Translation of the Meanings of the Noble Qur'an - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran

Page Number:close

external-link copy
17 : 68

اِنَّا بَلَوْنٰهُمْ كَمَا بَلَوْنَاۤ اَصْحٰبَ الْجَنَّةِ ۚ— اِذْ اَقْسَمُوْا لَیَصْرِمُنَّهَا مُصْبِحِیْنَ ۟ۙ

68.17. நாம் தோட்டவாசிகளை சோதித்ததுபோன்றே இந்த இணைவைப்பாளர்களை பசியாலும் பஞ்சத்தாலும் சோதித்தோம். அந்த தோட்டவாசிகள், அதிகாலைப் பொழுதில் விரைந்து சென்று தோட்டத்தின் கனிகளைப் பறித்துவிட வேண்டும். எந்த ஏழைக்கும் எதுவும் கொடுத்து விடக்கூடாது என்று சத்தியம் செய்தபோது info
التفاسير:

external-link copy
18 : 68

وَلَا یَسْتَثْنُوْنَ ۟

68.18. தங்களின் சத்தியத்தில் இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) என்று கூறவில்லை. info
التفاسير:

external-link copy
19 : 68

فَطَافَ عَلَیْهَا طَآىِٕفٌ مِّنْ رَّبِّكَ وَهُمْ نَآىِٕمُوْنَ ۟

68.19. அல்லாஹ் அந்த (தோட்டத்தின் மீது) நெருப்பை அனுப்பினான். அவர்களால் அதனை விட்டும் நெருப்பைத் தடுக்கமுடியாத தூக்கத்தில் அவர்கள் ஆழ்ந்திருந்த சமயத்தில் அதனை பொசுக்கிவிட்டது. info
التفاسير:

external-link copy
20 : 68

فَاَصْبَحَتْ كَالصَّرِیْمِ ۟ۙ

68.20. இருளான இரவைப் போன்று அது கருப்பாகிவிட்டது. info
التفاسير:

external-link copy
21 : 68

فَتَنَادَوْا مُصْبِحِیْنَ ۟ۙ

68.21. அவர்கள் காலை நேரத்தில் பின்வருமாறு கூறிக்கொண்டே ஒருவரையொருவர் அழைத்தார்கள்: info
التفاسير:

external-link copy
22 : 68

اَنِ اغْدُوْا عَلٰی حَرْثِكُمْ اِنْ كُنْتُمْ صٰرِمِیْنَ ۟

68.22. “நீங்கள் தோட்டத்தின் கனிகளைப் பறிப்பதாயிருந்தால் ஏழைகள் வருவதற்கு முன்னரே அதிகாலையிலேயே உங்கள் தோட்டத்திற்குப் புறப்படுங்கள்.” என்று கூறினார்கள். info
التفاسير:

external-link copy
23 : 68

فَانْطَلَقُوْا وَهُمْ یَتَخَافَتُوْنَ ۟ۙ

68.23. அவர்கள் ஒருவருக்கொருவர் இரகசியமாகப் பேசிக் கொண்டே தங்கள் தோட்டத்திற்கு விரைந்து சென்றார்கள். info
التفاسير:

external-link copy
24 : 68

اَنْ لَّا یَدْخُلَنَّهَا الْیَوْمَ عَلَیْكُمْ مِّسْكِیْنٌ ۟ۙ

68.24. அவர்கள் ஒருவருக்கொருவர் கூறினார்கள்: “இன்றைய தினம் எந்த ஏழையும் உங்களின் தோட்டத்திற்கு வந்துவிடவே கூடாது.” info
التفاسير:

external-link copy
25 : 68

وَّغَدَوْا عَلٰی حَرْدٍ قٰدِرِیْنَ ۟

68.25. அவர்கள் கனிகளை (பறித்து அவற்றை ஏழைகளுக்குக் கொடுக்காமல்) தடுத்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று உறுதி பூண்டோராக அதிகாலையில் புறப்பட்டனர். info
التفاسير:

external-link copy
26 : 68

فَلَمَّا رَاَوْهَا قَالُوْۤا اِنَّا لَضَآلُّوْنَ ۟ۙ

68.26. அது எரிந்திருப்பதை அவர்கள் கண்டபோது, “நாம் தோட்டத்தின் வழி நமக்குத் தவறிவிட்டது” என ஒருவருக்கொருவர் கூறினார்கள். info
التفاسير:

external-link copy
27 : 68

بَلْ نَحْنُ مَحْرُوْمُوْنَ ۟

68.27. மாறாக நாம் அதன் கனிகளை ஏழைகளுக்குக் கொடுக்காமல் தடுத்து வைத்துக் கொள்வதற்கு உறுதியாக நாம் முடிவெடுத்ததனால் அதன் கனிகளைப் பறிப்பதை விட்டும் தடுக்கப்பட்டவர்களாகிவிட்டோம்.” info
التفاسير:

external-link copy
28 : 68

قَالَ اَوْسَطُهُمْ اَلَمْ اَقُلْ لَّكُمْ لَوْلَا تُسَبِّحُوْنَ ۟

68.28. அவர்களில் சிறந்தவர் கூறினார்: “நீங்கள் ஏழைகளுக்கு எதுவும் கொடுக்கக்கூடாது என்று உறுதியாக முடிவுசெய்தபோது ‘நீங்கள் அல்லாஹ்வின் துதிபாட வேண்டாமா? அவனிடம் பாவமன்னிப்புக் கோர வேண்டாமா?’ என்று நான் உங்களிடம் கூறவில்லையா?” info
التفاسير:

external-link copy
29 : 68

قَالُوْا سُبْحٰنَ رَبِّنَاۤ اِنَّا كُنَّا ظٰلِمِیْنَ ۟

68.29. அவர்கள் கூறினார்கள்: “எங்கள் இறைவன் பரிசுத்தமானவன். நம் தோட்டத்தின் கனிகளிலிருந்து ஏழைகளுக்குக் கொடுக்கக்கூடாது என்று நாங்கள் முடிவுசெய்து நிச்சயமாக எங்களுக்கு நாங்களே அநீதி இழைத்துக் கொண்டோம்.” info
التفاسير:

external-link copy
30 : 68

فَاَقْبَلَ بَعْضُهُمْ عَلٰی بَعْضٍ یَّتَلَاوَمُوْنَ ۟

68.30. அவர்கள் ஒருவரையொருவர் தங்கள் பேசும்போது பழிக்கலானார்கள். info
التفاسير:

external-link copy
31 : 68

قَالُوْا یٰوَیْلَنَاۤ اِنَّا كُنَّا طٰغِیْنَ ۟

68.31. வேதனையுடன் அவர்கள் கூறினார்கள்: “எங்கள் நஷ்டமே! நிச்சயமாக நாங்கள் ஏழைகளின் உரிமையை தடுத்து அல்லாஹ்வின் வரம்புகளை மீறக்கூடியவர்களாக இருந்தோம். info
التفاسير:

external-link copy
32 : 68

عَسٰی رَبُّنَاۤ اَنْ یُّبْدِلَنَا خَیْرًا مِّنْهَاۤ اِنَّاۤ اِلٰی رَبِّنَا رٰغِبُوْنَ ۟

68.32. எங்களின் இறைவன் இந்த தோட்டத்தைவிட சிறந்த ஒன்றை எங்களுக்கு வழங்கலாம். நிச்சயமாக நாங்கள் அவனிடம் மட்டுமே ஆதரவு வைக்கின்றோம். அவனிடம் மன்னிப்பை எதிர்பார்க்கின்றோம். அவனிடம் நலவை வேண்டுகிறோம். info
التفاسير:

external-link copy
33 : 68

كَذٰلِكَ الْعَذَابُ ؕ— وَلَعَذَابُ الْاٰخِرَةِ اَكْبَرُ ۘ— لَوْ كَانُوْا یَعْلَمُوْنَ ۟۠

68.33. இத்தண்டனை போன்றே வாழ்வாதாரத்தை தடுப்பதன் மூலம் நாம் நம் கட்டளைக்கு மாறாகச் செயல்படக்கூடியவர்களை தண்டிக்கின்றோம். அவர்கள் மறுமையின் வேதனையின் கடுமையையும் நிரந்தரத்தையும் அறிந்திருந்தால் அது மிக மகத்தானதாகும். info
التفاسير:

external-link copy
34 : 68

اِنَّ لِلْمُتَّقِیْنَ عِنْدَ رَبِّهِمْ جَنّٰتِ النَّعِیْمِ ۟

68.34. நிச்சயமாக அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்களுக்கு அவனிடம் அருட்கொடைகள் நிறைந்த சுவனங்கள் இருக்கின்றன. அவர்கள் அதில் குதூகலமாக இருப்பார்கள். அவர்களின் இன்பம் முடிவுறாதது. info
التفاسير:

external-link copy
35 : 68

اَفَنَجْعَلُ الْمُسْلِمِیْنَ كَالْمُجْرِمِیْنَ ۟ؕ

68.35. மக்காவைச் சேர்ந்த இணைவைப்பாளர்கள் எண்ணுவதுபோல நாம் கூலி வழங்குவதில் முஸ்லிம்களை நிராகரிப்பாளர்களைப் போன்று ஆக்கி விடுவோமோ என்ன? info
التفاسير:

external-link copy
36 : 68

مَا لَكُمْ ۫— كَیْفَ تَحْكُمُوْنَ ۟ۚ

68.36. -இணைவைப்பாளர்களே!- உங்களுக்கு என்னவாயிற்று? ஏவ்வாறு அநீதியாக, கோணலாக இந்த தீர்ப்பை அளிக்கின்றீர்கள்? info
التفاسير:

external-link copy
37 : 68

اَمْ لَكُمْ كِتٰبٌ فِیْهِ تَدْرُسُوْنَ ۟ۙ

68.37. அல்லது உங்களிடம் ஒரு வேதம் இருக்கின்றதா? அதில் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுபவர்களும் மாறுசெய்பவர்களும் சமமானவர்கள் என்று நீங்கள் படிக்கின்றீர்களா? info
التفاسير:

external-link copy
38 : 68

اِنَّ لَكُمْ فِیْهِ لَمَا تَخَیَّرُوْنَ ۟ۚ

68.38. அந்த வேதத்தில் மறுமையில் நீங்கள் விரும்புவதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று உள்ளதா? info
التفاسير:

external-link copy
39 : 68

اَمْ لَكُمْ اَیْمَانٌ عَلَیْنَا بَالِغَةٌ اِلٰی یَوْمِ الْقِیٰمَةِ ۙ— اِنَّ لَكُمْ لَمَا تَحْكُمُوْنَ ۟ۚ

68.39. அல்லது நீங்கள் விரும்புபவை உங்களுக்கு உண்டு என்ற சத்திய வாக்குறுதிகளை எம்மிடம் பெற்றுள்ளீர்களா? info
التفاسير:

external-link copy
40 : 68

سَلْهُمْ اَیُّهُمْ بِذٰلِكَ زَعِیْمٌ ۟ۚۛ

68.40. -தூதரே!- இவ்வாறு கூறுபவர்களிடம் நீர் கேட்பீராக: அவர்களில் இதற்கு யார் பொறுப்பாளன், என்று.” info
التفاسير:

external-link copy
41 : 68

اَمْ لَهُمْ شُرَكَآءُ ۛۚ— فَلْیَاْتُوْا بِشُرَكَآىِٕهِمْ اِنْ كَانُوْا صٰدِقِیْنَ ۟

68.41. அல்லது அவர்களுக்கு அல்லாஹ்வை விடுத்து இணைதெய்வங்கள் இருக்கின்றவா? அவை அவர்களையும் நம்பிக்கையாளர்களையும் கூலியில் சமமாக்குகின்றனவா? அவர்களை நம்பிக்கையாளர்களோடு கூலியில் அவர்களின் இணைதெய்வங்கள் சமமாக்குவார்கள் என்ற வாதத்தில் நிச்சயமாக அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களின் இந்த இணைத்தெய்வங்களை அழைத்து வரட்டும். info
التفاسير:

external-link copy
42 : 68

یَوْمَ یُكْشَفُ عَنْ سَاقٍ وَّیُدْعَوْنَ اِلَی السُّجُوْدِ فَلَا یَسْتَطِیْعُوْنَ ۟ۙ

68.42. மறுமை நாளில் பயங்கரம் வெளிப்பட்டுவிடும். நமது இறைவன் தனது கெண்டைக்காலை திறப்பான். மக்கள் சிரம்பணிய அழைக்கப்படுவார்கள். நம்பிக்கையாளர்கள் சிரம்பணிவார்கள். நிராகரிப்பாளர்கள் மற்றும் நயவஞ்சகர்கள் சிரம்பணிய முடியாமல் எஞ்சியிருப்பார்கள். info
التفاسير:
Benefits of the verses in this page:
• منع حق الفقير سبب في هلاك المال.
1. ஏழையின் உரிமையை வழங்காமல் தடுத்துக் கொள்வது சொத்தின் அழிவுக்குக் காரணமாக அமைகின்றது. info

• تعجيل العقوبة في الدنيا من إرادة الخير بالعبد ليتوب ويرجع.
2. உலகில் தண்டனை உடனடியாக வழங்கப்படுவது திருந்துவதற்கான, மீளுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவதால் அடியானுக்கு நலவை நாடுவதாகவே அமைந்துள்ளது. info

• لا يستوي المؤمن والكافر في الجزاء، كما لا تستوي صفاتهما.
3. நம்பிக்கையாளனும் நிராகரிப்பாளனும் பண்புகளில் சரிசமமாக மாட்டார்கள் என்பது போல கூலியிலும் சமமாக மாட்டார்கள். info