ صِرَاطَكَ الْمُسْتَقِیْمَ ۟ۙ

7.16. இப்லீஸ் கூறினான்: “உன் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நான் ஆதமுக்கு சிரம்பணிய மறுத்ததனால் நீ என்னை வழிகெடுத்துவிட்ட காரணத்தால் ஆதமுடைய மக்களை வழிகெடுப்பதற்காக உன்னுடைய நேரான வழியின் மீது அமர்ந்து கொள்வேன். அவர்களது தந்தை ஆதமுக்கு சிரம்பணியாமல் நான் வழிகெட்டது போன்று அவர்களையும் நேரான பாதையை விட்டும் திசைதிருப்பி வழிகெடுத்தே தீருவேன்.” info
التفاسير:
Benefits of the verses in this page:
• دلّت الآيات على أن من عصى مولاه فهو ذليل.
1. தன் இறைவனின் கட்டளைக்கு மாறாகச் செயல்படுபவன் இழிவடைவான் என்பதை மேற்கூறிய வசனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. info

• أعلن الشيطان عداوته لبني آدم، وتوعد أن يصدهم عن الصراط المستقيم بكل أنواع الوسائل والأساليب.
2. ஷைத்தான் மனிதர்களுடனான தனது விரோதத்தை பகிரங்கமாக அறிவித்துவிட்டான். அனைத்து வகையான வழிமுறைகள், சாதனங்கள் மூலமும் நேரான பாதையை விட்டும் அவர்களைத் தடுப்பதாக எச்சரிக்கையும் விடுத்துள்ளான். info

• خطورة المعصية وأنها سبب لعقوبات الله الدنيوية والأخروية.
3. பாவத்தின் விபரீதம். அது உலக, மறுமை தண்டணைகளுக்குக் காரணமாகும். info