Translation of the Meanings of the Noble Qur'an - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran

external-link copy
3 : 60

لَنْ تَنْفَعَكُمْ اَرْحَامُكُمْ وَلَاۤ اَوْلَادُكُمْ ۛۚ— یَوْمَ الْقِیٰمَةِ ۛۚ— یَفْصِلُ بَیْنَكُمْ ؕ— وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِیْرٌ ۟

60.3. உங்களின் உறவினர்கள், பிள்ளைகள் ஆகியோருக்காக வேண்டி நிராகரிப்பாளர்களுடன் நட்பு கொண்டால் அவர்கள் உங்களுக்கு ஒருபோதும் பயனளிக்கப் போவதில்லை. மறுமை நாளில் அல்லாஹ் உங்களிடையே பிரிவை ஏற்படுத்தி விடுவான். உங்களில் சுவனவாசிகள் சுவனத்தில் நுழைவார்கள். நரகவாசிகள் நரகத்தில் நுழைவார்கள். நீங்கள் ஒருவர் மற்றவருக்கு பலனளிக்க முடியாது. அல்லாஹ் நீங்கள் செய்யக்கூடியதை பார்க்கக்கூடியவன். உங்களின் செயல்களில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.
info
التفاسير:
Benefits of the verses in this page:
• تسريب أخبار أهل الإسلام إلى الكفار كبيرة من الكبائر.
1. முஸ்லிம்கள் குறித்த செய்திகளை நிராகரிப்பாளர்களுக்கு உளவறிவிப்பது பெரும் பாவங்களில் ஒன்றாகும். info

• عداوة الكفار عداوة مُتَأصِّلة لا تؤثر فيها موالاتهم.
2. நிராகரிப்பாளர்களின் பகைமை அடிப்படையான பகமையாகும். அதில் நட்பு எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. info

• استغفار إبراهيم لأبيه لوعده له بذلك، فلما نهاه الله عن ذلك لموته على الكفر ترك الاستغفار له.
3. இப்ராஹீம் (அலை) தனது தந்தைக்கு பாவமன்னிப்புத் தேடுவதாக அவரிடம் வாக்களித்ததனால்தான் அவ்வாறு பாவமன்னிப்புத் தேடினார்கள். அவர் நிராகரிப்பில் மரணித்ததனால் அதனை விட்டும் அவரை அல்லாஹ் தடுத்தபோது அவருக்காக பாவமன்னிப்புத் தேடுவதை விட்டுவிட்டார்கள். info