Translation of the Meanings of the Noble Qur'an - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran

external-link copy
88 : 5

وَكُلُوْا مِمَّا رَزَقَكُمُ اللّٰهُ حَلٰلًا طَیِّبًا ۪— وَّاتَّقُوا اللّٰهَ الَّذِیْۤ اَنْتُمْ بِهٖ مُؤْمِنُوْنَ ۟

5.88. அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய அனுமதிக்கப்பட்ட தூய்மையான உணவுகளை உண்ணுங்கள். அபகரிக்கப்பட்ட அல்லது அறுவறுக்கத்தக்கது போன்ற தடைசெய்யப்பட்டவற்றை உண்ணாதீர்கள். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். அவன் மீதுதான் நீங்கள் நம்பிக்கைகொண்டுள்ளீர்கள். அவன் மீதான உங்களின் நம்பிக்கை அவனை அஞ்சுவதைக் கட்டாயமாக்கிவிடுகிறது. info
التفاسير:
Benefits of the verses in this page:
• الأمر بتوخي الطيب من الأرزاق وترك الخبيث.
1. தூய்மையான உணவுகளையே தேடுமாறும் கெட்ட உணவுகளை விட்டு விடுமாறும் கட்டளையிடப்பட்டுள்ளது. info

• عدم المؤاخذة على الحلف عن غير عزم للقلب، والمؤاخذة على ما كان عن عزم القلب ليفعلنّ أو لا يفعلنّ.
2. உள உறுதியின்றி செய்யப்படும் சத்தியங்களுக்கு குற்றமில்லை. செய்வேன் அல்லது செய்யமாட்டேன் என உளப்பூர்வமாக செய்யப்படும் சத்தியங்களுக்குத்தான் குற்றம்பிடிக்கப்படும். info

• بيان أن كفارة اليمين: إطعام عشرة مساكين، أو كسوتهم، أو عتق رقبة مؤمنة، فإذا لم يستطع المكفِّر عن يمينه الإتيان بواحد من الأمور السابقة، فليكفِّر عن يمينه بصيام ثلاثة أيام.
3. சத்தியத்தை முறித்ததற்கான பரிகாரம், பத்து ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் அல்லது ஆடை வழங்க வேண்டும் அல்லது நம்பிக்கைகொண்ட ஒரு அடிமையை விடுதலை செய்ய வேண்டும். ஒருவர் மேற்குறிப்பிட்ட எதையும் செய்ய சக்திபெறவில்லையெனில் மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும். info

• قوله تعالى: ﴿... إنَّمَا الْخَمْرُ ...﴾ هي آخر آية نزلت في الخمر، وهي نص في تحريمه.
4. மதுபானம் சம்பந்தமான இங்கு இடம்பெற்றுள்ள வசனமே மதுபானம் சம்பந்தமாக இறங்கிய இறுதி வசனமாகும். இது மதுபானத்தை தெளிவாகவும் முழுமையாகவும் தடுக்கும் வசனமாகும். info