Translation of the Meanings of the Noble Qur'an - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran

external-link copy
14 : 59

لَا یُقَاتِلُوْنَكُمْ جَمِیْعًا اِلَّا فِیْ قُرًی مُّحَصَّنَةٍ اَوْ مِنْ وَّرَآءِ جُدُرٍ ؕ— بَاْسُهُمْ بَیْنَهُمْ شَدِیْدٌ ؕ— تَحْسَبُهُمْ جَمِیْعًا وَّقُلُوْبُهُمْ شَتّٰی ؕ— ذٰلِكَ بِاَنَّهُمْ قَوْمٌ لَّا یَعْقِلُوْنَ ۟ۚ

59.14. -நம்பிக்கையாளர்களே!- கோட்டைகளில் இருந்துகொண்டோ அல்லது சுவருக்குப் பின்னாலிருந்தோ தவிர யூதர்கள் ஒன்றுசேர்ந்து உங்களுடன் போரிட மாட்டார்கள். அவர்களின் கோழைத்தனத்தினால் அவர்களால் உங்களை நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாது. அவர்களிடையே காணப்படும் பகையோ மிகக் கடுமையானது. நிச்சயமாக அவர்கள் ஒரே கருத்தில் ஒரணியில் ஒற்றுமையாக இருப்பதுபோல் நீர் எண்ணுவீர். உண்மையில் அவர்களின் உள்ளங்களோ பிளவுபட்டுக் கிடக்கின்றன. அவர்களிடையே காணப்படும் இந்த பகைமைக்கான காரணம், அவர்கள் விளங்கிக் கொள்ளாதவர்களாக இருக்கிறார்கள் என்பதேயாகும். அவர்கள் விளங்கியிருந்தால் சத்தியத்தை அறிந்து அதனைப் பின்பற்றியிருப்பார்கள். அதிலே முரண்பட்டிருக்க மாட்டார்கள். info
التفاسير:
Benefits of the verses in this page:
• رابطة الإيمان لا تتأثر بتطاول الزمان وتغير المكان.
1. ஈமானால் ஏற்படும் தொடர்பு காலம் செல்வதாலோ, இடம் மாறுவதாலோ மாற்றமடையாது. info

• صداقة المنافقين لليهود وغيرهم صداقة وهمية تتلاشى عند الشدائد.
2. யூதர்கள், ஏனையவர்களுடனான நயவஞ்சகர்களின் நட்பு துன்பங்களின் போது மறைந்துவிடும் போலியான நட்பாகும். info

• اليهود جبناء لا يواجهون في القتال، ولو قاتلوا فإنهم يتحصنون بِقُرَاهم وأسلحتهم.
3. யூதர்கள் போரில் நேருக்கு நேர் மோதமுடியாத கோழைகள். அவர்கள் போரிட்டால் நிச்சயமாக அவர்கள் தமது கோட்டைகள் மற்றும் ஆயதங்களின் மூலம் தம்மை பாதுகாத்துக்கொள்வார்கள். info