Translation of the Meanings of the Noble Qur'an - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran

external-link copy
132 : 6

وَلِكُلٍّ دَرَجٰتٌ مِّمَّا عَمِلُوْا ؕ— وَمَا رَبُّكَ بِغَافِلٍ عَمَّا یَعْمَلُوْنَ ۟

6.132. ஒவ்வொருவருக்கும் அவர்களின் செயல்களுக்கேற்ப படித்தரங்கள் உண்டு. குறைவான அளவில் தீமை செய்தோரும் அதிகமான அளவில் தீமை செய்தோரும் சமமாக மாட்டார்கள். மேலும் பின்பற்றியவர்களும் பின்பற்றப்பட்டவர்களும் சமமாக மாட்டார்கள். அதே போன்று நன்மை செய்வோரின் நன்மைகளும் சமமாக மாட்டா. அவர்கள் செய்துகொண்டிருப்பவற்றை உம் இறைவன் கவனிக்காமல் இல்லை. மாறாக அவற்றை அவன் அறிந்திருக்கிறான். எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவர்களின் செயல்களுக்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான். info
التفاسير:
Benefits of the verses in this page:
• تفاوت مراتب الخلق في أعمال المعاصي والطاعات يوجب تفاوت مراتبهم في درجات العقاب والثواب.
1. அடியார்கள் செய்யும் நன்மை, பாவங்களின் ஏற்றத்தாழ்வுக்கேற்ப அவர்களுக்குக் கிடைக்கும் நற்கூலி, தண்டனைகளின் படித்தரங்களிலும் ஏற்றத்தாழ்வு காணப்படும். info

• اتباع الشيطان موجب لانحراف الفطرة حتى تصل لاستحسان القبيح مثل قتل الأولاد ومساواة أصنامهم بالله سبحانه وتعالى.
3. ஷைத்தானைப் பின்பற்றுவது அவலட்சனமானவற்றையும் அழகாகக் கருதும் அளவிற்கு மனித இயல்பை மாற்ற வல்லதாகும். அவற்றுக்கான உதாரணமே பிள்ளைகளைக் கொல்வதும் தமது சிலைகளை அல்லாஹ்வுடன் சமமாக்குவதும். info