Translation of the Meanings of the Noble Qur'an - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran

Page Number:close

external-link copy
160 : 7

وَقَطَّعْنٰهُمُ اثْنَتَیْ عَشْرَةَ اَسْبَاطًا اُمَمًا ؕ— وَاَوْحَیْنَاۤ اِلٰی مُوْسٰۤی اِذِ اسْتَسْقٰىهُ قَوْمُهٗۤ اَنِ اضْرِبْ بِّعَصَاكَ الْحَجَرَ ۚ— فَانْۢبَجَسَتْ مِنْهُ اثْنَتَا عَشْرَةَ عَیْنًا ؕ— قَدْ عَلِمَ كُلُّ اُنَاسٍ مَّشْرَبَهُمْ ؕ— وَظَلَّلْنَا عَلَیْهِمُ الْغَمَامَ وَاَنْزَلْنَا عَلَیْهِمُ الْمَنَّ وَالسَّلْوٰی ؕ— كُلُوْا مِنْ طَیِّبٰتِ مَا رَزَقْنٰكُمْ ؕ— وَمَا ظَلَمُوْنَا وَلٰكِنْ كَانُوْۤا اَنْفُسَهُمْ یَظْلِمُوْنَ ۟

7.160. நாம் இஸ்ராயீலின் மக்களை பன்னிரண்டு குலங்களாகப் பிரித்தோம். மூஸாவின் சமூகத்தினர் அவரிடம் தண்ணீர் வேண்டிப் பிரார்த்தியுங்கள் எனக் கேட்டுக் கொண்ட பொழுது, “மூஸாவே! உம்முடைய கைத்தடியால் பாறையை அடிப்பீராக.” என நாம் அவருக்கு வஹி அறிவித்தோம். மூஸா தடியை அடித்தார். பன்னிரண்டு குலங்களுக்கேற்ப அதிலிருந்து பன்னிரண்டு நீருற்றுகள் பொங்கி வழிந்தன. ஒவ்வொரு குலத்தாரும் தாம் அருந்தும் பகுதியை அறிந்து கொண்டனர். ஒரு குலத்தார் அருந்தவேண்டிய பகுதியில் மற்றொரு குலத்தார் அருந்தவில்லை. நாம் அவர்களுக்கு மேகங்களைக் கொண்டு நிழலிடச் செய்தோம். அவை அவர்கள் செல்லும் இடமெல்லாம் சென்றன. அவர்கள் நிற்கும் இடத்தில் நின்றன. அவர்கள் மீது எங்களுடைய அருட்கொடையான தேன் போன்ற இனிப்புப் பானத்தையும், காடை போன்ற சுவையான மாமிசத்தையுடைய சிறு பறவையையும் இறக்கினோம். நாம் அவர்களிடம் கூறினோம்: “நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையான உணவுகளை உண்ணுங்கள்.” அநியாயம், அருட்கொடைகளுக்கு நன்றி கெட்டத்தனமாக நடந்து கொள்ளுதல், அல்லாஹ்வை மதிக்க வேண்டிய முறைப்படி மதிக்காமலிருத்தல் போன்ற அவர்கள் மூலம் நிகழ்ந்தவற்றினால் நமக்கு எவ்வித குறையும் ஏற்படவில்லை. மாறாக அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு மாறாகச் செயல்பட்டு அவனது அருட்கொடைகளுக்கு நன்றி கெட்ட முறையில் நடந்து அழிவின் காரணங்களைத் தேடிய போது தமக்குத்தாமே அநீதி இழைத்துக் கொண்டார்கள். info
التفاسير:

external-link copy
161 : 7

وَاِذْ قِیْلَ لَهُمُ اسْكُنُوْا هٰذِهِ الْقَرْیَةَ وَكُلُوْا مِنْهَا حَیْثُ شِئْتُمْ وَقُوْلُوْا حِطَّةٌ وَّادْخُلُوا الْبَابَ سُجَّدًا نَّغْفِرْ لَكُمْ خَطِیْٓـٰٔتِكُمْ ؕ— سَنَزِیْدُ الْمُحْسِنِیْنَ ۟

7.161. தூதரே! அல்லாஹ் இஸ்ராயீலின் மக்களிடம் கூறியதை நினைவுகூர்வீராக: “நீங்கள் பைத்துல் முகத்தஸில் நுழையுங்கள். அந்த ஊரின் விளைச்சல்களில் எந்த இடத்திலிருந்து, எந்த நேரத்தில் விரும்பினாலும் உண்ணுங்கள். “எங்கள் இறைவா! எங்கள் பாவங்களை மன்னித்து விடுவாயாக” என்று கூறுங்கள். உங்கள் இறைவனுக்கு அடிபணிந்தவர்களாக வாயிலில் நுழையுங்கள். நீங்கள் அவ்வாறு செய்தால் நாம் உங்கள் பாவங்களை மன்னிப்போம். நன்மை செய்வோருக்கு இவ்வுலக மறுவுலக நன்மைகளை அதிகரித்து வழங்குவோம். info
التفاسير:

external-link copy
162 : 7

فَبَدَّلَ الَّذِیْنَ ظَلَمُوْا مِنْهُمْ قَوْلًا غَیْرَ الَّذِیْ قِیْلَ لَهُمْ فَاَرْسَلْنَا عَلَیْهِمْ رِجْزًا مِّنَ السَّمَآءِ بِمَا كَانُوْا یَظْلِمُوْنَ ۟۠

7.162. அவர்களில் அநியாயக்காரர்கள் தங்களுக்கு ஏவப்பட்ட சொல்லை வேறொன்றாக மாற்றிவிட்டார்கள். மன்னிப்பு வேண்டுவதற்குப் பதிலாக பரிகாசமாக ‘தானியத்திற்குள் விதை’ என்றார்கள். கட்டளையிடப்பட்ட செயலையும் மாற்றிவிட்டார்கள். அல்லாஹ்வுக்கு அடிபணிந்தவர்களாக தலை குனிந்தவாறு நுழைவதற்குப் பதிலாக தங்கள் பிட்டத்தால் தவழ்ந்தவாறு உள்ளே நுழைந்தார்கள். அவர்கள் செய்த அக்கிரமத்தின் காரணமாக நாம் அவர்கள் மீது வானத்திலிருந்து வேதனையை இறக்கினோம்.
info
التفاسير:

external-link copy
163 : 7

وَسْـَٔلْهُمْ عَنِ الْقَرْیَةِ الَّتِیْ كَانَتْ حَاضِرَةَ الْبَحْرِ ۘ— اِذْ یَعْدُوْنَ فِی السَّبْتِ اِذْ تَاْتِیْهِمْ حِیْتَانُهُمْ یَوْمَ سَبْتِهِمْ شُرَّعًا وَّیَوْمَ لَا یَسْبِتُوْنَ ۙ— لَا تَاْتِیْهِمْ ۛۚ— كَذٰلِكَ ۛۚ— نَبْلُوْهُمْ بِمَا كَانُوْا یَفْسُقُوْنَ ۟

7.163. தூதரே! சனிக்கிழமை மீன் பிடிக்கத் தடை விதிக்கப்பட்ட பின் மீன் பிடித்து அல்லாஹ்வின் வரம்புகளை மீறிய தமது முன்னோர்களை அல்லாஹ் தண்டித்ததை நினைவுபடுத்தும் விதமாக யூதர்களிடம் கேட்பீராக: மீன் பிடிப்பதற்கு தடுக்கப்பட்ட தினமான சனிக் கிழமையில் மீன்கள் கடலுக்கு மேல் மட்டத்தில் வரும் அதே வேளை ஏனைய நாட்களில் வராமலிருக்கச் செய்வதன் மூலம் அல்லாஹ் அவர்களைச் சோதித்தான். அவர்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படாமல் பாவங்கள் புரிந்ததனால்தான் அவன் அவர்களை இவ்வாறு சோதித்தான். தந்திரமாக அவர்கள் சனிக் கிழமைக்கு முன்னரே வலையை வீசி கிடங்குகளைத் தோண்டி வைத்தார்கள். சனிக்கிழமை மீன்கள் அதில் மாட்டிக் கொண்டன. ஞாயிற்றுக்கிழமை அவற்றை எடுத்து உண்டார்கள். info
التفاسير:
Benefits of the verses in this page:
• الجحود والكفران سبب في الحرمان من النعم.
1. மறுத்தலும் நன்றி கெட்டத்தனமாக நடந்துகொள்ளுதலும் அருட்கொடைகள் தடையாவதற்குக் காரணமாக அமைகின்றன. info

• من أسباب حلول العقاب ونزول العذاب التحايل على الشرع؛ لأنه ظلم وتجاوز لحدود الله.
2. மார்க்கத்தில் தந்திரம் செய்வது தண்டனை இறங்குவதற்கான காரணங்களில் ஒன்றாகும். ஏனெனில் அவ்வாறு செய்வது அநியாயமாகும், அல்லாஹ்வின் வரம்பை மீறுவதாகும். info