Translation of the Meanings of the Noble Qur'an - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran

external-link copy
6 : 58

یَوْمَ یَبْعَثُهُمُ اللّٰهُ جَمِیْعًا فَیُنَبِّئُهُمْ بِمَا عَمِلُوْا ؕ— اَحْصٰىهُ اللّٰهُ وَنَسُوْهُ ؕ— وَاللّٰهُ عَلٰی كُلِّ شَیْءٍ شَهِیْدٌ ۟۠

58.6. அல்லாஹ் அவர்கள் அனைவரையும் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பும் நாளில் அவர்களில் யாரையும் விட்டுவைக்க மாட்டான். அவர்கள் உலகில் செய்த மோசமான செயல்களை அவர்களுக்கு அறிவிப்பான். அவன் அவற்றை கணக்கிட்டு வைத்துள்ளான். அவர்களின் செயல்களில் எதுவும் அவனுக்குத் தவறாது. அவர்கள் மறந்த செயல்களையும் அவர்களின் பதிவேடுகளில் எழுதப்பட்டிருப்பதை அவர்கள் காண்பார்கள். அவை சிறியதோ, பெரியதோ எதையும் விட்டுவைக்காது. அனைத்தையும் கணக்கிட்டு விடும். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன். அவர்களின் செயல்களில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. info
التفاسير:
Benefits of the verses in this page:
• لُطْف الله بالمستضعفين من عباده من حيث إجابة دعائهم ونصرتهم.
1. பிரார்த்தனைகளுக்கு பதிலளித்தல், உதவி செய்தல் என்பவற்றின் மூலம் அல்லாஹ் பலவீனமான தன் அடியார்களின்மீது கருணை காட்டுகிறான். info

• من رحمة الله بعباده تنوع كفارة الظهار حسب الاستطاعة ليخرج العبد من الحرج.
2.தனது அடியார்களின் மீதான அல்லாஹ்வின் கருணைதான் அடியான் சங்கடப்படக்கூடாது என்பதற்காக ழிஹாருக்கு சக்திக்கேற்ப பரிகாரங்களை வகைப்படுத்தியுள்ளான். info

• في ختم آيات الظهار بذكر الكافرين؛ إشارة إلى أنه من أعمالهم، ثم ناسب أن يورد بعض أحوال الكافرين.
3. ழிஹாருடைய வசனங்களின் முடிவில் நிராகரிப்பாளர்களைக் குறிப்பிடுவதன் மூலம் இச்செயல் அவர்களுக்குரியது எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பின்னர் நிராகரிப்பாளர்களின் சில நிலமைகளைக் குறிப்பிடுவதும் அதற்கு பொருத்தமாக அமைந்துள்ளது. info