Translation of the Meanings of the Noble Qur'an - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran

external-link copy
10 : 57

وَمَا لَكُمْ اَلَّا تُنْفِقُوْا فِیْ سَبِیْلِ اللّٰهِ وَلِلّٰهِ مِیْرَاثُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ— لَا یَسْتَوِیْ مِنْكُمْ مَّنْ اَنْفَقَ مِنْ قَبْلِ الْفَتْحِ وَقٰتَلَ ؕ— اُولٰٓىِٕكَ اَعْظَمُ دَرَجَةً مِّنَ الَّذِیْنَ اَنْفَقُوْا مِنْ بَعْدُ وَقَاتَلُوْاؕ— وَكُلًّا وَّعَدَ اللّٰهُ الْحُسْنٰی ؕ— وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِیْرٌ ۟۠

57.10. அல்லாஹ்வின் பாதையில் செலவழிக்க விடாமல் உங்களைத் தடுப்பது எது? வானங்கள் மற்றும் பூமிக்கு அவனே சொந்தக்காரனாவான். -நம்பிக்கையாளர்களே!- உங்களில் மக்கா வெற்றிக்கு முன்னரே அல்லாஹ்வின் திருப்தியை நாடி தங்களின் செல்வங்களை செலவு செய்து இஸ்லாத்தின் வெற்றிக்காக நிராகரிப்பாளர்களுடன் போரிட்டவர்களும், மக்கா வெற்றிக்குப் பிறகு செலவு செய்தவர்களும் அல்லாஹ்வின் பாதையில் போரிட்டவர்களும் சமமாகமாட்டார்கள். மக்கா வெற்றிக்கு முன்னர் அல்லாஹ்வின் பாதையில் தங்களின் செல்வங்களை செலவு செய்தவர்களும் போரிட்டவர்களும் அதற்குப் பின் செலவளித்து போரிட்டவர்களை விட அவனிடத்தில் உயர்ந்த படித்தரங்களைப் பெற்றவர்களாவர். அல்லாஹ் இரு பிரிவினருக்கும் சுவனத்தை வாக்களித்துள்ளான். அவன் நீங்கள் செய்யக்கூடியதை நன்கறிந்தவன். உங்களின் செயல்களில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவன் அவற்றிற்கேற்ப உங்களுக்குக் கூலி வழங்குவான்.
info
التفاسير:
Benefits of the verses in this page:
• المال مال الله، والإنسان مُسْتَخْلَف فيه.
1. செல்வம் அல்லாஹ்வுக்குரியது. மனிதன் அதற்கு பிரதிநிதியாகத்தான் ஆக்கப்பட்டுள்ளான். info

• تفاوت درجات المؤمنين بحسب السبق إلى الإيمان وأعمال البر.
2. நம்பிக்கை, நற்செயல்கள் ஆகியவற்றின்பால் முந்துவதற்கேற்ப நம்பிக்கையாளர்களின் படித்தரங்கள் வேறுபடும். info

• الإنفاق في سبيل الله سبب في بركة المال ونمائه.
3. அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வது செல்வங்களில் பரக்கத்தும் அபிவிருத்தியும் ஏற்படக் காரணமாகும். info