Translation of the Meanings of the Noble Qur'an - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran

external-link copy
20 : 57

اِعْلَمُوْۤا اَنَّمَا الْحَیٰوةُ الدُّنْیَا لَعِبٌ وَّلَهْوٌ وَّزِیْنَةٌ وَّتَفَاخُرٌ بَیْنَكُمْ وَتَكَاثُرٌ فِی الْاَمْوَالِ وَالْاَوْلَادِ ؕ— كَمَثَلِ غَیْثٍ اَعْجَبَ الْكُفَّارَ نَبَاتُهٗ ثُمَّ یَهِیْجُ فَتَرٰىهُ مُصْفَرًّا ثُمَّ یَكُوْنُ حُطَامًا ؕ— وَفِی الْاٰخِرَةِ عَذَابٌ شَدِیْدٌ ۙ— وَّمَغْفِرَةٌ مِّنَ اللّٰهِ وَرِضْوَانٌ ؕ— وَمَا الْحَیٰوةُ الدُّنْیَاۤ اِلَّا مَتَاعُ الْغُرُوْرِ ۟

57.20. அறிந்துகொள்ளுங்கள், நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கை உடல்களுக்கான விளையாட்டும் உள்ளங்களுக்கான வேடிக்கையும் நீங்கள் அலங்கரித்துக் கொள்ளும் அலங்காரமும் உங்களிடையே அதிகமான செல்வங்களை, குழந்தைகளை, இன்பம், ஆட்சியதிகாரத்தைக்கொண்டும் பெருமையடிப்பதுமாகும். அதற்கு உதாரணம் மழையைப் போன்றதாகும். அதனால் விளையும் பயிர்கள் விவசாயியை மகிழ்ச்சிக்குள்ளாக்குகின்றன. பின்னர் அப்படியே இருக்காமல் இந்த பசுமையான பயிர்கள் காய்ந்துவிடுகின்றன. -பார்ப்பவனே!- பசுமையாக இருந்ததன் பின் மஞ்சள் நிறமாகி விடுவதை நீ காண்கின்றாய். பின்னர் அல்லாஹ் அவற்றை குப்பை கூளங்களாக்கி விடுகின்றான். மறுமையில் நிராகரிப்பாளர்களுக்கும் நயவஞ்சகர்களுக்கும் கடுமையான வேதனையும் நம்பிக்கைகொண்ட அல்லாஹ்வின் அடியார்களின் பாவங்களுக்கு மன்னிப்பும் அவனது திருப்தியும் உண்டு. இவ்வுலக வாழ்க்கை நிலையற்ற அழியக்கூடிய பொருளேயன்றி வேறில்லை. யார் மறுமையின் இன்பங்களைவிடுத்து அழியக்கூடிய இவ்வுலக வாழ்வை தேர்ந்தேடுத்துக் கொண்டாரோ அவர்தான் ஏமாற்றத்திற்கும் இழப்பிற்கும் உள்ளானவர் ஆவார். info
التفاسير:
Benefits of the verses in this page:
• الزهد في الدنيا وما فيها من شهوات، والترغيب في الآخرة وما فيها من نعيم دائم يُعينان على سلوك الصراط المستقيم.
1. உலகிலும் அதன் இச்சைகளிலும் பற்றற்று இருப்பது, மறுமையிலும் அங்குள்ள நிரந்தர இன்பத்திலும் நாட்டம்கொள்வது ஆகிய இரண்டும் நேர்வழியில் செல்வதற்கு உதவக்கூடிய காரணிகளாக இருக்கின்றன. info

• وجوب الإيمان بالقدر.
2. விதியை நம்புவதன் அவசியம். info

• من فوائد الإيمان بالقدر عدم الحزن على ما فات من حظوظ الدنيا.
3. உலகில் இழந்தவற்றை எண்ணி மனிதன் கவலைகொள்ளமல் இருப்பது விதியின்மீது நம்பிக்கைகொண்டதன் பயனில் உள்ளதாகும். info

• البخل والأمر به خصلتان ذميمتان لا يتصف بهما المؤمن.
4. கஞ்சத்தனமும் அதன்படி செயல்பட ஏவுவது போன்ற இரண்டு பண்புகளும் மோசமான பண்புகளாகும். நம்பிக்கையாளன் இவ்விரண்டையும்கொண்டு வர்ணிக்கப்பட மாட்டான். info