Translation of the Meanings of the Noble Qur'an - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran

அத்தலாக்

Purposes of the Surah:
بيان أحكام الطلاق وتعظيم حدوده وثمرات التقوى.
விவாகரத்தின் சட்டதிட்டங்களைத் தெளிவுபடுத்தி அதன் வரம்புகளை மகத்துவப்படுத்தலும், இறையச்சத்தின் பிரதிபலன்களைத் தெளிவுபடுத்தலும். info

external-link copy
1 : 65

یٰۤاَیُّهَا النَّبِیُّ اِذَا طَلَّقْتُمُ النِّسَآءَ فَطَلِّقُوْهُنَّ لِعِدَّتِهِنَّ وَاَحْصُوا الْعِدَّةَ ۚ— وَاتَّقُوا اللّٰهَ رَبَّكُمْ ۚ— لَا تُخْرِجُوْهُنَّ مِنْ بُیُوْتِهِنَّ وَلَا یَخْرُجْنَ اِلَّاۤ اَنْ یَّاْتِیْنَ بِفَاحِشَةٍ مُّبَیِّنَةٍ ؕ— وَتِلْكَ حُدُوْدُ اللّٰهِ ؕ— وَمَنْ یَّتَعَدَّ حُدُوْدَ اللّٰهِ فَقَدْ ظَلَمَ نَفْسَهٗ ؕ— لَا تَدْرِیْ لَعَلَّ اللّٰهَ یُحْدِثُ بَعْدَ ذٰلِكَ اَمْرًا ۟

65.1. நபியே! நீரோ உம் சமூகத்தில் யாரேனுமோ தம் மனைவியரை விவாகரத்து செய்ய விரும்பினால் அந்த மனைவியர் உடலுறவு இடம்பெறாத தூய்மையாக இருக்கும் ஆரம்ப காலங்களில் விவாகரத்து செய்யுங்கள். நீங்கள் விரும்பினால் அவர்களை திரும்ப மனைவியாக மீட்டிக்கொள்ளும் பொருட்டு இத்தாவின் கால அளவைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். உங்கள் இறைவனின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். விவாகரத்து செய்யப்பட்ட பெண்களை அவர்கள் வசிக்கும் உங்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றி விடாதீர்கள். அவர்களும் தங்களின் காலஅளவு முடியும் வரை வெளியேறக்கூடாது. ஆனால் அவர்கள் வெளிப்படையான பாவமான விபச்சாரம் போன்றவற்றில் ஈடுப்பட்டாலே தவிர. இந்த சட்டங்கள் அல்லாஹ் தன் அடியார்களுக்கு ஏற்படுத்திய வரம்புகளாகும். யார் அல்லாஹ்வின் சட்டங்களை மீறுகிறாரோ அவர் இறைவனுக்கு மாறுசெய்வதன் மூலம் அழிவிற்கான காரணங்களில் ஈடுபட்டு தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொள்கிறார். -விவாகரத்து செய்பவரே!-உமக்குத் தெரியாது, விவாகரத்தின் பின்னரும் அல்லாஹ் நீ எதிர்பார்க்காத ஒன்றை ஏற்படுத்தி நீ அவளை மீட்டிக்கொள்ளும் வாய்ப்புண்டு.
info
التفاسير:
Benefits of the verses in this page:
• خطاب النبي صلى الله عليه وسلم خطاب لأمته ما لم تثبت له الخصوصية.
1. தூதரை விளித்து உரையாடுவது, அவருக்கு மட்டுமே உரித்தானது என்பது உறுதியாகாதவரை அவரது சமூகத்தை விளித்து உரையாடப்பட்டதாகவே கருதப்படும். info

• وجوب السكنى والنفقة للمطلقة الرجعية.
2. திரும்ப அழைத்துக்கொள்ளத்தக்க விவாகரத்து வழங்கப்பட்ட பெண்களுக்கு தங்குமிடமும் செலவீனமும் வழங்குவது கணவன்மீது கட்டாயக் கடமையாகும். info

• النَّدْب إلى الإشهاد حسمًا لمادة الخلاف.
3. முரண்பாட்டைத் தவிர்ப்பதற்காக சாட்சிகளை ஏற்படுத்துமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. info

• كثرة فوائد التقوى وعظمها.
4. இறையச்சத்தின் அதிக பயன்களும் மகிமைகளும். info